* ஆடி மாதம் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு திசை நோக்கி செல்லும். தஷிணாயண புண்ணிய காலம் ஆரம்பம்.
* அனைத்து அம்மன் கோவில்களிலும் விசேஷ பூஜைகளும், கூழ் வார்த்தலும் நடைபெறும்.
* ஊசி முனையில் தவம் செய்த பார்வதிக்கு சிவபெருமான் சங்கர நாராயணராக ஆடி உத்திரத்தன்று காட்சியளித்தார். இதுவே ஆடித் தபசாக கொண்டாடப்படுகிறது.
* ஆண்டாள் நாச்சியார் அவதரித்த பூரம், ஆடிப்பூரமாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
* கருடாழ்வார் அவதரித்த தினம் ஆடி சுவாதி.
* முதலையிடம் சிக்கிய யானை, ஆதிமூலமே என்று அழைக்க திருமால்தனது வஜ்ராயுதத்தால் யானையை காத்தது ஆடி மாதம்.
* விவசாயத்தை கப்பாற்றும் காவிரித்தாயை ஆடி 18-ஆம் நாளன்று பதினெட்டாம் பெருக்காக கொண்டாடுகிறோம்.
* ஆடிமாத பவுர்ணமி அன்று ஹயக்கீரிவருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அன்று வியாச பெளர்ணமியாகவும் கொண்டாடப்படூகிறது.
* ஆடி மாதம் வேப்ப மரத்தில் பிராணவாயு அதிகம் இருக்கும். வேப்பிலை கொழுந்துக்கு மருத்துவசக்தி அதிகம்.
No comments:
Post a Comment