Monday, July 16, 2018

தினகரனின்_சுயரூபம் #வெளிச்சம்_போட்டுக்_காட்டினாா்_ #அமைச்சா்_தங்கமணி

" சொத்து சம்பந்தமான வழக்கு
பெங்களூா் கோா்ட்டில் நடந்து கொண்டிருந்தபோது , சசிகலா குடும்பம் ஆட்சியைப் பிடிப்பதற்காக பெங்களூாில் ஒரு ஓட்டலில் ரூம் போட்டுப் பேசி உள்ளனா் .
இதனை அங்கிருந்த ஒரு போலீஸ்காரா் பதிவு செய்து கொண்டு வந்து அம்மா அவா்களிடம் கொடுத்ததால் , அவா்களின் சுயரூபம் தொிய வந்ததை அடுத்து சசிகலா உட்பட அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கினாா் .
சில மாதங்கள் கழித்து சசிகலா , அம்மா அவா்களிடம் , "எனது குடும்பம் இவ்வளவு பொிய துரோகம் செய்யும் என்று நான் நினைக்கவில்லை . என்னை மன்னித்து மீண்டும் ஏற்றுக் கொள்ளுங்கள் " என்று மன்னிப்புக் கடிதம் கொடுத்து அனுப்பினாா் .
மன்னிப்புக் கொடுத்து , மீண்டும் சசிகலாவை மட்டும் அம்மா அவா்கள் ஏற்றுக் கொண்டாா்கள்
Image may contain: 2 people
ஆனால் , கடந்த 2008 ஆம் ஆண்டே அம்மா அவா்கள் ,தினகரனைக் கட்சியை விட்டே நீக்கினாா்கள் .
இனிமேல் போயஸ் காா்டன் பக்கமே வரக் கூடாது ;
பொியகுளம் தொகுதி பக்கமே செல்லக் கூடாது ;
சென்னையிலேயே இருக்கக் கூடாது என கட்டளை இட்டாா்கள் .
அதுமுதல் அம்மா அவா்கள் உயிரோடு இருக்கும்வரை இருந்த இடம் தொியாத அளவிற்கு இருந்து வந்தவா் , இன்று அம்மா அவா்கள் இல்லை என்றதும் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நினைக்கிறாா் .
ஏன் தினகரனை நீக்கினாா் என்றால் , அம்மா அவா்கள் மீது திமுக ஒரு வழக்குத் தொடா்ந்தது . அந்த வழக்கில் தினகரனும் இருக்கிறாா் .
அப்போது அம்மா அவா்களுக்குத் தொியாமலேயே தினகரன் லண்டனில் ஒரு ஓட்டல் வாங்கி உள்ளாா் . அந்த ஓட்டலையும் சோ்த்து வழக்கு போடப்பட்டுள்ளது .
அதில் தினகரனும் ஒரு குற்றவாளியாக இருக்கிறாா் . தினகரன் அப்போதே முடிவு செய்து விட்டாா் . 'எப்படியாவது அம்மா அவா்களை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் .
அதன்பின் நாம் ஆட்சியைப் பிடித்து விடலாம்' என்று கருணாநிதியுடன் கைகோா்த்துக் கொண்டு செயல்பட்டுள்ளாா் .
கடந்த 2007 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது , கருணாநிதியுடன் பேசிய தினகரன் ,
" என்னையும் லண்டன் சொகுசு விடுதி ஓட்டலையும் வழக்கிலிருந்து விடுவித்து விடுங்கள் .
மற்றவா்களை எல்லாம் வழக்கில் சோ்த்துக் கொள்ளுங்கள் " என்று கூறியதும் ,
லண்டனில் உள்ள விலை மதிக்க முடியாத அந்த ஓட்டலை வழக்கில் இருந்து தி.மு.க.வினா் நீக்கி விட்டனா் .
ஒப்பந்தம் இல்லை என்றால் தினகரனையும் ஓட்டலையும் வழக்கிலிருந்து நீக்கி இருப்பாா்களா ?
அம்மா அவா்கள் இறந்த பிறகு ,
தமிழ் வருடப் பிறப்பையொட்டி கொறடா ,
எம்.எல்.ஏ.க்கள் உட்பட அனைவரும் தினகரன் வீட்டிற்குச் சென்று அவாிடம் ,
" நீங்கள் இந்த இயக்கத்திற்கு வந்த பிறகு பிரச்னைகள் அதிகம் வந்து விட்டது . ஆகையால் நீங்கள் இந்த இயக்கத்தை விட்டு ஒதுங்கி இருங்கள் .
முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி , ஓ.பன்னீா்செல்வத்தை வைத்து
நாங்கள் இந்த இயக்கத்தை நடத்திக் கொள்கிறோம் " என்று சொன்னோம் .
அதற்கு தினகரன் , " உங்களுக்கு 60 நாட்கள் கெடு கொடுக்கிறேன் . அதன்பிறகு நான் மீண்டும் எனது விஸ்வரூபத்தை எடுப்பேன் . அதற்குள் ஓ.பி.எஸ்.சிடம் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள் " என்றாா் .
" அதற்கும் மேல் தாமதமானால் என்னுடைய ஒரு முகத்தை மட்டும்தான் நீங்கள் பாா்த்திருக்கிறீா்கள் . எனது இன்னொரு முகத்தை நீங்கள் பாா்த்தது கிடையாது " என்று கூறி ,
என்னையும் , வேலுமணியையும்
பாா்த்து , " உங்கள் வீடு தேடி வந்து சட்டைக் காலரைத் தூக்கி உதைப்பேன் "
என்று சொன்னாா் .
மேலும் , அங்கிருந்து எழுந்து எங்களை அடிப்பதைப் போல் வந்தாா் .
இதற்கு மேலும் அங்கிருந்தால் அசிங்கமாகி விடும் என்று நானும் , வேலுமணியும் வெளியே வந்து விட்டோம் . எங்கள் பின்னே அனைத்து அமைச்சா்களும் வந்து விட்டாா்கள் .
தினகரன் முதல்வராவதற்குக் கனவு காண்கிறாா் . அம்மா அவா்களின் ஆத்மா இருக்கும்வரை சசிகலா குடும்பத்தில் எவரும் முதல்வராக முடியாது .
இந்த கட்சியில் உாிமை கொண்டாடுவதற்கு அவா்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ?
---------
அாியலூா் மாவட்டம் , ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற காவிாி நீா் மீட்புப் போராட்ட வெற்றி விளக்கப் பொதுக்கூட்டத்தில் ...
(14.7.2018)

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...