Monday, April 1, 2019

வினோத் ராய் குறிப்பிட்ட தொகை ரொம்பவும் சரி.

2ஜி அலைக்கற்றை ஏலத்தில்,
ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது
என அப்போதை ஆடிட்டர் ஜெனரல் வினோத் ராய் தெரிவித்தது
சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஏலத்தில் இவ்வளவு தொகை இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை.
அந்த தொகை மிகைப்படுத்தப்பட்டது என்றும் சிலர் மறுத்தனர்.
ஆனால், இந்த தொகைக்கு ஆதரவாக அவ்வழக்கை அப்போது விசாரித்த முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஜிஎஸ் சிங்வி கருத்து கூறியுள்ளார்.
2ஜி ஏலத்தில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக அப்போதைய ஆடிட்டர் ஜெனரல் வினோத் ராய் தெரிவித்தார்.
இது பற்றி விசாரிக்க வேண்டும் என்று சுப்பிரமணியம் சாமி வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு சுப்ரீம் கோர்ட்டிற்கு வந்தபோது, அப்போதைய நீதிபதி ஜி.எஸ்.சிங்வி, 2ஜியின் அனைத்து லைசென்ஸ்களையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
முறைகேட்டை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் என்றும் உத்தரவிடப்பட்டது.
நீதிபதி சைனி தலைமையில் டில்லி சிபிஐ கோர்ட்டில், விசாரணை நடந்தது.
முடிவில், போதிய ஆதாரங்களை சிபிஐ சமர்ப்பிக்கவில்லை; குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, குற்றம்சாட்டப்பட்ட கருணாநிதி மகள் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா உள்பட அனைவரையும் சைனி விடுதலை செய்தார்.
இது குறித்து, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி சிங்வி, ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கை சுத்தமானவர்களா:
2ஜி வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லை என்று சிபிஐ கோர்ட் கூறியுள்ளது
அதற்காக,
இவ்வழக்கில்
விடுதலையானவர்கள்
அனைவருமே
கை சுத்தமானவர்கள்
என்று அர்த்தம் இல்லை.
போதிய ஆதாரங்கள் இல்லை என்பதற்கும், கை சுத்தத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
இழப்பு ஏற்பட்ட தொகையை வினோத்ராய் குறிப்பிட்டுவிட்டார்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்குப் பிறகு நடந்த முதல் ஏலத்தில் இருந்து அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைத்தது என்று பாருங்கள்.
அதில் மட்டும் கிடைத்தது 60 ஆயிரம் கோடி ரூபாய்.
அதுவும் முழுமையான அலைக்கற்றை ஏலத்தில் கிடைத்தது அல்ல.
எனவே இதை சரியான கோணத்தில் பார்க்க வேண்டும்.
அப்போது தான் அது மக்களுக்கு புரியும்.
மீண்டும் கூறுகிறேன், வினோத் ராய் குறிப்பிட்ட தொகை ரொம்பவும் சரி.
சுப்ரீம் கோர்ட் நீதிபதி என்ற முறையில், இந்த வழக்கின் பல விபரங்கள் எனக்கு தெரியும்.
2ஜி முறைகேட்டை வெளிக்கொண்டு வந்த வினோத்ராயின் நேர்மை மீது யாரும் சந்தேகிக்க முடியாது.
அவரை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று! இன்று! நாளை?

இந்திய அடிச்ச அத்துணை 200 ரூபாய் கட்டுகளும் இங்கு தான் இருக்கும் போல.

வார்டு வாரியாக பிரிக்க‌ப்ப‌ட்டு வாக்காள‌ர்க‌ளுக்கு கொடுக்க‌ வைத்திருந்த‌ கோடிக்க‌ணக்கான ப‌ணம் திமுக‌ பொருளாள‌ர் துரைமுருக‌னுக்கு சொந்த‌மான சிமெண்ட் குடோனில் ப‌றிமுத‌ல். அட்டைப்பெட்டிக‌ள், பிளாஸ்டிக் பைக‌ள், சாக்கு மூட்டைக‌ளில் அடுக்கி வைக்க‌ப்ப‌ட்ட‌து வ‌ருமான வ‌ரித்துறையினரால் க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌து.
நேற்றுதான் துரைமுருக‌னும், ஸ்டாலினும் கூறிய‌து. எங்க‌ளிட‌ம் ம‌டியில் க‌னமில்லை! வ‌ழியில் ப‌ய‌மில்லை. இந்த‌ சோத‌னை ஒரு ப‌ழிவாங்கும் ந‌ட‌வ‌டிக்கை. எங்க‌ள‌து தூய்மை நிரூபிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. மோடி வீட்டில் ரெய்டு ந‌ட‌த்த‌ த‌யாரா? என்று ச‌வால் விட்ட‌ 24 ம‌ணிநேர‌த்திற்குள் வ‌ச‌மாக‌ சிக்கியுள்ள‌ன‌ர்.
க‌திர் ஆன‌ந்தின் வேட்பு ம‌னு த‌ள்ளுப‌டி செய்ய‌ வாய்ப்பு அதிக‌ம். இந்த‌ ப‌ணமான‌து வேலூர் தொகுதி ப‌ட்டுவாடாவிற்கு ம‌ட்டுமா இல்லை திமுக பொருளாள‌ராக உள்ள‌தால் த‌மிழ‌க‌ம் முழுமைக்கும் வினியோகிக்க‌வா என்ற‌ விசார‌ணை ந‌ட‌ந்து வ‌ருகிற‌து. இன்னும் ப‌ல திமுக‌ பிர‌முக‌ர்க‌ளும் சிக்குவார்க‌ள் என்று துறை சார்ந்த‌வ‌ர்க‌ள் கூறியுள்ள‌ன‌ர்.
"யோக்கிய‌ன் வ‌ரான்! சொம்பை தூக்கி உள்ளே வை". ப‌ழ‌மொழி ச‌ரிதானே.
No photo description available.

திமுக_பரிதாபங்கள் #இரு_தினங்களுக்கு_முன்பு_ஸ்டாலின்_பேசியவை.

திமுக – வின் பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நேற்று இரவு முதல் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர். இன்று காலை 8 மணி வரை அவரது இல்லத்தில் தொடர்ந்த சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
அதனைத் தொடர்ந்து துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான வீடு, சிபிஎஸ்இ பள்ளி,கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தமிழகத்தில் அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக வின் முக்கிய புள்ளியான துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், துரைமுருகன் வீட்டில் திமுக தொண்டர்கள் மற்று அவரின் வழக்கறிஞர்கள் கூடியதால் அவர்களுக்கும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் இதுக் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
ஸ்டாலின் கூறியிருப்பதாவது, “தேர்தல் காலத்தில் வருமான வரித்துறை ‘காபந்து பிரதமரின்’ தலைமையில் இயங்க தடை விதிக்க வேண்டும்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நேரடி பார்வையில் செயல்படுவதற்கான வழிமுறைகளை கண்டறிய தேர்தல் ஆணையம் முயற்சிக்க வேண்டும்.
வருமான வரி, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவைக்கும் தேர்தல் நடத்தைவிதி பொருந்தும் என ஆணையம் அறிவிக்க வேண்டும்.ரெய்டு, பயமுறுத்தலுக்கு எல்லாம் திமுக என்றைக்கும் அஞ்சாது என மோடிக்கும், பழனிச்சாமிக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். மிசாவையே கண்டு மிரளாதவர்கள் நாங்கள்,சேடிஸ்ட் சேட்டையை பார்த்து திமுக ஒருக்காலும் ஓய்ந்துவிடாது. இது பனங்காட்டு நரி, இந்த வெற்று சலசலப்புக்கெல்லாம் நடுங்கி ஓடிவிடாது.
ஹிட்லர்” பாணி அரசியலை, 130 கோடி மக்களைக் கொண்ட வலிமைமிக்க இந்திய ஜனநாயகம் ஒருபோதும் ஏற்காது,அதை மன்னிக்காது. அதிமுக கூட்டணி படுதோல்வியடையும் என்ற சர்வே முடிவுகளால் மோடி எரிச்சலும், ஏமாற்றமும் அடைந்துள்ளார். ஒரு நாட்டின் பிரதமர் ஆணவத்தின் சின்னமாகவும், அகங்காரத்தின் உருவமாகவும்,சர்வாதிகாரத்தின் அடையாளமாகவும் மாறி ஊழிக் கூத்தாடுவது, உலகப் புகழ் பெற்ற இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தலைகுனிவு.
விரைவில் பிரதமர் பதவியிலிருந்து ஜனநாயக தேர்தலில் வெளியேற்றப்படும் பிரதமர், மூழ்கும் கப்பலில் இருந்து எப்படியாவது தப்பித்து விட முடியுமா என்ற நினைப்பில் கடைசி நிமிட வருமான வரித்துறை ரெய்டுகளை தி.மு.க.வின் மீதும், நாடுமுழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளின் மீதும் நடத்துகிறார்.
பாவம் புதிதாகப் பிரதமர் பதவியைப் பார்த்து அதில் பித்தம் கொண்டிருக்கும் திரு நரேந்திர மோடிக்குப் புரியாது. அடிக்க அடிக்கத்தான் இந்த திராவிடப் பேரியக்கம் என்ற பந்து வீறுகொண்டு எழும் என்ற உண்மை கூடப் புரியாமல், ஒருவர் இந்த நாட்டின் பிரதமராக ஐந்து வருடம் கழித்து விட்டாரே என்று திரு.நரேந்திரமோடியைப் பார்க்கப பரிதாபமாகத்தான் இருக்கிறது. திமுகவின் மடியில் கனமில்லை; எனவே அதன் பயணத்தில் எப்போதும் பயம் என்பது ஏற்பட்டதில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

எல்லா வற்றிற்கும் பெரிய தொகை தர முடியாது.

துரைமுருகனுக்கு நெருக்கமான நண்பரின் ஸிமென்ட் கிடங்கிலிருந்து மூட்டை மூட்டையாகப் பணம் வருமானவரி அதிகாரிகளால் கைப்பற்றப் பட்டிருக்கிறது.
இப்பெரும் தொகையில் அதிகம் ₹ 200 நோட்டுக்கட்டுகள் என்பது புகைப்படங்கள் மூலமாகவும் செய்தி வழியாகவும் நமக்கு அறிய வருகிறது.
இந்த நிலையில் எனக்கு எழும் சந்தேகம்.
ஏன் அதிகம் அகப்பட்டவை ₹ 200 கட்டுகளாக இருக்கின்றன?
திமுக (மற்றும் கூட்டணிக் கட்சி காங்கிரஸ்) தலைமைக்கு அடுத்து ஆட்சி அமைக்க இருப்பது நரேந்திர மோதிதான் என்று அறிந்திருக்கிறதோ?
அப்படி மோதி/பாஜக ஆட்சி அமைகையில் ₹ 500, 2000 தாள்கள் செல்லாது என அறிவிக்கப்படுமோ?
இது ஒரு உரத்த சிந்தனை/ஐயம்.

கவர்களில் கரன்சி: துரைமுருகனின் பல கோடி பறிமுதல்?

வேலூரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய ஒரு லட்சம் பேப்பர் கவர்கள் வாங்கப்பட்டுள்ளன. இவை எதற்காக வாங்கப்பட்டன என்று மோப்பம் பிடித்தபோதுதான், மாஜி அமைச்சர் துரைமுருகனின் மகன் போட்டியிடும் வேலுார் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக கவர்கள் வாங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஐ.டி.,ரெய்டில் இதுவரை சுமார் ரூ.36 கோடி வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலூர் தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார் . இத்தொகுதியில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வருமான வரித்துறையினர் துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடத்தினர். இதில் பணம் ஏதும் சிக்கியதா என்ற விவரம் வெளியாகவில்லை. இந்நிலையில் இன்று காட்பாடி அருகே பள்ளிக்குப்பத்தில் பூஞ்சோலை சீனிவாசன் என்ற திமுக கட்சிக்காரரின் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். இவர் துரைமுருகனின் பள்ளி தோழர் என்று கூறப்படுகிறது. துரைமுருகன் நண்பர் வீட்டில் ரெய்டு நடப்பதாக தெரிகிறது. இவர் திமுகவின் பகுதி செயலரும் ஆவார்.



இதற்கிடையே வேலூர் சிமென்ட் குடவுனில் கவர் போட்டு வைத்த பணம் சிக்கியது. வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு கவரில் பணம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கவர்கள் பல மூடைகளில் இருந்ததாகவும் தெரிகிறது. ஆனால் வருமான வரித்துறை சார்பில் யாரும் உறுதிப்படுத்தவில்லை. பணம் எண்ணும் பணி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.


கவர்கள் மூலம் கண்டுபிடிப்பு

நேற்று வேலுாரில் ஒரு கவர் தயாரிக்கும் நிறுவனத்தில் சிலர் ஒரு லட்சம் கவர்கள் வாங்கி உள்ளனர். இவற்றை கொண்டு செல்லும்போது அங்கிருந்த பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். சொந்த பயன்பாட்டுக்காக கவர்கள் வாங்கிச் செல்வதாக அவர்கள் கூறியதும் அதிகாரிகள் வாகனத்தை விடுவித்தனர். பின் அந்த வாகனம் துரைமுருகன் வீட்டுக்கு சென்றுள்ளது. அங்கிருந்து வாகனம் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டுக்கு சென்றுள்ளது.இந்த தகவல் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தான் ஐ.டி., ரெய்டில் பணம் சிக்கியதாக கூறப்படுகிறது. சுமார் 10 முதல் 12 கோடி ரூபாய் வரை சிக்கியதாக தகவல் தெரிவிக்கிறது.



ஐகோர்ட்டில் முறையீடு

இதற்கிடையே தனது தேர்தல் பிரசாரத்தை தடுப்பதற்காக ரெய்டு நடப்பதாக சென்னை ஐகோர்ட்டில் துரைமுருகனின் மகன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.24 கோடி பறிமுதல் ?:
இந்த பணம் போக சீனிவாசனின் அக்கா கணவர் தாமோதரன் என்பவர் வீட்டில் இருந்து ரூ.19 கோடியை ஐ.டி., அதிகாரிகள் அள்ளி உள்ளதாக இன்னொரு தகவல் தெரிவிக்கிறது. துரைமுருகனின் உதவியாளர் அப்சல் அலி என்பவரது வீட்டில் இருந்து ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த பணம் அனைத்தும் கவர்களில் போட்டு வாக்காளர்களுக்கு தருவதற்காக வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து அப்சல் அலி தொடர்பான இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இதற்கிடையே, ஐ.டி., சோதனை பற்றி கேள்விப்பட்ட திமுகவினர், காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீடு முன்பு கூடி உள்ளனர்.

நாக தோஷ பரிகாரம் பற்றிய 31 சிறப்பு தகவல்கள்.

ராகு தோஷத்தால் கஷ்டங்களை அனுபவிப்பவர்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள நாக தோஷ பரிகாரம் பற்றிய 31 சிறப்பு தகவல்களை படித்து பலன் பெறலாம்

1. “கால சர்ப்பயோகம் கொண்ட ஜாதகர்கள், ராகு காயத்திரியை ஆயுள் முடியுமட்டும் தினமும் தங்களால் முடிந்த அளவு ஜபித்துக் கொண்டே வருவது மிகச் சிறந்த பரிகாரம்.
2. ஜோதிட சாஸ்திரத்தில் நிழற்கிரகங்கள் என்று ராகு கேதுவை வர்ணக்கப்பட்டாலும் இவர்கள் இரண்டு பேரும் சனி பகவானின் பிரதிநிதிகளாகத் திகழ்கிறார்கள்.
3. கிரந்தங்களிலும் பல்வேறு ஓலை சுவடிகளிலும் ராகு-கேதுவின் பெருமைகளைப் பற்றியும் அவர்கள் ஒவ்வொரு ராசிகளில் சஞ்சரிக்கும்போது என்ன என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி நிறைய செய்திகள் உள்ளன.
4. ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 1, 5, 9 இந்த ஸ்தானங்களில் சனி, ராகு, கேது, போன்ற கிரகங்கள் இருக் கும் பொழுது அது நாகதோஷம் உடைய ஜாதகமாகிறது.
5. நாக தோஷங்கள் எதனால் ஏற்படு கிறது என்று பார்த்தால் முன் ஜென்மத்தில் ஆண் நாகமும், பெண் நாகமும் ஒன்றாக இணைந்து இருக்கும் பொழுது அதை துன்புறுத்தி
இருந்தாலும்
இல்லாளை
சித்ரவதை போன்ற கொடிய செயலை செய்து இருந்தாலும்
பெற்றவர்களை
பேணி காக்க மறுத்து இருந்தாலும்
, இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடத்தில் ராகு என்ற கருநாகம் நின்று தோஷத்தை எற்படுத்தும்.
6. பாம்பு தன்னுடைய பசிக்காக இரையை தேடி செல்லும் பொழுது அதை துன்புறுத்தி
இருந்தாலும்
அதர்ம வழியில்
பிறரை ஏமாற்றி.
தொழில் செய்து இருந்தாலும்
இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான லக்னத்துக்கு பத்தாம் இடத்தில் ராகுவோ, கேதுவோ நின்று, தொழில் ஸ்தானத்துக்கு தோஷத்தை உருவாக்கும்.
7. பாம்பு முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலத்திலும், அல்லது தனது குட்டிகளுடன் ஒன்றாக இருக்கும் பொழுது அதை துன்புறுத்தி
இருந்தாலும்
மாத பிதா க்களை மதியாது மனைவி மக்களை மதியாது
தீய வழிகளில்
பாவங்களை சேர்த்து இருந்தாலும்
இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாம் இடமான புத்திர ஸ்தானத்தில், ராகு நின்று நாக தோஷத்தை ஏற்படுத்தும்.
8. புராண காலங்களில் நாகதோஷம் எதற்காக பார்க்கப்பட்டது என்றால், ஒருவர் சன்னியாசம் பெற்று காடுகளிலும், மலைகளிலும், கடுமையான தவங்கள் செய்வதற்கு கடுமையான விஷ ஐந்துகளினால் இவருக்கு ஆபத்து ஏற்படுமா என்பதை அறிந்த பின்னரே அவருக்கு சன்னியாசம் கொடுக்கப்பட்டது. நாக தோஷம் இதற்காகத்தான் பார்க்கப்பட்டது. நாளடைவில் அது ஒரு பயப்படக் கூடிய தோஷமாக பார்க்கப்பட்டது.
9. ஒவ்வொரு மாதமும் திரியோதசி திதியன்று, சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. பிரதோஷ வேளையில் மாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் இவ்வழிபாடு நடைபெறும். ராகுவால் ஏற்படும் நாக தோஷத்தை போக்க இது சிறந்த வழிபாடாகும்.
10. சர்ப்ப பரிகாரங்கள் செய்யும்போது மிகுந்த ஆசாரத்துடன் செய்ய வேண்டும். சைவ உணவு விரதம் மேற்கொள்ள வேண்டும். தான தர்மங்களை மனம் கோணாமல், மனமுவந்து நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும்.
11. நாகப் பிரதிஷ்டம் என்பது ஆண் பாம்பும் பெண் பாம்பும், நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணைவது போன்று கல்லில் வடித்து அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தால் விசேஷம் என்று மனுநீதி என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது.
12. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் ஆலயம் உள்ளது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தக் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அன்று வந்து பாம்பு புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு 11 வாரம் தொடர்ந்து புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபட்டு வந்தால் நாக தோஷத்தால் தடைப்பட்டு வரும் திருமணம் விரையில் நடைபெறும்.
13. ராமேஸ்வரம் சென்று மூன்று நாள் தங்கி கடலில் நீராடி ராமலிங்க சுவாமியை வணங்கி வந்தால் கர்ப்ப தோஷம் பரிகாரமடைந்து புத்திரர் பிறப்பார்கள்.
14. தங்கம் அல்லது வெள்ளி சிறு ஐந்து தலை நாகம் செய்து வீட்டில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகம் செய்து, பூசித்து பிறகு ஒருவருக்கு புது வேட்டி துண்டு தாம்பூலம் தட்சணையுடன் நாக விக்கிரகத்தையும் தானம் செய்யலாம்.
15. கருங்கல்லில் நாகப் பிரதிஷ்டை செய்து ஆறு, குணம் அருகில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகத்துடன் பூசித்து தினமும் 108 முறை வலம் வந்தால் நாக தோஷம் நிவர்த்தியாகும்.
16. இரண்டு நாகங்கள் பின்னிக் கொண்டு ஒன்றின் முகத்தை ஒன்று பார்க்குமாறு கல்லில் வடித்து அரசமரத் தின் அடியில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள்கள் விளக்கேற்றி வைத்து பூசித்தால் நாகதோஷம் விலகும்.
17. கண்ணன் நடனமாடுவது போலவும், அவனுக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போலவும் கல்லில் வடித்து வேம்பும் அரசும் இணைந்திருக்கும் குளக்கரையில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள் விளக்கேற்றி வலம் வந்து வணங்கினால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.
18. சிவலிங்கத்திற்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் சிலை வடித்து நதிக்கரை அல்லது, குளக்கரையில் பிரதிஷ்டை செய்து, நாற்பது நாள் பூசித்து வலம் வந்தால் நாகதோஷம் பரிகாரமாகும்.
19. குளம் அல்லது நதிக்கரையில் அரசு, வேம்பு கன்றுகளை நட்டு, முறையாகத் திருமணம் செய்து குறைந்தது நூறு தம்பதிகளுக்கு விருந்தும் தட்சணை தாம்பூலம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகி புத்திரர்கள் பிறப்பதுடன் வாழ்க்கையும் இன்பமாக அமையும்.
20. வசதி உள்ளவர்கள் ஓர் ஏழைக்கு பயிர் நிலம் வாங்கி தானம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.
21. ராகு காலத்தில் பாம்புப் புற்றுக்கு முட்டை, பால் வைத்து வழிபாடு செய்வது நற்பலன்களை உண்டாக்கும்.
22. கோமேதகக் கல் வைத்த மோதிரம் அணியலாம். இதனால் ராகுவினால் உண்டாகும் அசுப பலன்கள் குறையும்.
23. ராகு பகவானுக்கு உளுந்து வடை விசேஷமாகும்.அதை நெய்வேத் தியம் செய்து தானம் செய்யலாம்.
24. ராகு, தோஷம் ஏற்பட்டு பருவ மடைந்தும் நீண்ட காலம் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் அரச மரமும், வேப்ப மரமும் சேர்ந்துள்ள இடத்தின் கீழுள்ள நாக சிலைக்கு பால் விட்டு, அபிஷேகம் செய்து வர வேண்டும். செவ்வாய்க் கிழமையில் செய்வதே நல்லது. இவ்வாறு 48 நாட்கள் செய்ய வேண்டும்.
25. பாம்பு புற்றுக்கு பால் வார்த்தும் முட்டை வைத்தும் ஒரு மண்டலம் வழிபாடு செய்யலாம். இதனால் திருமணம் விரைவில் நடக்கக்கூடும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கும், நாகதோஷம் நீக்கி புத்திர பாக்கியம் விரைவில் கிடைக்கும். திருமணம் விரைவில் நடக்கவும் இதுபோல் வழிபாடு செய்து வர வேண்டும்.
26. ராகு பகவானுக்கு உளுந்து பிரீதியான தானியம் ஆகும். இதை நவக்கிரக சன்னதியில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ராகுவுக்கு வைத்து வலம் வந்து பூஜித் தால் தோஷம் நீங்கும். இதனால் சகல கஷ்டங்களும் நீங்கும்.
27. ராகுவுக்கு அதிதேவதை பத்ரகாளி ஆகும். எல்லா சிவாலயங்களிலும் வடக்கு பார்த்த நிலையில் துர்க்கை அம்மன் இருக்கும். அந்த அம்மனுக்கும் வெள்ளிக்கிழமை தோறும் எலுமிச்சை பழத்தோலில் விளக்கேற்றி பூஜித்து வர சகல தோஷங்களும் தீரும்.
28. ராகு, கார்கோடன் என்ற பெயர்கொண்டு மந்தாரை மலர் சூடி கருப்பு சித்திர ஆடை அணிந்து, உளுந்து தானியம் ஏற்றி, வேம்பு எண்ணெய் தீப ஒளியில் ஸ்ரீஅனந்த பத்மேஸ்வரர் ஆலயம் (லிங்கப்பன் தெரு, ஏகாம்பரநாதர் கோவில் அருகில்) பெரிய காஞ்சீபுரத்தில் யோகங்களை வாரி வழங்குகிறார். தோஷங்களை போக்குகிறார்.
29. தினசரி துர்க்கை அம்மனுக் குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர வேண்டும். தினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும். துர்க்கைக்கு அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும்.
30. நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி வலம் வர வேண்டும். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.
31. ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லி வர வேண்டும்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...