1) பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
2) கடுகை ஊற வைத்து அரைத்து தினமும் கை முட்டியில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து பின் கழுவி வர கை முட்டியின் கருப்பு குறையும்
3) எலுமிச்சை சாறு, தேன், பால், மூன்றையும் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பொலிவு பெறும்.
4) பேரிச்சம் பழத்தை பால் போட்டு காய்ச்சி தினமும் இரவு தூங்கும் முன் குடிக்க உடல் எடை அதிகரிக்கும்.
5) வெந்தையம், வேப்பிலை, பயத்த மாவு மூன்றையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து 20 நிமிடம் கழித்து குளித்தால் பொடுகு நீங்கும்.
6) சந்தனம், பன்னீருடன் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகப்பரு நீங்கும் .
7) வில்வ இலையை பொடி செய்து காலை வெறும் வயிற்றில் வாயில் போட்டு தண்ணீர் குடிக்க சர்க்கரை நோய் குறையும்.
8) கீழாநெல்லி, வல்லாரை இந்த இரண்டையும் சம அளவு அரைத்து தயிர் சேர்த்து 1 தேக்கரண்டி காலை, மாலை சாப்பிட்டு வர நீர்கடுப்பு குறையும்
9) ஆடாதோடை இலையை அவித்து தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வாயு தொல்லை குறையும்
10) ரோஜாபூ, கடுக்காய், ஜாதிக்காய், ஆகியவற்றை சேர்த்து அரைத்து சிறிதளவு சாப்பிட்டு தண்ணீர் பருகி வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
No comments:
Post a Comment