Monday, April 1, 2019

வினோத் ராய் குறிப்பிட்ட தொகை ரொம்பவும் சரி.

2ஜி அலைக்கற்றை ஏலத்தில்,
ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது
என அப்போதை ஆடிட்டர் ஜெனரல் வினோத் ராய் தெரிவித்தது
சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஏலத்தில் இவ்வளவு தொகை இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை.
அந்த தொகை மிகைப்படுத்தப்பட்டது என்றும் சிலர் மறுத்தனர்.
ஆனால், இந்த தொகைக்கு ஆதரவாக அவ்வழக்கை அப்போது விசாரித்த முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஜிஎஸ் சிங்வி கருத்து கூறியுள்ளார்.
2ஜி ஏலத்தில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக அப்போதைய ஆடிட்டர் ஜெனரல் வினோத் ராய் தெரிவித்தார்.
இது பற்றி விசாரிக்க வேண்டும் என்று சுப்பிரமணியம் சாமி வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு சுப்ரீம் கோர்ட்டிற்கு வந்தபோது, அப்போதைய நீதிபதி ஜி.எஸ்.சிங்வி, 2ஜியின் அனைத்து லைசென்ஸ்களையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
முறைகேட்டை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் என்றும் உத்தரவிடப்பட்டது.
நீதிபதி சைனி தலைமையில் டில்லி சிபிஐ கோர்ட்டில், விசாரணை நடந்தது.
முடிவில், போதிய ஆதாரங்களை சிபிஐ சமர்ப்பிக்கவில்லை; குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, குற்றம்சாட்டப்பட்ட கருணாநிதி மகள் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா உள்பட அனைவரையும் சைனி விடுதலை செய்தார்.
இது குறித்து, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி சிங்வி, ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கை சுத்தமானவர்களா:
2ஜி வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லை என்று சிபிஐ கோர்ட் கூறியுள்ளது
அதற்காக,
இவ்வழக்கில்
விடுதலையானவர்கள்
அனைவருமே
கை சுத்தமானவர்கள்
என்று அர்த்தம் இல்லை.
போதிய ஆதாரங்கள் இல்லை என்பதற்கும், கை சுத்தத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
இழப்பு ஏற்பட்ட தொகையை வினோத்ராய் குறிப்பிட்டுவிட்டார்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்குப் பிறகு நடந்த முதல் ஏலத்தில் இருந்து அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைத்தது என்று பாருங்கள்.
அதில் மட்டும் கிடைத்தது 60 ஆயிரம் கோடி ரூபாய்.
அதுவும் முழுமையான அலைக்கற்றை ஏலத்தில் கிடைத்தது அல்ல.
எனவே இதை சரியான கோணத்தில் பார்க்க வேண்டும்.
அப்போது தான் அது மக்களுக்கு புரியும்.
மீண்டும் கூறுகிறேன், வினோத் ராய் குறிப்பிட்ட தொகை ரொம்பவும் சரி.
சுப்ரீம் கோர்ட் நீதிபதி என்ற முறையில், இந்த வழக்கின் பல விபரங்கள் எனக்கு தெரியும்.
2ஜி முறைகேட்டை வெளிக்கொண்டு வந்த வினோத்ராயின் நேர்மை மீது யாரும் சந்தேகிக்க முடியாது.
அவரை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...