Monday, August 29, 2022

சிறுமி ஜெயலட்சுமி.

 பள்ளிக்கூடத்தில் கேரம் விளையாடிக் கொண்டிருந்தார் அந்தச் சிறுமி. பெயர் ஜெயலட்சுமி.அப்போது தேங்கியிருந்த தண்ணீரில் ஒரு காகிதம் கிடப்பதை எடுத்துப் பார்த்து அதைப் படிக்க ஆரம்பித்தார். புத்தகம் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ள அந்தச் சிறுமி அந்தக் காகிதத்தை எடுத்துப் படித்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

மதுரையிலே தான்யா என்கிற மாணவி பரீட்சை எழுதி, நாசா விண்வெளி மையத்துக்குப் போய் வந்த செய்தி அதில் இடம்பெற்றிருந்தது. அந்தச் செய்தியின் இறுதியில் அந்தப் பரிட்சை எழுதுகிற ஆன்லைன் லிங்கும் கொடுக்கப்பட்டிருந்தது.
தானும் அதுபோல நாசா செல்ல வேண்டும் என்று விரும்பிய ஜெயலட்சுமியின் குடும்பம் எப்படிப்பட்டது தெரியுமா? மனநலம் பாதிக்கப்பட்ட தாய், தம்பி கோவிந்தராஜ் இவர்களைத் தவிக்கவிட்டு நான்காண்டுகளுக்கு முன்பே எங்கோ சென்றுவிட்ட அப்பா.. ஆதரவு ஏதும் இன்றி முந்திரிக்கொட்டை உடைத்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்துக்கொண்டு படித்தபடியே ஏழ்மையில் வாழ்ந்து வருகிறார் ஜெயலட்சுமி.
அவருக்கு இருக்கும் ஒரே ஆதரவு அவரது சித்தப்பா கண்ணன். வீட்டுக்கு வந்ததும் தன் சித்தப்பா போனை வாங்கி அந்த வெப்சைட்டை தேடிப் பிடித்தார். பிறகென்ன ஒருவழியாக அதற்கான தேர்வை எழுதி முடித்தார்.
புதுக்கோட்டை ஆதனக்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஜெயலெட்சுமி புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் பள்ளியில் 12-ஆம் வகுப்பு தமிழ் வழியில் படித்து வருபவர் தனியார் நிறுவனம் நடத்திய விண் அறிவியல் போட்டியில் ஆங்கிலத்தில் தேர்வு எழுதி வெற்றிபெற்று, அமெரிக்காவின் 'நாசா'வுக்குச் செல்ல இப்படியாகத் தேர்வு செய்யப்பட்டார்...
ஜெயலட்சுமியின் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக உள்ள சுமதி, துர்கா பரமேஸ்வரி இருவரும் செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி சம்பந்தமான செய்திகளைக் கத்தரித்து எடுத்து வந்து பள்ளியில் படிக்கச் சொல்லி அதைப் பழக்கமாகவே அவருடைய மாணவர்களிடையே வளர்த்துள்ளனர். அதுவும் ஜெயலட்சுமியின் விண்வெளி குறித்த ஆர்வத்துக்கு ஒரு முக்கியக் காரணமாக இருந்துள்ளது.
பொதுவாக இணையவழித் தேர்வுகளை கணினியில் எழுதுவதுதான் சுலபமாக இருக்கும். ஆனால் ஜெயலட்சுமியோ செல்போனிலேயே எழுதி இருக்கிறார்.
ஊராட்சித் தலைவரான தன் சித்தப்பாவிற்கு ஊராட்சி நிர்வாகம் சம்பந்தமான செய்திகளை வாசித்துச் சொல்வதையும், அது சம்பந்தமான வேலைகளுக்காகவும் அவரது செல்போனை பயன்படுத்தி உதவி செய்ய ஆரம்பித்த ஜெயலட்சுமிக்கு அப்படிச் செய்யும்போது செல்போன் பயன்படுத்துவதிலும், இணையத்தைப் பயன்படுத்துவதிலும் அனுபவம் அதிகரிக்க அதன்மூலம் செல்போன் வழியாகவே பரிட்சை எழுதி தேர்வாகி இருக்கிறார் ஜெயலட்சுமி.
ஜெயலட்சுமி நாசா செல்லத் தேர்வாகியிருந்தாலும், அவர் சென்று திரும்பும் பயணச்செலவை அவரே ஏற்க வேண்டும் என ‘கோ ஃபார் குரு’ என்ற நாசாவுக்கு அவரை அனுப்பும் அந்தத் தனியார் நிறுவனம் தெரிவித்தது.2 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை ஏற்பாடு செய்ய வழிதெரியாமல் பள்ளியிலேயே மனமுடைந்து அழுதுள்ளார் ஜெயலட்சுமி.
தங்களின் தோழிக்காக ‘பிரபாகரன் புரட்சி விதைகள்’ என்ற பெயரில் பட்டதாரி இளைஞர்களால் நடத்தப்படும் நற்பணிக்குழுவை அணுகியுள்ளனர் ஜெயலட்சுமியின் பள்ளித்தோழிகள். அந்தக் குழுவின் பிரான்ஸிஸ் எடிசன் ஜெயலட்சுமியைப் பற்றி முகநூலில் எழுதவே, ஜெயலட்சுமியின் வங்கிக் கணக்குக்கே நேரடியாக பொதுமக்களின் நன்கொடைகளால் தேவையான பணம் வந்து சேர்ந்துள்ளது. ஏன் கொஞ்ச காலத்தில் தேவைக்கும் அதிகமாகவே உதவிகள் கிடைத்துவிட்டது.
அந்த நேரத்தில்தான், 'கிராமாலயா' என்ற ஒரு தொண்டு நிறுவனம் ஜெயலெட்சுமிக்கு உதவ முன்வந்தது. "உங்கள் தேவையைச் சொல்லுங்கள்..." என்று ஜெயலெட்சுமியிடம் தொண்டு நிறுவனத்தினர் கேட்டனர். அதற்கு ஜெயலெட்சுமி, "அமெரிக்கா செல்லத் தேவையான பண உதவி கிடைத்துவிட்டது" என்று கூறியுள்ளார்.
"சரி, வேறு என்ன உதவி வேண்டும்?" என்று தொண்டு நிறுவனத்தினர் கேட்ட கேள்விக்கு ஜெயலெட்சுமி வைத்த கோரிக்கை, இன்று அவர் கிராமத்தையே முன்மாதிரி ஆக்கியுள்ளது. அம்மக்களின், குறிப்பாக அந்த ஊர்ப் பெண்களின் பல ஆண்டு அவஸ்தைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.
அப்படி என்ன கேட்டார் ஜெயலெட்சுமி?
"எனக்கு என்று எந்தத் தேவையும் இல்லை. ஆனால், எங்கள் கிராமத்திற்கு நிறைய தேவைகள் உள்ளன. முக்கியமாக, கழிப்பறைகள் இல்லாமல் பெண் பிள்ளைகள் ரொம்பவே சிரமப்படுகிறோம். உங்களால் அதற்கு உதவ முடியுமா?" - ஜெயலெட்சுமியின் இந்த வேண்டுகோளிலிருந்து ஆரம்பமானது, ஒரு நல் முயற்சி.
ஜெயலெட்சுமியின் கிராமமான ஆதனக்கோட்டையை முழுவதும் ஆய்வு மேற்கொண்ட `கிராமாலயா' தொண்டு நிறுவனம், அங்கு கழிப்பறை வசதி இல்லாத 125 வீடுகளுக்கு 125 குளியலறையுடன் கூடிய கழிப்பறைகள் கட்டிக்கொடுத்துள்ளனர்.
"நான் `நாசா' போவதற்கான உதவிகள் செய்றதுக்காகத்தான், `கிராமாலயா' தொண்டு நிறுவன நிறுவனர் தாமோதரன் சார் என்கிட்ட பேசினார். அந்த நேரத்தில எனக்குப் பல நல்ல உள்ளங்கள்கிட்டயிருந்தும் நிறைய உதவிகள் கிடைச்சிருந்தது. `வேற என்ன உனக்குத் தேவை இருக்கும்மா?'னு கேட்டாரு. அவர் அப்படிக் கேட்ட நிமிஷம், எங்க ஊருல நானும், என் வயசுப் பிள்ளைகளும், ஊருல இருக்க எல்லா பெண்களும் கழிப்பறை இல்லாததால திறந்தவெளியைப் பயன்படுத்திவந்த அவஸ்தைகள் எல்லாம்தான் சட்டுனு நினைவுக்கு வந்துச்சு.
"அதை அவர்கிட்ட சொல்லி, "எங்க ஊர்ல, கழிப்பறை வசதி இல்லாதவங்களுக்கு அதைக் கட்டிக் கொடுக்க முடியுமா சார்?"னு கேட்டேன். உடனே சார் மலர்ந்துபோய்,"ஏற்படுத்திக்கொடுத்திட்டா போச்சு..."னு சொன்னார்.
"நம்பவே முடியல... அடுத்த சில நாள்கள்லேயே `கிராமாலயா'விலிருந்து எங்க ஊருக்கு ஆள்கள் வந்தாங்க. சர்வே எடுத்தாங்க. சிமென்ட், செங்கல்னு வந்து இறங்கிச்சு. சுவர் எழும்புச்சு. கொஞ்ச நாள்ல கழிப்பறை தயாராகிடுச்சு. எனக்கு மட்டுமல்ல... எங்க கிராமத்துக்கே ஆச்சர்யம் விலகல. இப்போ, 'கிராமாலயா' குழுவில் நானும் ஒரு உறுப்பினராக இருக்கேன்"என்கிறார் மாணவி ஜெயலட்சுமி.
நாசாவிற்கு போகும் ஜெயலட்சுமி பற்றிய செய்தியைக் கேள்விப்பட்டு இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தொலைப்பேசியில் அழைத்துப் பேசியுள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவுக்கு அழைத்துச் செல்வதாக மயில்சாமி அண்ணாதுரை அப்போது அவரிடம் கூறியிருக்கிறார்.
மே மாதம் நாசா விண்வெளி மையத்தைப் பார்வையிடச் செல்லும் ஜெயலட்சுமி அங்கு நடக்கும் ஒரு தேர்வை எழுத இருக்கிறார். அந்த தேர்வில் வெற்றி பெற்றால் அவருக்கு 10,000 அமெரிக்க டாலர்கள் (7 லட்ச ரூபாய்) பரிசாகக் கிடைக்கும். அந்த தேர்வுக்காகத் தயாராகி வருகிறார் ஜெயலட்சுமி!
May be an image of 1 person, plaits and child

கராத்தே குங்ஃபூ என்று கற்றுக் கொள்ளும் பெண்கள்..

 இன்றைய பெண்களின்

புது பரிணாமம் என்னை
வியக்க வைக்கிறது.
ரசனையோடு எத்தனை
காவியங்கள் படைக்கிறார்கள்.
அழகாய் இருப்பதை, நம்மை ஈர்ப்பதை, நம்மை லயிக்க வைப்பதை எத்தனை வயதானாலும் ரசிக்கத்தான் செய்வோம்.
காட்டன் sareeல் மங்களகரமாக திகழ்கிற பெண்கள்
வயதானாலும் மிடுக்கு குறையாமல்
கணீர் குரலில் பேசும் பெண்கள்
பழமுதிர்நிலையத்தில் கனி காய்கறிகளை Xray பார்வை பார்த்து பொறுக்கும் பளிச் குடும்ப தலைவிகள்
லெக்கின்ஸ், ஜீன்ஸ் உடையுடன்
பரபரவென்று சுறுப்பாக உலாவும்
பெண்கள்.
யாரைப் பற்றியும் கவலைப்படாமல்
Chat item சாப்பிடும் பெண்கள்.
பாப் தலை வெட்டிக் கொண்டு குறும்பான கண்களோடு what grand paஇது தெரியலை என்று கலாய்க்கும் கல்லூரியில் படிக்கும் உறவு பெண்கள்
நான் நான்தான். எனக்கு சரியாக படறதை செய்வேன். மத்தவங்க சொல்றாங்கன்னு தேவையில்லாம வளைந்து கொடுக்க மாட்டேன் என்னும் பளிச் பாரதிகள்
உடல் நலம் சரியில்லை என்றால் சட்டென்று தெரசாவாக மாறும் கருணை பெண்கள்
கிச்சன்லேயே உன்னை மாதிரி உப்புமா கிளறி கிட்டு இருப்பேன்னு நினைக்காதே அம்மா. என் படிப்பால் உன்னை ராணி மாதிரி வைச்சுக்குவேன் என்று அம்மாவுக்கு தைரியம் சொல்லும் ஜான்ஸி ராணிகள்.
எவன் என்ன பண்ணிடுவான். பயந்தா விரட்டுவானுங்க. Be bold என்று பள்ளி செல்ல பயப்படும் தன் பெண்ணுக்கு தைரியம் சொல்லும் ஹமாம் பெண்கள்.
யாருக்கும் இளைச்சவங்க இல்லே நாங்க. வாழ்ந்து காட்டற தைரியம் எங்களுக்கும் இருக்கு என்று வீரம் பேசும் பெண்கள்.
எங்க காலத்திலே தான் எதை சொன்னாலும் தலை ஆட்டிக் கொண்டு இருந்தோம். உனக்கென்னடி ராசாத்தி படிச்சிருக்கே நல்லது கெட்டது தெரியும், தைரியமா இரு என்று பேத்திக்கு தன்மானம் கற்பிக்கும் விவரமறிந்த பாட்டிகள்.
அன்று நான் Heavy traffieல் Road Cross
செய்ய தடுமாறும் போது, சட்டென்று என் கையை பிடித்து வாங்க அப்பா என்று அழைத்து சென்ற மகள் போன்ற பெண்கள்.
Medical shopல் மருந்து வாங்க நின்ற போது, ஒரே கூட்டம். Let me help you uncle, என்று சட்டென்று என் prescriptionக்கும் சேர்த்து மருந்து வாங்கி கொடுத்த பெண்.
எத்தனை எத்தனை பெண்கள் நம்மை சுற்றி.
மன வலிமையுள்ள, தன்னை உணர்ந்த, தெளிவான பெண்கள் தேவை ஆண்களுக்கு இக்கணம். நம்மை விட தெளிவாக இருக்கிறாளே என்று பொறாமைபடாத குணமும் ஆண்களுக்கு அவசியம் தேவை.
வாழ்வில் வரும் எல்லாவற்றையும் ரசிக்க, போராட, ஆரவணைக்க,அறிவுரை கூற.
Ladies now One man Army.
பழைய காலம் போல, சமையல்கட்டே
உலகம் என்ற காலம் எல்லாம் போய் விட்டது.
நம்மை சுற்றி நடக்கும் பரிணாம மாற்றங்களை,நி கழ்வுகளை சுவாசிப்பதும் ஏற்று கொள்வதும் அற்புத ரசனைதான், என்னை பொறுத்தவரை.

இவனெல்லாம் அதாவது ரசினிகாந்து ஒரு ஆளா??நாய் கூட ரசினிகாந்தை நம்பாது‌‌‌‌..

 அன்று....

ஆன்மிக அரசியல் கட்சி துவங்க
உள்ளதாக பேசினார்....
சன் பிக்சர்ஸ் ஒப்பந்தம் செய்தது...
சன் பிக்சர்ஸ் ஹைதராபாத் சூட்டிங்கில் இருந்து சென்னை வந்த ரஜினி காந்த்,
கொரோனா காரணம் என்று
அரசியலில் விலகுவதாக அறிவித்தார்...
இன்று....
தமிழக ஆளுநரை சந்தித்தார்....
அரசியல் பேசியதாக சொன்னார்....
சபரீசன் ரஜினி காந்த்தை சந்தித்துப் பேசியுள்ளார்....
இப்போது ரஜினி காந்த் ஒருவேளை
யாரை சந்திக்க சென்றாலும்
இனிமேல் அரசியல் பேச மாட்டேன் என்று
அறிவிப்பு செய்வாரா?....
பெரிய இடத்து சமூகம் நேரில் சென்று
சந்திப்பு என்பது சாதாரண விஷயமல்ல...
May be an image of 2 people, people standing and text that says 'oneindia® tamil முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன், நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!'

Sunday, August 28, 2022

அது எப்படி முடியும்?

 #எவ்வளவு சிந்திக்க வைக்கும் ஆழமான எடுத்துக்காட்டு...!

#சுவாமி விவேகானந்தர் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார்...!
#ஒருவன் குறுக்கிட்டுக் கேட்டான். "ஆண்டவனை அடைய நாம் ஏன் ஆலயம் செல்ல வேண்டும் ?
ஆலயமின்றி ஆண்டவனை அடைய முடியாதா? என்று...!
#கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லும் முன், அவனிடம் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்று கேட்க...!
#அவன் ஓடிப் போய் - ஒரு செம்பு நிறையத் தண்ணீர் கொண்டுவந்தான்...!
#சுவாமி கேட்டார் - நான் தண்ணீர்தானே கேட்டேன். எதற்கு இந்தச் செம்பு.?
செம்பு இல்லாமல் தண்ணீர் கொண்டு வரமுடியாதா?...!
#குழம்பிப் போனான் அது எப்படி முடியும்? என்று கேட்டான்...!
#இப்போது பதில் சொன்னார் சுவாமி ...
ஆம் சகோதரனே..
தண்ணீரைக் கொண்டுவர செம்பு தேவைப் படுவது போல, ஆண்டவனை உணர்ந்து மகிழ, ஓர் இடம் வேண்டாமா? அதுதான் ஆலயம்...!
#ஆனாலும் செம்பே தண்ணீர் ஆகாது...!
#ஆலயமே ஆண்டவனாகாது...!
❤️🙏❤️🙏❤️

நாம் பயணிக்கும் பாதை நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்...!

 ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார்.

உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும், அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ அவர் தான் அடுத்த மேலாளர் என்றார்.
என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன். இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும். யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.
அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர். அந்த கம்பெனியில் வேலை செய்யும் ராமுவும் ஒரு விதை வாங்கி சென்றான். தன் மனைவியிடம் முதலாளி சொன்ன அனைத்தையும் சொன்னான். அவன் மனைவி தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள்.
ஒரு வாரம் கழிந்தது நிறுவனதில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் ராமுவின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.
ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் மட்ட
உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை. நான் விதையை வீணாக்கிவிட்டேனா என்று புலம்பினான் ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் சொல்லவில்லை.
ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள். ராமு தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான். அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.
ராமுவும் காலி தொட்டியை அலுவலகத்திற்-க்கு எடுத்து சென்றான். எல்லார் தொட்டியையும் பார்த்தான் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார். அருமை எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்து உள்ளீர்கள் உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏத்துகொள்ளபோகறீர்கள் என்றார். எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார். ராமு கடைசி வரிசையில் நின்றிருந்தான் அவனை அருகே வருமாறு அழைத்தார்.
ராமு தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றான். முதலாளி ராமுவிடம் உன் செடி எங்கே என்று கேட்டார். ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னான்.
முதலாளி ராமுவை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார். பிறகு ராமு தோளில் கையை போட்டுகொண்டு நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார். ராமுவுக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் .. ???
சென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள். ராமு மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான், ஆகவே அவனே என் நிறுவனத்தை நிர்வாகிக்க தகுதியானவன் என்றார்.
நாம் சொல்லும் சொல் நாம் பயணிக்கும் பாதை நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்...!
நேர்மையை விதையுங்கள். பதவியும் பணமும் தேடிவரும்.
May be an image of rose

இலங்கை கதி தமிழகத்திற்கும் ஏற்படும்!

 'அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்குவதால் ஏற்படும் பொருளாதார தாக்கங்கள் குறித்த விவாதம் நிச்சயம் தேவை' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த நிதியமைச்சர் தியாகராஜனின் கருத்துக்கும் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


நீதிபதி ரமணா, 'தியாகராஜனின் அறிக்கை கொடுக்கப்படும் விதம் மற்றும் அவரது கருத்துகளை, தான் கவனித்து வருவதாகவும், அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் இருந்து வருவதால், நீதிபதிகள் கண்ணை மூடிக் கொண்டு இருக்கின்றனர் என்று எண்ண வேண்டாம்' என்றும் கூறியுள்ளார்.

இது, தி.மு.க.,வினருக்கு மிகப்பெரிய குட்டு. மாண்புமிகு நீதிபதி அவர்களே... 50 ஆண்டுகளுக்கு முன், தி.மு.க., ஆட்சியை பிடிக்க காரணமே, அவர்களது சொல்லாற்றல் தான். அண்ணாதுரை துவங்கி கருணாநிதி வரை, தங்களின் சொக்குப்பொடி பேச்சால், தமிழகத்தை வளைத்து விட்டனர். அத்துடன், 'என் கிட்டயே கடன் வாங்கி, எனக்கே வேட்டி எடுத்துக் கொடுத்தவன்' என்ற பிரபலமான சினிமா வசனம் போல, மக்கள் பணத்திலேயே அவர்களுக்கு இலவசங்கள் கொடுத்து, மாநிலத்தின் பொருளாதாரத்தை சீரழித்தவர்களும் இவர்களே! தேர்தல் நேரத்தில் பற்பல வாக்குறுதிகள் கொடுத்து வெற்றி கண்டவர்கள்.
இதில் கொடுமை என்னவென்றால், ஓட்டுக்கு பணம் மற்றும் இலவசங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் சுட்டிக் காட்டிய போதும், இதுநாள் வரை அதை ஆணையம் கண்டு கொள்ள வில்லை; கண்டிக்கவும் இல்லை. இப்போதாவது, விழிப்புணர்வு வந்துள்ளது மகிழ்ச்சி! அதே நேரத்தில், எந்த கேள்விக்கும், தி.மு.க.,வினர் பதிலை தயாராக வைத்திருப்பர் என்பது கண்கூடு.

இப்போது, இலவசங்களுக்கு நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவிக்கும் போதும், தாங்கள் செய்வது சரி என்றும், இலவசங்களுக்கு வேறு நாமகரணம் சூட்டி அதை, 'நலத்திட்டங்கள்' என்று கூறி சமாளிக்கும் இவர்களின் சாணக்கியத்தனம் வியப்புக்குரியது. ஒரு படத்தில் கவுண்டமணி செந்திலிடம் ஒரு பூவை காட்டி, 'புஷ்பம்' என்பார். செந்தில், 'புய்ப்பம்' என்பார். கவுண்டமணி மீண்டும், 'புஷ்பம்' என்று திருத்துவார். செந்திலோ திரும்பவும், 'புய்ப்பம்' என்றே சொல்வார். அப்படி சொல்லிய பின், கவுண்டமணியிடம், 'அண்ணே இதை இப்படியும் சொல்லலாம்' என்பார் செந்தில்.

அதுபோலத் தான் இலவசங்கள் குறித்து, தி.மு.க.,வினர் சொல்வது உள்ளது. நீதிமன்றம் இலவசம் என்பதை, தி.மு.க., நலத்திட்டம் என்கிறது. ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி மனுஷனை கடிச்ச மாதிரி, மக்களை முட்டாள்களாக்கி ஏமாற்றி வந்த தி.மு.க.,வினர், இன்று நீதிபதிகளையே முட்டாளாக்கப் பார்க்கின்றனர்.

கடல் நீரெடுத்து கரையில் தெளிப்பது போல, நிலவு வெளிச்சத்தில் நிலாவை பார்ப்பது போல, மக்கள் வரிப் பணத்தில், மக்களுக்கு நலத்திட்டம் என்ற பெயரில் தரப்படும், இலவசங்களை நீதிமன்றம் தடை செய்தால் சுபிட்சம். இல்லையெனில், கடன் சுமையால் பொருளாதாரம் சீரழிந்து, இலங்கை கதி தான் தமிழகத்திற்கும் ஏற்படும் என்பதில் மாற்றமில்லை.

இயக்குநர் . K.ரங்கராஜ்.

 சின்ன பட்ஜெட்

அதிகபட்சம் 35 நாட்கள் ஷூட்டிங்
நிறய்ய வெள்ளி விழா படங்கள்
எடுத்த டைரக்டர் யார்? தெரியுமா?
அது தான் இயக்குநர் . K.ரங்கராஜ்
பாரதிராஜாவின் பாசறையில் இருந்து
வந்த இயக்குநர்
முதல் படம்.நெஞ்சமெல்லாம் நீயே
மோகன்- ராதா - ஜோடியின் காதலை
சங்கர் கணேஷின் இசையில்
அவரது மாஸ்டர் பீஸ்களில் இன்றும்
கேட்க கூடிய யாரது - யாரது சொல்லாமல் என்ற பாடல் மறக்க முடியாதது -
தனது முதல் படத்திலேயே மேக்கிங் - ஒளிப்பதிவு. குளோஷப் ஷாட் என பிரமாதப்படுத்தி இருப்பார். படம் பரவலாகப் பேசப்பட்டது அடுத்த படம் பொண்ணு புடிச்சிருக்கு ஹிட்.
தனது மூன்றாவது படம் மூலமாக பரவலாக வெளிச்சத்துக்கு வந்தார்..
அந்த படம் தான் உன்னை நான் சந்தித்தேன். சுரேஷ் - ரேவதி.சுஜாதாசிவக்குமார் என்ற கூட்டணியில் இளையராஜாவின் அழகான பாடல்களில் படம் சூப்பர் ஹிட்
ஏ ஐ லவ் யூ
போன்ற அழகான காதல் பாடல்கள் மூலம் ஹிட். தொடர்ந்து கோவைத்தம்பியின் தயாரிப்பில் இளையராஜாவின் 300வது படமான உதய கீதம் வந்தது .
உதய கீதம் பாடுவேன்.
தேனே தென்பாண்டி தேனே
என்னோடு பாட்டுப் பாடுங்கள்
சங்கீத மேகம்
என ராஜா இவருக்கு கொடுத்த பாடல்கள் இன்றும் இனிக்க கூடியது
மோகனுக்கு மைக் மோகன் என்ற பெயர் வர இந்த படமே உதாரணம்.
அழகான கதை, குடும்ப உறவுகள் .கதை சொன்ன விதம், இளையராஜாவின் இசை என இவர் எடுத்த படங்கள் இன்றும் குடும்பத்தோடு பார்க்க கூடியவை.
உனக்காகவே வாழ்கிறேன். உதய கீதம் | பாடு நிலாவே.நினைவே ஒரு சங்கீதம் . மனிதனின் மறுபக்கம், கீதாஞ்சலி நிலவு சுடுவதில்லை. என இவரது படங்கள் காதலுடன், குடும்பத்தோடு ரசிக்க கூடிய படங்கள். தான் இயக்கிய இருபது படங்களில் , பதினைந்து படங்களுக்கும் இசை இளையராஜா தான் அத்தனை படங்களின் பாடல்களும் அருமை.
பல நல்ல படங்கள் எடுத்த இயக்குனர்.
ரஜினி - கமல் என பெரிய்ய நடிகர்களை நம்பி படம் எடுக்காமல் , மோகன்' சுரேஷ், சிவக்குமார், விஜய்காந்த் என ஹிட் கொடுத்தவர்.
இவரது படங்களையும் பார்க்க பல நல்ல ரசிகர்கள் இருந்தார்கள். இவரையும் தமிழ் சினிமா கொண்டாடியது.
இளையராஜா இவருக்கும் பல
அருமையான
பாடல்கள் கொடுத்துள்ளார்.
எல்லோரையும் போல சொந்த படங்கள் எடுத்து தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டார்.
எல்லைச்சாமி என்ற படம் சரத்குமாரின் நடிப்பில் 1991ல் வந்தது. அதோடு இவரது எல்லையும் முடிவுக்கு வந்தது ஃபின்பு சில சின்னத்திரை சீரியல்கள் இயக்கினார். அதில் சன் டிவியில் வந்த குடும்பம் என்ற தொடர் அப்ப செம ஹிட் ஃ
காலம் சில நல்ல இயக்குநர்களை சோதிக்கும் .அதில் இவரும் ஒருவர்.
K.ரங்கராஜ் ஒரு நல்ல இயக்குனர். இத்தனை ஆண்டு காலம் சினிமாத்துறையில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தாலும் இதுவரை தனக்காக வீடு | கார் என பெரிதாக எதுவும் சம்பாதிக்க வில்லை.
இவருக்கான திறமைகள் இன்னும் வெளியேக் கொண்டு வர தமிழ் சினிமா இவருக்கு இன்றும் பல படங்கள் கொடுத்து உதவலாம் ஃநிச்சயம் வெல்வார்.
இவரின் படங்களின் சில ஹிட்டான பாடல்கள் பட்டியல்
கண்ணா உன்னைத் தேடுகிறேன்
ஊமை நெஞ்சின் சொந்தம்
துள்ளி எழுந்தது பாட்டு
ஏத்து மய்யா ஏத்தம்
தேவன் தந்த வீணை
பாடு நிலாவே
பன்னீரில் நனைந்த பூக்கள்
என .. பல பாடல்கள் இன்றும் கொண்டாடப்படுபவை.
இவரைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் நாளை இவரது படங்கள் பற்றிய சிறு அலசல்கள்?
May be an image of 2 people and text

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...