டாக்டர் ஒருவர் சொந்தமாக க்ளினிக் ஆரம்பித்தார். சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் பேஷண்ட் ஒருத்தர் கூட வரவில்லை. கட்டிட வாடகை, மின்சாரம், பணியாட்களுக்கு சம்பளம் இதற்கெல்லாம் பணம் இல்லாமல் மிகவும் அவஸ்தைப் பட்டார்.
ஒரு நாள் காலையில் பொமரேனியன் நாய்க்குட்டியுடன் ஒருவர் வந்தார். "டாக்டர்! நாலு நாளா இந்த நாய் சாப்பிடவே மாட்டேங்குது. எப்போப் பாத்தாலும் கத்திக்கிட்டே இருக்கு. என்னன்னு கொஞ்சம் பாருங்க" என்று சொல்ல, டாக்டர் டென்ஷனாகி "யோவ்! நான் நாய்க்கெல்லாம் வைத்தியம் பாக்கறவனில்லே. மனிதர்களுக்குத்தான் வைத்தியம் பார்ப்பேன். நாயைக் கூட்டிக்கிட்டு கெளம்புய்யா மொதல்லே" என்றதும் வந்தவர் அவர் பங்குக்கு டென்ஷனாகி கத்த ஆரம்பித்து விட்டார். சண்டை மிகவும் வலுவடைந்து, கைகலப்பில் போய் விடுமோ என டாக்டரின் சிப்பந்திகள் பயந்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு பெரியவர் வந்து இருவரையும் சமாதானம் செய்ய முற்பட்டார். நாய்க்குட்டியை அழைத்து வந்தவர் பெரியவரிடம், 'இந்த டாக்டர் நாய்க்கு வைத்தியம் பார்க்கிறேன்னு சொல்லிவிட்டு இப்போ பாக்க மாட்டேங்கறாரு ஐயா' என்றதும் அவரும் புரியாமல் மண்டையைப் பிய்த்துக் கொள்ள, கடைசியில் அங்கு ஒரு தவறு நடந்தது தெரிய வந்தது அனைவருக்கும். க்ளினிக்கில் உள்ள போர்டில் எழுதியிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பெயிண்டர் செய்த தவறால் வந்த வினை இது.
"இங்கு அனைத்து விதமான நாய்களுக்கும் நல்ல முறையில் வைத்தியம் பார்க்கப்படும்"
No comments:
Post a Comment