மத்திய அரசு கடந்த 2016-ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தியது. இதையடுத்து, பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அவற்றை மக்களிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெற்றுக் கொண்டது.
இதைத்தொடர்ந்து, புதிய 2000, 500 ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், 200, 50 மற்றும் 10 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வெளியானது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி விரைவில் லாவண்டர் வண்ணத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இதற்கான மாதிரியை இன்று வெளியிட்டுள்ளது.
இந்த 100 ரூபாய் நோட்டுகள் லாவண்டர் வண்ணத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இதன் ஒருபுறம், பாரம்பரியம் மிக்க குஜராத் மாநிலத்தின் பதான் நகரில் உள்ள மகாராணியின் படிக்கிணறு அச்சிடப்பட்டு உள்ளது. இந்த கிணறு யுனெஸ்கோ பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படும். தற்போதுள்ள 100 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. #RBI NewCurrency
No comments:
Post a Comment