இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஆனால் குறை ஜனநாயக அறிவை கொண்ட மக்கள் உள்ள நாடு.
*ஆண்டு 2009 நாடு சீனா...*
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள வென்லிங் நகரில் அமைக்கப்பட்ட புதிய ரெயில் நிலையத்திற்கு பயணிகள் வாகனங்களில் வந்து சேருவதற்காக விரைவு நெடுஞ்சாலை அமைக்க சீன அரசு திட்டமிட்டது.
இதற்காக அந்த பகுதியில் இருந்த வீடுகள் அனைத்தும் அகற்றப்பட்டன. அரசுவிதிப்படி இழப்பீடு கொடுத்து அகற்றப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் வசித்து வந்த வாத்துப்பண்ணை உரிமையாளரான லூ பாஜென் என்பவர் தன் வீட்டை காலி செய்ய மறுத்து விட்டார். தான் அதிக செலவழித்து வீட்டை கட்டியதால் அதற்குரிய இழப்பீடு தேவை என வீட்டை காலி செய்ய மறுத்துவிட்டார் லூ பாஜென்
சீன அரசு அந்த வீட்டை மட்டும் அப்படியே விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் சாலை அமைக்க தொடங்கியது. லூ அந்த வீட்டிலேயே குடும்பத்துடன் வசித்து வந்தார்.அந்த வீட்டை மட்டும் இடிக்காமல் விட்டுவிட்டு இருபுறமும் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. போக்குவரத்துக்கு இடையூறாக அச்சாலையின் நடுப்பகுதியில் இவரது வீடு மட்டும் தனியாக உள்ளது உலகம் முழுக்க பிரபலமானது. ஆனாலும் போக்குவரத்து முறையாக தொடங்கப்படாமல் இருந்தது.
*ஆண்டு2012 (3வருடங்களுக்குபிறகு)*
அக்கிராம தலைமை அதிகாரி சென் ச்செகாய் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு 2,20,000யூவான் இழப்பீட்டு தொகையை உயர்த்தி 2,60,000 னாக தர அரசு முன்வந்தது. இதனை ஏற்றுக்கொண்டு லூ பாஜென் வீட்டை காலி செய்தார். லூ பாஜென் அல்லாமல் அப்பகுதியில் வசித்து காலி செய்த அனைவருக்கும் தொகை உயர்த்தி தரப்பட்டது.
அவ்வீடு அப்புறப்படுத்தப்பட்டு நெடுஞ்சாலை நேராக போடப்பட்ட பின்னர் சாலை போக்குவரத்தை முறைப்படி தொடங்கியது சீன அரசு.
ஏன் சீன அரசு துணை வட்டாச்சியரை கொண்டோ, போலீசைக்கொண்டோ, விளம்பரவெறி கலெக்டரை கொண்டோ அவ்வீட்டை அகற்றாமல் 3 வருடம் காத்திருந்தது.?!
சீன சட்ட விதிகளின் படி "தனியார் ஒருவரின் நிலத்தை நில உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் எடுக்க முடியாது.
No comments:
Post a Comment