இன்னொரு தடவை இப்படி ஒரு
அருமையான
வருடம் அமையுமான்னா கஷ்டம் தான்!
"நான்" என்னும் திமிரை சுக்குநூறாக்கிய வருடம்.
பாக்கெட்ல 2000 ரூபாய் நோட்டு எத்தனை இருக்குன்னு தெரியாமல் இருந்த என்னை, 20 ரூபாய்க்கு பாப்பா உண்டியலை உடைக்க வெச்சது இந்த ஆண்டின் சிறப்பு!
எத்தனை கோடி லோன் தேவைன்னு கூப்பிட்டு கூப்பிட்டு குடுத்த வங்கிகள் இ.எம்.ஐ கட்டச்சொல்லி காறிதுப்பிய வருடம்.
எதிர்காலத்தில் ஆறுமாசம் நான் படுக்கையில் இருந்தால் என் குடும்பம் என்னவாகும் என உணர்த்திய வருடம்.
இந்தனை நாள் என்னை சுற்றியிருந்து சுரண்டிக்கொண்டிருந்த உறவுகள், நட்புகளில் உண்மையான உறவுகள், நட்புகள் ஒரு சதவிகிதத்திற்கும் கீழ் தான் என அடையாளம் காட்டிய வருடம்.
என்னுடைய ஆரம்பபுள்ளிக்கே சென்றுவிட வைத்த வருடம்.
உங்களது விஞ்ஞானமும், நீங்களும் இயற்க்கையின் முன் தூசுடான்னு செவுள்ல ஒரு அப்பு அப்பிய வருடம்.
எதிர்வரும் ஆண்டுகளில் எப்படி வாழணும்ன்னு என்னையே எனக்கு கண்ணாடியாய் காட்டிய வருடம்.
வாழ்க்கை ஓட்டத்தில் ஓட்டமாய் ஓடி, வெற்றிக்களிப்பில் கால்மேல் கால்போட்டு உக்கார்ந்த தருணத்தில்,
உன்னுடைய இலக்கினை அடைய நீ ஓட வேண்டிய தூரம் இன்னும் நெடுந்தூரத்தில் உள்ளது என உணர்த்திய வருடம்.
ஆயிரம் ஆன்மீகவாதிகள், வழிகாட்டிகளால் புரியவைக்க முடியாததை ஆறே மாதத்தில் ஆணி அடிச்ச மாதிரி பதிய வைத்த வருடம்.
ஆண்டின் துவக்கத்தில் எந்த நிலையில் இருந்தேனோ , ஆண்டின் இறுதியிலும் அதே இடத்தில் தான் இருக்கின்றேன்!
தொலைத்தது அதிகம், எடுத்தது எதுவும் இல்லை!
ஆனால் இடைப்பட்ட காலங்களில் ஒரு கீதா உபதேசமே நடத்திவிட்டாய்!
2020ம் வருடமே நீயே என் வாழ்வின் புதிய அடித்தளமாகி விட்டாய்.
மீண்டும் ஒருமுறை என்னை பிறக்க வைத்து விட்டாய்!
நீ வசந்த காலமல்ல!
சோதனைகளை தந்த வேதனை காலம்தான்.
ஆனாலும் நான் தலைவணங்க வேண்டிய என் வருங்காலம்.
No comments:
Post a Comment