Sunday, July 8, 2018

கொஞ்சம் யோசிப்போம்.

நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் அந்த நகைக் கடை விளம்மரத்தில் சொல்வார். 100 கிராம் தங்கத்திற்கான விலை கிராமுக்கு 1999/-ரூபாய் வீதம் 3 வருஷத்திற்கு முன்பே கட்டி விட்டேன்
இப்போ என் பெண்ணிற்கு அதை வைத்து ஜாம் ஜாமென்று கல்யாணம் நடத்திடுவேன்.
இந்த கணக்கு படி பார்த்தால் நீங்கள் ரூபாய் 1,99 900/- மூன்று வருஷம் முன்னாலேயே கட்டி விட்டீர்கள். சரி தப்பு இல்லை.
இன்னிக்கு வட்டி 6% என்று வைத்துக் கொண்டாலும் மூன்று வருஷத்தில் வட்டி மாத்திரமே கிட்டதட்ட 40000/- ரூபாய்
இந்த பணம் உங்களுக்கு கிடைக்காது.
அது அப்படியே கடைக்காரருக்கு போய்விடும்..
இப்படி லஷ்மி சொல்வது போல் 5000 மக்கள் ஆளுக்கு 1,99,900 வீதம் கொடுத்திருந்தால் கடைக்காரரிடம் 99,95,00,000/-(தொண்ணித்து ஒன்பது கோடியே தொண்ணூத்தி ஐந்து லட்சம் ரூபாய் சேர்ந்து இருக்கும். இதன் மூன்று வருட வட்டி மட்டுமே 20,92,95,000/-
இந்த இருபது கோடி ரூபாயும் கடைக் காரருக்கே போகும்.
சரி நம் கணக்கை பார்ப்போம். மூன்று வருடத்தில் 236000 உங்கள் கையில் இருந்தால் அன்றைய விலையில் தங்கம் வாங்கிக் கொண்டால் இவர்கள் கூறும் சேதாரம் கீதாரம் போக நல்ல லாபமிருக்கும்.
இந்த ஸ்கீம் மூலம் உங்கள் வட்டி பணத்தை இழக்கிறீர்கள்.
இவர்கள் 1999/-ரூபாய்க்கு ஒரு கிராம் தங்கம் தருகிறார்கள் என்றால் நிச்சயமாக அது 18 காரட் தங்கமாகவே இருக்க வேண்டும்.
இல்லை தங்கத்தின் விலை குறைவாக இருந்த காலத்தில் வாங்கி இப்பொழுது வெளி கொண்டு வந்திருக்க வேண்டும்.
மூன்று வருட முடிவில் நீங்கள் நகையாகவே வாங்க வேண்டும்.. தங்க கட்டிகளாக தரமாட்டோம் என்று சொல்லி சேதாரம் 20% வரை வைத்துக் விற்கலாம்.
மும்பையில் சார்னி ரோட் ஸ்டேஷன் எதிரில் இருக்கும் ஸவேரி கடையில் இப்படிதான் தீபாவளி சமயம் 18 காரட் யங்கத்தை 22 காரட் என்று விற்று மாட்டிக் கொண்டார்கள்.
இல்லை தங்கம் விலை அதிகமாயிற்று. சொன்னவிலையில் தர முடியாது என்று சொல்லி ஏமாற்றுவார்கள்்
ஒரு வேளை தங்கத்தின் விலை குறைந்தாலும் உங்களுக்கு 100 கிராம் தங்கத்திற்கு மேல் தரமாட்டார்கள்.
எப்படி பார்த்தாலும் நஷ்டம் நமக்கே.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...