Monday, July 16, 2018

ஏன் பாட்டி இப்படி சொல்கிறாள் .

வடக்கு பக்கம்...
தலை வைத்து படுக்காதே
என ஏன் சொல்லி வைத்தார்கள்..?
வடக்கு பக்கம் தலை வைத்து 
படுக்காதேடா என்று பாட்டி அடிக்கடி எச்சரிப்பாள் பாட்டி. ஏன் பாட்டி இப்படி சொல்கிறாள் என்றெல்லாம் அப்போது யோசிப்பது இல்லை. அவள் சொல்வதை வகை வைப்பதும் இல்லை.

ஆனாலும் பின் நாளில் இது பற்றி தெரிய வந்த போது பாட்டி எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு சாதாரணமாக சொல்லியிருக்கிறாள் என்று நினைக்கையில் கொஞ்சம் வியந்து தான் போனேன்.
காந்தம், உலோகப் (இரும்பு போன்ற) பொருட்களையும், காந்த தன்மை கொண்ட பொருட்களையும் தன் வசம் இழுக்கும் சக்தி கொண்டது என்பது நாம் சிறு வயதில் பள்ளிகூட ஆய்வுகூடத்தில் செய்த செய்முறை சோதனைகள் மூலம் அறிந்து புரிந்து கொண்ட ஒன்று தானே.
வட துருவம் மற்றும் தென் துருவம் காந்தங்கள் இரண்டின் ஒத்த துருவங்கள் ஒன்றை ஒன்று விலகி கொள்ளும் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் தன்மைகளைக் கொண்டவையாகும். இதுவும் பள்ளிகூடத்தில் படித்ததே.
பூமியின் கிழக்கு பகுதி தினசரி உதிக்கும் சூரியனால் மெது மெதுவாக சூடாகி ஒரு உச்சத்தை அடைகிறது. அதே சமயம் மேற்கு பகுதி குளிர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் ஒரு நிலையான அதே நேரத்தில் வலிமையான, வெப்பமான மின்னோட்டம் நிலையாக கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசைக்கு சூரியனால் உருவாக்கப் படுகிறது.
இப்போது மின்னோட்டத்தின் திசைக்கு வலப்புறம் அதாவது வடக்கு திசை, நேர் மின்னோட்டதையும் இடதுபுறமான தெற்கு திசை, எதிர் மின்னோட்டதையும் பெறுகிறது. இதனால் பூமி ஒரு பெரிய காந்தம் ஆகிறது.
கூட்வே பூமியின் தன் சுழற்சியினாலும் இய்ல்பாக ஒரு காந்த புலனை பெற்று விடுகிறது.
பூமியின் வட துருவம் நேர்
மின்னோட்டம் உடையது. தென் துருவம்
எதிர் மின்னோட்டம் உடையது என்பது புரியபட்ட ஒன்று. இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்கும் செல்லும் போது நமது தலை நேர் மின்னோட்டம் கொண்டதாகவும் கால் எதிர் மின்னோட்டம் கொண்டதாகவும் ஆகிவிடுகின்றன.
நாம் தெற்கு பக்கம் தலை வைத்து
வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம் நமது எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும். காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் ராக இருக்கும்.
இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனை மாற்றி செய்யும் போது, நாம் பகல் முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும் பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.
எனவே தெற்கில் தலை வைத்து
படுப்பது உத்தமம். இந்த உண்மை தெரிந்து தான் அநாளில் பாட்டி சொன்னாளோ இல்லையோ தெரியாது. ஆனால் அவள் வடக்கே தலை வைத்து படுக்காதே என்று சொன்னதில் அர்த்தம் இருக்கிறது என்பது என்னவோ உண்மை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...