Monday, July 9, 2018

"இலுப்பை"

‘ஆலை இல்லாத ஊருக்கு,
இலுப்பைப் பூ சர்க்கரை’ - பழமொழி
இலுப்பைப் பூவில் 73 சதவிகித அளவு சர்க்கரை உள்ளது. இதன் பூவிலிருந்து ஆல்கஹால் பிரித்தெடுக்க முடியும்.
இலுப்பை மரத்தின் இலைகள் மிகவும் சுவையானவை. இதனால், கால்நடைகள் இந்த மரத்தின் இலைகளை விரும்பி உண்ணும்.
இலுப்பை விதையில் இருந்து எடுக்கப்படும் இலுப்பை எண்ணெய்யில் நெய்க்கு இணையாக சத்துகள் உள்ளன. அந்தக் காலத்தில் இந்த எண்ணெயில்தான் பலகாரங்கள் தயாரிப்பார்கள். இந்த எண்ணெய் நீண்ட நாட்களுக்குக் கெடாது.
இலுப்பைஎண்ணெய் சோப் தயாரிப்பு, இருமல் மருந்து, நெஞ்சு வலிக்கான மருந்து, சதைப்பிடிப்புக்கான களிம்பு, வலி நிவாரணிகள் போன்றவை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
இலுப்பை எண்ணெயில சமைச்ச உணவை சாப்பிடும்போது, பக்கவிளைவு இருக்காது. சித்த மருந்து தயாரிப்புல, கூட்டுப்பொருளா இந்த எண்ணெயைப் பயன்படுத்தறாங்க.
இலுப்பை வேர், நாள்பட்ட ஆறாதப் புண், பசி இல்லாமை, காய்ச்சல், தேகச் சோர்வு இதுக்கெல்லாம் நல்ல மருந்து. இலுப்பைப் பிண்ணாக்குல புகைபோட்டா, கொசு பிரச்னை இருக்காது. மேலும், இலுப்பைப் பிண்ணாக்கைப் பொடியாக்கி குளியலுக்குப் பயன்படுத்தலாம். சேற்றுப்புண், விரை வீக்கம் இதுக்கெல்லாம் மருந்தாவும் பயன்படுத்தலாம்
இலுப்பை மரத்தில்தான் வவ்வால்கள் அதிகளவில் வசிக்கும். வவ்வால்கள் கொசுக்களைப் பிடித்து உண்ணும் பழக்கம் கொண்டவை.
அனைத்து மண்ணிலும் இலுப்பைவளரும். 10 ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கி 50 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கக்கூடியது. இலுப்பை மரங்கள் 100 ஆண்டுகள் கூட வளரும்.
மரத்தில் ஒவ்வொரு ஆண்டும், தை மாதம் இலைகள் கொட்ட ஆரம்பித்து, பங்குனி மாதக் கடைசியில் பூ விட்டு, சித்திரையில் பிஞ்சு இறங்க ஆரம்பித்து, ஆவணி-புரட்டாசியில் இலுப்பைக் கொட்டைகள் கிடைக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...