தாஜ் மஹால் ஷாஜஹானால் கட்டப்பட்டதல்ல! அக்பரின் அவையில் நவரத்தினங்கள் என்று அழைக்கப்பட்ட ஒன்பது சிறப்பு மிக்க அவை அறிஞர்களில் ஒருவரான ராஜா மான் சிங் என்பவரின் வழி தோன்றலாம் ராஜா ஜெய் சிங்கிற்கு சொந்தமான தேஜோமஹாலயா என்று அழைக்கப்பட்டு வந்த இந்த சிவனின் ஆலயத்தை மும்தாஜின் கல்லறை ஆக்குவதாக கூறி வலுக்கட்டாயமாக பறித்து கொண்டது தான் ஷாஜஹான் செய்த சாதனை! ஆனால் உண்மையில் தனது பதினான்காவது பிரசவத்தின் போது எழுந்த சில சிக்கல்களால் மும்தாஜ் இறந்தது தற்போதைய மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள புர்ஹான்பூர் என்ற இடத்தில். மும்தாஜின் கல்லறையும் அங்கு தான் உள்ளது. அது ஆக்ராவில் இருந்து ஏறக்குறைய ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இறந்தவரின் கல்லறைகளை மீண்டும் தோண்டி எடுப்பதென்பது இஸ்லாத்தின் படி ஒப்புக் கொள்ள முடியாத ஒன்று. மேலும் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு சடலத்தை அடக்கம் செய்யப்பட்ட பல வருடங்களுக்கு பிறகு எடுத்து கொண்டு செல்வது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்று.
ஷாஜஹான் காலத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எந்த ஒரு வெளிநாட்டு பயணியும் இப்படி ஓர் கட்டிடம் கட்டப்படுவதற்கான எந்த ஒரு குறிப்பையும் எழுதி வைக்க வில்லை! ஷாஜஹானின் வரலாற்றை பாதுஷா நாமா என்ற பெயரில் எழுதிய அப்துல் ஹமீது லாஹோரி இதுபற்றி தனது நூலில் ஏதும் குறிப்பிட வில்லை! மேலும் மொகலாயர்களின் வரவு செலவு கணக்கு பதிவேடுகளிலும் கூட இந்த கட்டிடம் கட்ட செலவிடப்பட்டதாக எந்த தொகையும் குறிப்பிட படவில்லை! ஷாஜஹானின் 30 ஆண்டு ஆட்சி காலத்தில் சிறியதும் பெரியதுமாய் 40 போர்கள் நடந்துள்ளது! இத்தனை போர்களில் ஈடுபட ஏராளமான நிதி செலவிடப்பட்டிருக்க வேண்டும்! அப்படி நிதி நெருக்கடியின் போது இது போன்ற கட்டிடம் கட்ட நிதி எங்கிருந்து, எப்படி கிட்டியது???? இதுமட்டுமின்றி ஆக்ராவின் ஆட்சி பொறுப்பாளராக இருந்த ஔரங்கசீப் தனது தந்ததை ஷாஜஹானுக்கு எழுதிய கடிதத்தில் 300 வருடங்கள் பழமையான இந்த கட்டிடம் மழைகாலங்களில் சற்று ஒழுகுவதாகவும் மராமத்து பணிகள் செய்ய தகுந்த நிதி ஒதுக்க வேண்டும் என்று எழுதிய கடிதம் மொகலாயர்களின் revenue recordகளில் உள்ளது. அப்படி ஷாஜஹான் காலத்திலேயே 300 வருடங்கள் பழமையான கட்டிடமாக இருந்தது எந்த மாளிகை????
ஷாஜஹான், கல்கத்தா நகரில் குடியேறி இருந்த போர்த்துகீசியர்கள் மீது படையெடுத்ததால் தனது கஜானாவை காலியாக்கினான் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஷாஜஹான் பொதுவாகவே அதீத குடிபோதையிலேயே வாழ்ந்ததாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஷாஜஹானின் (Harem) என்று அழைக்கப்படும் அடிமை பெண்களின் அந்தபுரத்தில் 3500 மேற்பட்ட பெண்கள் இருந்தார்கள் என்றும். புருஷோத்தம் நாகேஷ் ஓக் என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். இது போன்ற ஒருவன் மனைவியின் மீது காதல் கொண்டு தாஜ் மஹால் போன்ற காதல் சின்னத்தை உருவாக்கியிருக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறுகிறார். இவர் True Story of the Taj Mahal என்ற புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
ஜாட் இன் மக்கள் சிவனை தேஜாஜி என்று அழைப்பர். ஆக்ரா என்ற பெயரே அந்த ஊரில் இருந்த அக்ரேஷ்வர் மஹாதேவன் என்ற சிவனின் ஆலயத்தினால் தான் வழக்கத்தில் வந்தது என்றும் கூறுவர். தேஜோ மாஹாலயா என்று இந்த ஆலயம் அழைக்கப்பட்டு வந்துள்ளது. மஹாலயா என்றால் பெரிய ஆலயம் என்று அர்த்தம். இது காலப்போக்கில் மருவி மஹால் அல்லது மஹல் என்று மாறியது. இது நாகநாதர் திருக்கோயில் என்ற வாதமும் இவ்வூர் மக்களால் முன் வைக்க படுகிறது. இந்த ஆலயத்தின் உச்சியில் பூர்ண கும்ப கலசம் மற்றும் திரிசூலம் இடம்பெற்றுள்ளது. மேலும் வேத முறைப்படி பிராகாரங்களும், ஆலயத்தின் உள்ளே நுழையும் முன் நீராடுவதற்காக படித்துறைகளும் யமுனை கரையில் அமைந்துள்ளது. இந்த மாளிகை எங்கும் பாகங்களின் உருவங்கள் மற்றும் தாமரை மலரின் சித்திரங்களும் நிறைந்துள்ளது. இஸ்லாமிய வழக்கங்களின் படி இது போன்ற சித்திரங்கள் ஹராம் என்பர். நிலவறை, சுரங்க பாதைகள் கொண்ட இந்த மாளிகை கண்டிப்பாக சமாதியாக மட்டும் இருக்க முடியாது.
No comments:
Post a Comment