ஸ்டேட் வங்கி, ஜன தன் கணக்குகள், basic savings bank deposits (BSBD) கணக்குகள், பென்ஷன் கணக்குகள், சமூக சலுகைகளை அரசு தரும் கணக்குகள் மற்றும் மைனர் கணக்குகளுக்கு, குறைந்த பட்ச இருப்பு தொகை தேவை இல்லை என்று சொல்லி உள்ளது.
அது, குறைந்த பட்ச தொகையை அபராதமாக எடுத்து, நிறைய சம்பாதிப்பதாக வந்த செய்தியை அடுத்து, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும், குழுவில் ஒருவர், ஒரு வயதான மூதாட்டி, தன்னுடைய பணத்தை, குறைந்த பட்ச இருப்பு தொகை இல்லாமல், வங்கி வசம் இழந்து வருகிறார் என்று குழுவில் கட்டுரை போட்டிருந்தார். அதற்கான விளக்கம் இது.
இன்னும் விளங்க சொன்னால், basic savings bank deposits (BSBD) கணக்கு, முதலில் வங்கியில் ஆரம்பிக்க வேண்டும். அதாவது, இந்த கணக்கில் குறைந்த பட்ச இருப்பு தொகை தேவை இருக்காது. ஆனால், ATM கார்டு கொடுக்கும்போது, அதில் ஒரு நாளைக்கு 1௦௦௦௦ ரூபாய்தான் எடுக்க முடியும் என்ற நிபந்தனை வரலாம். அதனால், நம்முடைய குறைந்த பட்ச இருப்பு தொகையை ஸ்டேட் வங்கி எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால், முதலில் வங்கிக்கு சென்று, இந்த கணக்கை ஆரம்பிக்க வேண்டும். அதன் பின், கேஸ் agency வசம், வங்கி மானியத்தை இந்த கணக்கில் செலுத்த சொல்ல விண்ணப்பிக்க வேண்டும்( இதை உறுதி செய்து கொண்டு, புது கணக்கு ஆரம்பிக்க வேண்டும்). அது போல, வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கும்போது, எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கிறோம் என்று வங்கி மேலாளர் வசம் தெரிவித்து, தனக்கு குறைந்த பட்ச இருப்பு தொகை இல்லாத கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னால்தான், அந்த கணக்கு ஆரம்பிக்கப்படும்.
வங்கியின், குறைந்த பட்ச இருப்புதொகை தொல்லையில் இருந்து தப்பிக்க இதுவே வழி. (இது ஸ்டேட் வங்கி மேலாளர் ஒருவர் சொன்ன தகவல்)
நம்முடைய ஸ்மார்ட் போனில், தினமும் கொடுக்கும் இலவச 1 ஜிபி டேட்டா காலியாகும்போது, மொபைல் நெட்வொர்க் என்ற ஆப்ஷனை ஆப் செய்து வைக்க பழகுவோம். அல்லது, குறைந்த பட்ச மெயின் கணக்கில் கை வைக்கும், நெட்வொர்க் கம்பெனி.
அது போல, பஞ்சாயத்து, கார்ப்பரேஷன், முனிசிபாலிட்டி தண்ணீர் இனி 5 நாள், 1௦ நாளுக்கு ஒரு முறைதான் என்று சொல்லும்போது, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவோம். அது போல, வங்கி, குறைந்த பட்ச இருப்புதொகை ஸ்கீம் கொண்டு வரும்போது, நாம் மேலே சொன்ன வழிமுறையை கடைப்பிடித்து, நம் பணத்தை, நாம்தான் காப்பாற்றி கொள்ள வேண்டும்.
விழித்திருப்பவனுக்கே உலகம் !
No comments:
Post a Comment