Friday, July 6, 2018

பிளாஸ்டிக் அரிசியை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

ஒரு மூடை அரிசி வாங்கினால், அரிசி அனைத்தும் பிளாஸ்டிக் அரிசியாக இருப்பதில்லை. அதற்கென்று ஒரு ratio வைத்துள்ளார்கள். பிளாஸ்டிக் அரிசியை தவிர்க்க வேண்டுமானால், நாம் அனைவரும் நம் சொந்த ஊர்களில் விவசாயம் செய்யும் விவசாயிகளிடம் நேரடியாக வாங்கிக்கொள்ள வேண்டும். விவசாயிகளிடம் அரிசி இருக்கிற வரை எந்த கலப்படமும் சேருவதில்லை. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் இடைத்தரகர்கள் வழியாகவோ அல்லது வணிக நிறுவனங்கள் வழியாகவோ தான் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்படுவதாக கூறுகிறார்கள்.
நாம் சோற்றை மெண்டு சாப்பிடுவதில்லை. பெரும்பாலும் முழுங்கி விடுகிறோம். இதனால் நம்மால் பிளாஸ்டிக் அரிசியை கண்டறிவது கடினம். அரசு சொல்வதை போல, ஒவ்வொரு முறையும் இது தரமானதா என சோதித்து பார்ப்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது. எனவே இதை தவிர்க்க நாம் நேரடியாக விவசாயிகளிடம் அரிசியை வாங்குவதே சிறந்தது. சந்தையில் விவசாயிகள் அரிசியை விற்கமாட்டார்கள். நம் ஒவ்வொருவருக்கும் சொந்த ஊர் கிராமமாகத்தான் இருக்கும். நமக்கு தெரிந்த விவசாயி ஒருவரிடம் முன் தொகை கொடுத்தால், தரமான அரிசியை நம் வீட்டு வாசலுக்கு கொண்டு வந்து விடுவார்.
நேரடியாக விவசாயிடம் வாங்கும் போது, விலையும் குறையும், தரமான பொருளும் கிடைக்கும். இதனால் விவசாயியும் வாழ்வார். நீங்களும் வாழலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...