✾ மணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தபெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை.
✾ திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன.
✾ திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும்.
✾ ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே மணம் எனப்படும்.
✾ மணம் என்ற சொல்லுக்குக் 'கூடுதல்" என்பது பொருள். இதன் வேர்ச்சொல் மண் என்பதாகும். இன்று பொது நிலையில் மணம் என்பது நறுமணத்தைக் குறிப்பினும், பழங்கால வழக்கில் இச்சொல் பல பொருளை உடையதாக இருந்தது.
✾ மண் இயற்கையிலேயே மணம் உடையது. அதனை மண் மணம் என்பர். இது தமிழர் வழக்கு. இல்லறத்திற்கு நுழைவாயிலாக அமைவதனை 'மணம்" என்ற சொல்லால் குறிப்பிட்டதன் நோக்கம் மண்ணைப் (நிலத்தை) போல பொறுமை, அமைதி, எதையும் தாங்கும் வன்மை இவற்றை மணமக்கள் பெறுதல் வேண்டும்.
✾ மனமொத்து, வாழ்வு முழுவதும் மணம் பெற்று நிகழ்வதற்கு ஏதுவான இந்நிகழ்ச்சியை மணம் என்று பெயரிட்டனர். சிறப்பான, மேன்மையான ஒன்றைக் குறிப்பிட 'திரு என்ற அடை" கொடுத்து அழைப்பது தமிழர் மரபாகையால் இல்லற வாழ்வின் அடிப்படையாக அமையும் மணம் 'திருமணம்" என்று அழைக்கப்படுகிறது.
✾ திருமண சடங்கில் பல்வேறு சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் முக்கியமான பிறந்த நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா? என்பது பற்றிய சந்தேகம் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒன்றாகும்.
பிறந்த நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா?
✾ ஆண்கள் ஜென்ம நட்சத்திரமன்று திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றும், பெண்கள் ஜென்ம நட்சத்திரமன்று திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
✾ ராகு, கேது, புதன், சனி ஆகியவற்றின் ஆதிக்க நாட்களிலும் எண்கணித அடிப்படையில் திருமணத் தேதிகள் அமையுமேயானால் தம்பதியருக்குள் தகராறுகள் அதிகரிக்கும்.
✾ தனவரவில் தடைகள் உருவாகும். நிம்மதி குறையும். நிகழவேண்டிய சுபகாரியம் தாமதப்படும். குழந்தைகள் பிறப்பதில் தாமதம் ஏற்படும். எனவே மண்டபத்திற்கேற்ற நாள் பார்ப்பதை விட நமக்கு ஏற்ற நாளில் மண்டபம் அமைவதை மேற்கொண்டால் நல்ல வாழ்க்கை அமையும்.
✾ இருமனம் இணையும் திருமணத்தால் பெருமைகள் வந்து சேரும். இல்லையேல் மறுமாங்கல்ய பூஜை மூலமே மன மகிழ்ச்சி அடைய முடியும்.
No comments:
Post a Comment