வகுப்பறையில் ஒரு மாணவியின் பேனா காணாமல் போகிறது. வகுப்பறையில் இருக்கும் ஒவ்வொருவரின் புத்தகப் பையையும் சோதனை செய்கிறார் ஆசிரியை.
ஒரு மாணவி மட்டும் தனது பையைக் கொடுக்க மறுக்கிறாள்.
அதனால், பேனாவை அந்த மாணவிதான் திருடியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார் ஆசிரியை.
அப்போது, தற்செயலாக அங்கே வரும் தலைமை ஆசிரியை, மற்றவர்கள் முன்பு அந்த மாணவி அவமானப்படுவதைத் தவிர்க்க, தனது அறைக்கு அழைத்துச் சென்று, பையைச் சோதனையிடச் செய்கிறார்.
புத்தகப் பையிலோ, வீணாகிப்போன, குப்பையில் வீசப்பட்ட உணவுப் பொருட்களுடன் ஒரு பை இருக்கிறது.
தலைமை ஆசிரியைக்கு அதிர்ச்சி. எதற்காக இப்படிச் செய்கிறாய் எனக் கேட்கிறார்.
"என் வீட்டில் இருப்பவர்களின் பட்டினியைப் போக்க" என்று பதில் சொல்கிறாள் மாணவி. சக மாணவிகள் சாப்பிடும்போது, வீணாக்கும் உணவை, யாருக்கும் தெரியாமல் சேகரித்து, வீட்டில் உள்ளவர்ளுக்காக அந்த மாணவி கொண்டு போகும் விஷயம் அப்போதுதான் தெரிய வருகிறது,
நெகிழ்ந்துபோகிறார், தலைமை ஆசிரியை.
இது, ஓர் ஈரானிய குறும்படம்.
உணவை வீணாக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக எடுக்கப்பட்ட படம்.
வலிமையான படம்!
No comments:
Post a Comment