சின்ன பட்ஜெட்
அதிகபட்சம் 35 நாட்கள் ஷூட்டிங்
நிறய்ய வெள்ளி விழா படங்கள்
எடுத்த டைரக்டர் யார்? தெரியுமா?
அது தான் இயக்குநர் . K.ரங்கராஜ்
வந்த இயக்குநர்
முதல் படம்.நெஞ்சமெல்லாம் நீயே
மோகன்- ராதா - ஜோடியின் காதலை
சங்கர் கணேஷின் இசையில்
அவரது மாஸ்டர் பீஸ்களில் இன்றும்
கேட்க கூடிய யாரது - யாரது சொல்லாமல் என்ற பாடல் மறக்க முடியாதது -
தனது முதல் படத்திலேயே மேக்கிங் - ஒளிப்பதிவு. குளோஷப் ஷாட் என பிரமாதப்படுத்தி இருப்பார். படம் பரவலாகப் பேசப்பட்டது அடுத்த படம் பொண்ணு புடிச்சிருக்கு ஹிட்.
தனது மூன்றாவது படம் மூலமாக பரவலாக வெளிச்சத்துக்கு வந்தார்..
அந்த படம் தான் உன்னை நான் சந்தித்தேன். சுரேஷ் - ரேவதி.சுஜாதாசிவக்குமார் என்ற கூட்டணியில் இளையராஜாவின் அழகான பாடல்களில் படம் சூப்பர் ஹிட்
ஏ ஐ லவ் யூ
போன்ற அழகான காதல் பாடல்கள் மூலம் ஹிட். தொடர்ந்து கோவைத்தம்பியின் தயாரிப்பில் இளையராஜாவின் 300வது படமான உதய கீதம் வந்தது .
உதய கீதம் பாடுவேன்.
தேனே தென்பாண்டி தேனே
என்னோடு பாட்டுப் பாடுங்கள்
சங்கீத மேகம்
என ராஜா இவருக்கு கொடுத்த பாடல்கள் இன்றும் இனிக்க கூடியது
மோகனுக்கு மைக் மோகன் என்ற பெயர் வர இந்த படமே உதாரணம்.
அழகான கதை, குடும்ப உறவுகள் .கதை சொன்ன விதம், இளையராஜாவின் இசை என இவர் எடுத்த படங்கள் இன்றும் குடும்பத்தோடு பார்க்க கூடியவை.
உனக்காகவே வாழ்கிறேன். உதய கீதம் | பாடு நிலாவே.நினைவே ஒரு சங்கீதம் . மனிதனின் மறுபக்கம், கீதாஞ்சலி நிலவு சுடுவதில்லை. என இவரது படங்கள் காதலுடன், குடும்பத்தோடு ரசிக்க கூடிய படங்கள். தான் இயக்கிய இருபது படங்களில் , பதினைந்து படங்களுக்கும் இசை இளையராஜா தான் அத்தனை படங்களின் பாடல்களும் அருமை.
பல நல்ல படங்கள் எடுத்த இயக்குனர்.
ரஜினி - கமல் என பெரிய்ய நடிகர்களை நம்பி படம் எடுக்காமல் , மோகன்' சுரேஷ், சிவக்குமார், விஜய்காந்த் என ஹிட் கொடுத்தவர்.
இவரது படங்களையும் பார்க்க பல நல்ல ரசிகர்கள் இருந்தார்கள். இவரையும் தமிழ் சினிமா கொண்டாடியது.
இளையராஜா இவருக்கும் பல
அருமையான
பாடல்கள் கொடுத்துள்ளார்.எல்லோரையும் போல சொந்த படங்கள் எடுத்து தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டார்.
எல்லைச்சாமி என்ற படம் சரத்குமாரின் நடிப்பில் 1991ல் வந்தது. அதோடு இவரது எல்லையும் முடிவுக்கு வந்தது ஃபின்பு சில சின்னத்திரை சீரியல்கள் இயக்கினார். அதில் சன் டிவியில் வந்த குடும்பம் என்ற தொடர் அப்ப செம ஹிட் ஃ
காலம் சில நல்ல இயக்குநர்களை சோதிக்கும் .அதில் இவரும் ஒருவர்.
K.ரங்கராஜ் ஒரு நல்ல இயக்குனர். இத்தனை ஆண்டு காலம் சினிமாத்துறையில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தாலும் இதுவரை தனக்காக வீடு | கார் என பெரிதாக எதுவும் சம்பாதிக்க வில்லை.
இவருக்கான திறமைகள் இன்னும் வெளியேக் கொண்டு வர தமிழ் சினிமா இவருக்கு இன்றும் பல படங்கள் கொடுத்து உதவலாம் ஃநிச்சயம் வெல்வார்.
இவரின் படங்களின் சில ஹிட்டான பாடல்கள் பட்டியல்
கண்ணா உன்னைத் தேடுகிறேன்
ஊமை நெஞ்சின் சொந்தம்
துள்ளி எழுந்தது பாட்டு
ஏத்து மய்யா ஏத்தம்
தேவன் தந்த வீணை
பாடு நிலாவே
பன்னீரில் நனைந்த பூக்கள்
என .. பல பாடல்கள் இன்றும் கொண்டாடப்படுபவை.
இவரைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் நாளை இவரது படங்கள் பற்றிய சிறு அலசல்கள்?
No comments:
Post a Comment