Tuesday, July 10, 2018

பொருள்களனைத்தும் தற்காலிகமாக நம்மை மகிழ்விக்கக்கூடும்.



குழந்தை பலூனை நோக்கித் தாவுகிறது.
பையன் சைக்கிள் கேட்கிறான்.
கல்லூரியில் படிப்பவன் டூவீலர் வேண்டும் என்கிறான். 
கட்டாயம் அதில் பின் சீட் வேண்டும் என்று வற்புறுத்துகிறான்.
மனைவி பட்டுச்சேலை கேட்கிறாள்.
நமக்கு ஒரு கார் இருந்தால் தேவலை என்று நினைக்கிறோம்.
இதெல்லாம் எதற்காக?
இன்பமாக மகிழ்ச்சியாக இருப்பதற்குத்தான்!
உலகத்தில் 
மக்கள் ஏன் செயல் செய்கிறார்கள்.?
அவசியத்தின் காரணமாக,
இன்னொருவனுக்காக,
சம்பளத்துக்காக,
இப்படிப் 
பல காரணங்களைச் சொல்லலாம்.
ஆனால்,
கடைசியில் வந்து நிற்பது மக்கள் மகிழ்ச்சியாக இருக்க என்னும் காரணம்தான்.
இந்த ஒரு காரணம்தான் எல்லா உந்துதல்களுக்கும் மூலகாரணம்.
மகிழ்ச்சிக்காகச் செயல் புரியும் மக்கள் வாழ்க்கையில் அந்த மகிழ்ச்சியைக் கண்டடைகிறார்களா?
அந்த நேரத்தில் ஏற்படும் 
அற்ப சந்தோஷத்தை மகிழ்ச்சி என்று மயங்கி ஏமாந்து விடுகிறோம்.
குழந்தை கடையில் ஒரு பொம்மையைப் பார்த்து, அது வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறது.
அந்த பொம்மையை 
வாங்கிக் கொடுத்தால்தான் 
அந்த குழந்தை மகிழ்ச்சியடையும் என்று வாங்கிக் கொடுக்கிறோம்.
ஒரு கைக்கடிகாரம் வாங்குகிறோம்.
பெருமையாகக் 
கட்டிக் கொண்டிருக்கிறோம்.
நம்முடைய நண்பர் ஒருவர் அதைவிட உயர்ந்த வாட்ச் கட்டிக்கொண்டு
நம்மைப் பார்க்கவருகிறார்.
நம்முடைய மகிழ்ச்சி பறந்து விடுகிறது.
ஜப்பானில் செய்தது என்று 
ஒரு மொபைல் போன் 
பத்தாயிரம் ரூபாய்க்குஒருவர் கொண்டு வந்து கொடுக்கிறார்.
இங்கே பனிரெண்டாயிரம் போட்டாலும் இப்படிக் கிடைக்காது என்று நண்பர்கள் சொல்கிறார்கள்.
அந்த மொபைல் போன் நமக்கு அளவற்ற இன்பத்தைத் தருகிறது.
அடுத்தநாள் இன்னொருவர் 
நம்மைப் பார்க்க வருகிறார்.
மொபைலை பார்த்துவிட்டு,
"என்ன விலைக்கு வாங்கினீர்கள்?" என்று கேட்கிறார்.
" பத்தாயிரம் ரூபாய்!"
ஏழாயிரத்து ஐநூறு தானே இதன் விலை?
ஏமாந்து விட்டீர்களே?
இதே கம்பெனி போன் போனவாரம்கூட நான் இன்னொருவருக்கு ஏழாயிரத்து ஐநூறுக்கு வாங்கிக் கொடுத்தேனே?
நாம் லாபமடைந்ததாக எண்ணி மகிழ்ச்சியடைந்த மொபைல்போன்,
இப்பொழுது 
நாம் ஏமாந்துவிட்டதாக எண்ணி வருத்தமயைக் காரணமாகி விடுகிறது.
இறைவனோடு நாம் அடையக்கூடிய இன்பத்தைப் பேரின்பம் என்றும்,
உலகத்தில் அடையும் 
அல்ப இன்பங்களைச் சிற்றின்பம் என்றும் பெரியவர்கள் பிரித்தார்கள்.
சிற்றின்பத்தைப் பேரின்பமாகக் கருதி மயங்கி விடுகிற காரணத்தினால்தான்,
வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் போகிறது.
ரொம்ப நீண்ண்ண்ண்ண்டு ....விட்டதே..
அருமையான காலை அற்புதமாக மலரட்டும்.
மீண்டும் நாளை சந்திப்போம்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...