Thursday, December 1, 2022

டிசம்பர் 1 முதல் 4 நகரங்களில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் .

 மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2022-23 பட்ஜெட் உரையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கியின் ஆதரவுடன் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தார். இதற்கிடையே, குறிப்பிட்ட சில பயன்பாட்டிற்காக சோதனை அடிப்படையில் டிஜிட்டல் ரூபாய் அல்லது இ-ரூபாய் நோட்டுக்களை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. டிஜிட்டல் ரூபாய் நோட்டுக்கள் குறித்த பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சோதனை முறையில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட உள்ளது என தெரிவித்தது. இந்நிலையில், டிஜிட்டல் ரூபாய் வெளியீடு குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாயும் சில்லறைப் பணப் பரிவர்த்தனைகளுக்காக டிசம்பர் 1-ம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் e₹-R என்ற குறியீடு டிஜிட்டல் ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக எஸ்பிஐ, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் ஆகிய நான்கு வங்கிகளில் அறிமுகமாகிறது. மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வர் நகரங்களில் டிசம்பர் 1-ம் தேதியும், அகமதாபாத், கவுகாத்தி, இந்தூர், லக்னோ, பாட்னா, சிம்லாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதன்மூலம் நாளை மறுநாள் முதல் ரூ. 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500, 2000 மதிப்பிலான டிஜிட்டல் கரன்சிகள் புழக்கத்திற்கு வரவுள்ளன. 4 நகரங்களில் நடைபெறும் சோதனை ஓட்டத்தில் 8 வங்கிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...