இந்த ஆண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் வரும் ஜூலை 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை உத்திராடம், திருவோணம் நட்சத்திரங்களில் நிகழ இருக்கிறது.
அன்றைய தினத்தில் நிலவை சுற்றி சிகப்பு நிற வளையம் தோன்றும் என்பதால் ரெட் மூன் என அழைக்கப்படுகிறது.
கிரகணம் ஏற்படும் நாளில் பௌர்ணமி வருவதால் இந்த நாள் மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சந்திர கிரகணம் :
சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து பூமி மறைத்துவிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
சூரியன், பூமி, நிலவு ஆகியவை மிகத் துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ, ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும்.
மிகப்பெரிய சந்திர கிரகணம் :
இந்த நூற்றாண்டின் மிக நீளமான இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவின் அனைத்து பகுதிகளில் உள்ளவர்களும் கண்டு ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திர கிரகணம் ஆரம்ப காலம் இரவு 11.54 மணி
சந்திர கிரகணம் மத்திம காலம் அதிகாலை 01.52 மணி
சந்திர கிரகணம் முடிவு காலம் அதிகாலை 3.49 மணி
சந்திர கிரகணம் அன்று என்ன செய்யலாம்?
உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும்.
கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டுவிட வேண்டும்.
ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.
கிரகணத்தின் போது நவகிரக துதியை பாராயணம் செய்யலாம். அதுபோலவே சந்திர கிரகணத்திற்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.
கிரகண விமோசன காலத்தில் அதாவது, கிரகணம் முழுவதும் முடிந்த பிறகு ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும்.
பின்பு, ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
கிரகணம் முடிந்ததும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.
கிரகண காலத்தில் உடலில் எண்ணெய் தேய்ப்பது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது.
கிரகண சமயத்தில் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். ஒரு பெண் இந்தச் சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும்.
சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனை துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு :
கர்ப்பிணிப் பெண்கள் சந்திர கிரகணத்தைப் பார்க்கக்கூடாது. கிரகணத்தின் போது உறங்கக்கூடாது. வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.
மேலும், கிரகண நேரத்தின் போது வெளியே சென்றால் அவருக்கும், அவர்களுடைய குழந்தைக்கும் பாதிக்கக்கூடியதாக சில கதிர் வீச்சுகள் ஏற்படும். இதனால் பிறக்கும் குழந்தைகளுக்கு சில ஊனங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
இதனை ஆராய்ந்து தான் சாஸ்திரங்கள் கிரகண காலத்திற்கென சில நியதிகளை வகுத்துள்ளன. இவற்றில் முக்கியமானவை கர்ப்பிணிப் பெண்களுக்குரியவை தான். கிரகண காலம் முடியும் வரை அறையை விட்டு வெளியே வரக்கூடாது. நகம் வெட்டக்கூடாது.
எந்த வேலையும் செய்யாமல் தெய்வ சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment