Thursday, December 1, 2022

இனி இட்லி செய்ய அரிசி உளுந்து எதுவுமே தேவையில்லை கொஞ்சம் பாசிப்பருப்பு இருந்தால் போதும் சுவையான இட்லி ரெடி. ஒருமுறை செய்து பாருங்க இனி அடிக்கடி இந்த இட்லி தான் செய்விங்க.

 தென்னிந்தியர்களின் பாரம்பரிய உணவே இந்த இட்லி தான். குழந்தைக்கு கொடுக்கும் முதல் உணவில் இருந்து வயதானவர்கள் கொடுக்கும் உணவு வரை எல்லாவற்றிலும் முதலிடம் இந்த இட்லிக்கு தான் உண்டு. இட்லியை வேக வைத்து உண்பதால் ஆரோக்கியமானது மட்டுமில்லாமல் எளிதில் ஜீரணமாக கூடியதாகவும் இருக்கும். இந்த இட்லியை இப்பொழுதெல்லாம் ஜவ்வரிசி, ரவை, சேமியா, இதெல்லாம் கூட செய்கிறார்கள். அந்த வகையில் இப்பொழுது நாம் பாசிப்பருப்பை வைத்து செய்யும் இட்லியை தான் பார்க்க போகிறோம். இட்லி என்றாலே அரிசி ,உளுந்து இரண்டையும் ஊற வைத்து, அதன் பிறகு அரைத்து புளிக்க வைத்து செய்வது தான் நம் பாரம்பரியமான முறை. இந்த முறையில் அப்படி ஏதும் செய்யாமல் வெறும் பாசிப்பருப்பை மட்டுமே வைத்து சில மணி நேரத்திற்குள்ளாகவே இட்லி தயார் செய்து விடலாம். அந்த முறையை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம் வாங்க. தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு – 1 கப், தயிர் – 1/2 கப், பச்சை மிளகாய் – 2, கடுகு – 1/4 ஸ்பூன், கேரட் துருவியது – 1/4 கப், இஞ்சி – 1 துண்டு, கருவேப்பிலை – 1 கொத்து, நெய் – 1டேபிள் ஸ்பூன், உப்பு – 1/4 டீஸ்பூன். இந்த இட்லி செய்வதற்கு முன் பாசிப்பருப்பை மூன்று மணி நேரம் வரை நன்றாக ஊற வைத்து அதன் பிறகு கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து ஒரு பவுலில் தனியாக ஊற்றி இத்துடன் தயிர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து அதில் நெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்த உடன், பச்சை மிளகாயும், இஞ்சியும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு துருவிய கேரட்டை சேர்த்து அதையும் லேசாக வதக்கி அரைத்து வைத்த பாசிப்பருப்பு மாவில் சேர்த்து கலந்து கொஞ்சம் ஈனோ உப்பு சேர்த்து நன்றாக அடித்து வைத்து விடுங்கள். பத்து நிமிடம் கழித்து அடுப்பை பற்று வைத்து இட்லி பாத்திரம் வைத்து தண்ணீர் சூடானவுடன் நீங்கள் எப்போதும் போல இட்லி ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு எந்த வகை சட்னி என்றாலும் நன்றாகவே இருக்கும். பருப்பு,காய் சேர்த்து செய்யும் இந்த இட்லி குழந்தைகளுக்கு நல்ல ஒரு ஆரோக்கியமான உணவு. இதை சைட் டிஷ் இல்லாமல் வெறும் இட்லியாக சாப்பிட்டால் கூட நன்றாக தான் இருக்கும். நீங்களும் உங்கள் வீட்டில் இது போல உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்துப் பாருங்கள்.

_*படத்தை நன்றாகப் பாருங்கள்.*_

 சிலவேளை முதல் பார்வையில் ஏமாற்றமடைவோம்.

இங்கு தெரிவது மனிதர்கள் என நினைப்போம்.
ஆனால் உண்மையில் மனிதர்களல்ல.
தூண்களுக்கிடையில் உள்ள இடங்கள்தான் மனிதர்கள் போன்று காட்சியளிக்கின்றன.
இப்படம் இரண்டு விடயங்களை தெளிவாக உணர்த்துகின்றது:
1- எதிலும், எவர் விடயத்திலும் பார்த்தவுடன் எந்த முடிவுக்கும் வரக்கூடாது.
2- இங்கு தூண்களிடையே தென்படும் வெற்றிடங்களை மனிதர்களென நினைப்பது போன்றுதான் வாழ்க்கையிலும் சிலரை நாம் மனிதர்களென நினைத்துக் கொள்கிறோம்.
ஆனால் அவர்களது அருகில் சென்று பார்க்கும்போதுதான் அவர்கள் மனித உருவங்கள் மட்டும்தான் என்பதை புரிந்து கொள்கிறோம்.
ஒழுக்கம்,நீதி,நேர்மை,உண்மை போன்ற மனிதர்களுக்குரிய குணாதிசயங்கள் எதுவுமே அவர்களிடமில்லை...
பெரும் கவலை.
இறைவன் நேர்வழியை வழங்கட்டுமாக...
No photo description available.

*தமிழை கொன்றோம்.*

 மனைவியை ஒய்ஃப் என்றோம்

வாழ்க்கையை லைஃப் என்றோம்
கத்தியை நைஃப் என்றோம்
புத்தியை புதைத்தே நின்றோம் !
அத்தையை ஆன்ட்டி என்றோம்
அவள் மகளை ஸ்வீட்டி என்றோம்
கடமையை டுயூட்டி எனறோம்
காதலியை பியூட்டி என்றோம்!
காதலை லவ்வென்றோம்
பசுவை கவ்வென்றோம்
ரசிப்பதை வாவ் என்றோம்
இதைதானே தமிழாய் சொன்னோம்!
முத்தத்தை கிஸ் என்றோம் பேருந்தை பஸ் என்றோம்
அளவை சைஸ் என்றோம்
அழகை நைஸ் என்றோம் !
மன்னிப்பை சாரி என்றோம்
புடவையை சேரி என்றோம்
ஆறுதலாய் டோன்ட்வொரி என்றோம்
தமிழ் வாயால் ஆங்கிலம் தின்றோம்!
மடையனை லூசு என்றோம்
வாய்ப்பை சான்சு என்றோம்
மோகத்தை ரொமான்ஸ் என்றோம்
தமிழை அறவே மறந்தோம்!
அமைதியை சைலன்ஸ் என்றோம்
சண்டையை வயலன்ஸ் என்றோம்
தரத்தை ஒரிஜினல் என்றோம்
தாய் மொழியை முழுதும் கொன்றோம்..!✍🏼🌹

டிசம்பர் 1 முதல் 4 நகரங்களில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் .

 மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2022-23 பட்ஜெட் உரையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கியின் ஆதரவுடன் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தார். இதற்கிடையே, குறிப்பிட்ட சில பயன்பாட்டிற்காக சோதனை அடிப்படையில் டிஜிட்டல் ரூபாய் அல்லது இ-ரூபாய் நோட்டுக்களை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. டிஜிட்டல் ரூபாய் நோட்டுக்கள் குறித்த பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சோதனை முறையில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட உள்ளது என தெரிவித்தது. இந்நிலையில், டிஜிட்டல் ரூபாய் வெளியீடு குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாயும் சில்லறைப் பணப் பரிவர்த்தனைகளுக்காக டிசம்பர் 1-ம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் e₹-R என்ற குறியீடு டிஜிட்டல் ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக எஸ்பிஐ, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் ஆகிய நான்கு வங்கிகளில் அறிமுகமாகிறது. மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வர் நகரங்களில் டிசம்பர் 1-ம் தேதியும், அகமதாபாத், கவுகாத்தி, இந்தூர், லக்னோ, பாட்னா, சிம்லாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதன்மூலம் நாளை மறுநாள் முதல் ரூ. 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500, 2000 மதிப்பிலான டிஜிட்டல் கரன்சிகள் புழக்கத்திற்கு வரவுள்ளன. 4 நகரங்களில் நடைபெறும் சோதனை ஓட்டத்தில் 8 வங்கிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

*திருவோணம்* - *திருவெள்ளறை புண்டரீகாக்ஷன் திவ்யதேசம்*

 மூலவர்:

புண்டரீகாக்ஷன்
(செந்தாமரை கண்ணன்)
தாயார்:
பங்கயற்செல்வி
மங்களாசாசனம்:
பெரியாழ்வார்,
திருமங்கையாழ்வார்
இத்தலம் திருவரங்கத்திற்கும் பழமையானது என்பதால் *ஆதிவெள்ளறை*!
வெண்மையான பாறையினாலான மலை என்ற பொருளில் வெள்ளறை என போற்றப்பட்டு *திருவெள்ளறை* என்று ஆனது!
இக்கோயிலில் தை முதல் ஆனி வரை *உத்தராயண வாசல்* வழியாகவும், ஆடி முதல் மார்கழி வரை *தக்ஷிணாயண வாசல்* வழியாகவும் எம்பெருமானை சேவிக்கலாம்!
சிபி சக்கரவர்த்திக்கு "ஸ்வேத வராகனாக" இவ்வெம்பெருமான் காட்சி அளித்ததால் *ஸ்வேதபுரி நாதன்* என்றும், இத்தலத்திற்கு *ஸ்வேதபுரி* என்றும் பெயர்!
இங்கு ஸ்ரீதேவி, பூதேவி, சூர்ய-சந்திரர்கள், ஆதிசேஷன் ஆகியோர் மனித உருவில் வந்து எம்பெருமான் அருகில் நின்று கைங்கர்யம் செய்வது தனிச்சிறப்பு!
"இந்திரனோடு பரமன் ஈசன் இமையவர் எல்லாம்,
மந்திர மாமலர் கொண்டு மறைந்தவராய் வந்து நின்றார்,
சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளறை நின்றாய்"
-என்று போற்றுகிறார் பெரியாழ்வார்!
🙏🙏
No photo description available.

Tuesday, November 29, 2022

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்குகளில் சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு .

 சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம், தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்குகள், ஐகோர்ட்டில் நடந்து வந்தன. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தன் மீதான மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ், நீதிபதி டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.பி.வேலுமணி தரப்பில், "ஒளிவு மறைவின்றி டெண்டர் கோரப்பட்டது. இதில் தனக்கு எந்த பங்கும் இல்லை" எனவும் முதற்கட்ட விசாரணைக்கு மட்டுமே அனுமதி கோரப்பட்டதாகவும், வழக்கு பதிய அனுமதி பெறவில்லை என்றும் வாதிடப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம், டெண்டர் முறைகேடு புகார்கள் தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருந்தபோது மத்திய கணக்கு தணிக்கைக்குழு அறிக்கை வெளியானதாகவும், அதில் ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார். முதல் தகவல் அறிக்கை என்பது வழக்கின் ஆரம்பகட்டம் என்றும், ஆரம்பகட்டத்திலேயே வழக்கை ரத்து செய்யக்கோர முடியாது என்றும் தெளிவுபடுத்தினார். இந்த வழக்கில் மற்றொரு புகார்தாரரான அறப்போர் இயக்கம் தரப்பில் வாதங்களை முன்வைக்க ஏதுவாக விசாரணையை நவம்பர் மாதம் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழக்கு நவம்பர் 8-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்துள்ளதாக வேலுமணி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் தவறு என்றும், கோவையில் 47 டெண்டர்கள் அமைச்சரின் உறவினர்களுக்குச் சொந்தமான இரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன என அறப்போர் இயக்கம் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு, சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்குகளின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர் இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்குகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது.

இனி உங்க பிரிட்ஜில் உள்ள ஐஸ் கட்டிய தூக்கி வீணா கீழே போடாதீங்க. அதை வெச்சு என்னென்ன செய்யலாம்னு தெரிஞ்சா, இனி நீங்க பிரிட்ஜி ஃபுல்லா கூட ஐஸ் கட்டியா வச்சுப்பீங்க. வாங்க அது என்னன்னு தெரிஞ்சுக்கலாம்.

 நம்ம இதுவரைக்கும் பிரிட்ஜ் காய்கறி, பழம், கூல் ட்ரிங்க்ஸ், இது போல வைக்கிறதுக்கு தான் பயன்படுத்தியிருக்கோம். ஆனா இந்த பிரிட்ஜ்ல வர ஐஸ்கட்டிய எதுக்கெல்லாம் பயன்படுத்தலாம் தெரிஞ்சுகிட்ட பிறகு, நம்ம பிரிட்ஜில் பொருட்களை வைத்து யூஸ் பண்ணுவதை விட மத்த பயன்பாட்டுக்கு இந்த ஐஸ் கட்டி அவ்வளவு உதவியா இருக்கு.அதை ஒவ்வொன்னா இந்த பதிவில் பாக்கலாம் பதிவை படித்து முடித்த பிறகு நீங்களே நினைப்பீங்க ஐஸ்கிரீம் கியூப் வச்சு இவ்ளோ விஷயம் இருக்கா அப்படின்னு சரி வாங்க அது என்ன என்ன டிப்ஸ் என்று பார்த்திடலாம். முதல்ல குக்கர்ல சாதம் வடிச்சு இன்னொரு பாத்திரத்துக்கு மாற்றும் போது குக்கரில் அந்த சாதம் ஒட்டி கொண்டு தேய்க்கவே கஷ்டமா இருக்கும். இது போல் ஆகாமல் இருக்க, சாப்பாட்டுக்கு அரிசி ஊற வைக்கும் போதே அதில் நாலு ஐஸ் கியூப் சேர்த்து ஊற வைத்து விடுங்கள். அதன் பிறகு எப்பவும் போல நீங்க சாதம் வைத்து பாருங்கள் குக்கரில் ஒட்டாது.  கண்ணாடி பாட்டில் வாங்கும் போது இருக்கும் பளபளப்பு கொஞ்ச நாள் யூஸ் பண்ண உடனே அந்த கலர் கொஞ்சம் மங்களாக மாறி விடும். அப்படி மாறின பாட்டிலில் இந்த ஐஸ் கியூபையும், கல் உப்பு சேர்த்து நன்றாக குலுக்கி விட்டு கழுவி பாருங்க புதுசா கடையிலிருந்து வாங்கி வந்த பாட்டிலுக்கும் இதுக்கும் வித்தியாசமே தெரியாது. இட்லிக்கு கொஞ்சமாக மாவு அரைக்கும் போது மிக்ஸிலேயே போட்டு எடுத்திடுவோம். அப்படி மிக்ஸியில் போடும் போது மிக்ஸி உடனே சூடாகி மாவு கெட்டியா ஆயிடும் இல்லனா, இட்லி சாப்டா வராது. அதுக்கு உளுந்து அரிசி இந்த ரெண்டு அரைக்கும் போதும் கொஞ்சம் ஐஸ் க்யூப் சேர்த்து அரைத்தால் மாவு சாஃப்டா இருக்கும். சீக்கிரம் புளிக்காது அதே நேரத்தில் இட்லி கல்லு போல ஆகாது. நம்ம குக்கரில் சீக்கிரம் வேலை முடியணும் செஞ்சுருவோம். ஆனா விசில் அடங்கின பிறகு தான் எடுக்கணும் அப்படிங்கிறதாலே சமைச்சு வச்சு அதுக்காக ஒரு பத்து நிமிஷமாவது நம்ம வெயிட் பண்ணுவோம். இனி அப்படி வெயிட் பண்ண தேவையே இல்லை. ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணி வச்சு ஐஸ் க்யூப் போட்டு வச்சுக்கோங்க, குக்கரை அந்த தண்ணில வச்சிருங்க அவ்வளவு தான் உடனே விசில் இறங்கிடும். நீங்க மூடியை திறந்து விட்டு வேக வைத்ததை எடுத்துரலாம். இதே முறையில் வேக வைத்த முட்டை உரிக்கவும் பயன்படுத்திக்கலாம். அதை உரிக்க கொஞ்ச நேரம் ஆற விடுவோம். அப்படி இல்லாம வேக வச்சதை எடுத்து ஸ்ட்ரைட்டா ஐஸ் கியூப் போட்டு தண்ணில போட்டுங்க முட்டை ஓடும் ரொம்ப ஈஸியா அழகா தனியா வந்துடும் நேரமும் மிச்சமாகும். இப்போதெல்லாம் ஸ்டோன் வொர்க் செய்த துணிகள் அதிகமாக வந்து விட்டது. ஸ்டோன் விழுந்த பிறகு அதில் ஒட்டி இருக்கிற கம்மெல்லாம் துணியிலேயே ஒட்டிட்டு அசிங்கமா இருக்கும். அந்த மாதிரி இடத்துல இருக்க கம் எடுக்க ஒரு ஐஸ் க்யூப்பை காட்டன் துணில சுத்தி கம் இருக்கும் இடத்தில் அழுத்தி தேய்த்தால் அந்த கம் தனியாக வந்து விடும். நம்ம தோசை ஊற்றும் போது கல்லு சில சமயம் ரொம்ப சூடாகி விடும். அப்படி ஆகிவிட்டால் தோசை ஊற்றவே வராது. அதுக்கு நிறைய டிப்ஸ் இருக்கு ஆனா அதுக்கு இந்த ஐஸ் க்யூபும் யூஸ் ஆகும். இதே போல தான் ஐஸ்கிரீமை ஒரு காட்டன் துணியில வச்சுட்டு கல்லு மேல தேச்சீங்கனா உடனே கல்லு நார்மல் சூடுக்கு வந்துடும். அடுத்த தோசையை சூப்பரா ஊத்திடலாம். இனி நீங்களும் இந்த ஐஸ் கட்டிய வைச்சு உங்க சமையல் வேலையை ரொம்ப ஜில்லனு சீக்கிரம் முடிச்சுடுங்க.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...