வயல் என சொல்லபட கூடிய இடத்தில், மக்கள் சோறு உற்பத்திக்காக உழைக்கும் இடத்தை நேரடியாக ஆய்வு செய்ததில் மனம் வேதனை அடைகின்றது
வயல் எல்லாம் சேறும் சகதியுமாக கிடக்கின்றது , அதில் நம் திராவிட தமிழ்பெண்கள், இனமான பெரியார் சொன்ன விடுதலையினை இன்னும் அடையாத தமிழ்பெண்கள் காலில் ஷூ இன்றி, கையில் கிளவுஸ் இன்றி அந்த சேற்றில் உழல்கின்றனர்
மனம் அந்த கொடுமையினை சகிக்கவில்லை, இன்னுமா எடப்பாடி அந்த வயலை சேறும் சகதியுமாக வைத்திருக்கின்றார்? விலங்குகளிலும் கொடிய துன்பமாக அவர்கள் சேற்றிலே உழல்கின்றார்கள்
சேறும் சகதியுமான வயலை ஏன் காங்கரீட் போடவில்லை? தளம் அமைக்கவில்லை. குறைந்த பட்சம் வயல்களுக்கு இடையே தார் சாலை கூட இல்லை. இது மிகபெரும் அவமானம், வேதனை, வெட்கம்
இன்னும் 6 மாதத்தில் வயலெல்லாம் காங்கரீட் போட்டு தரப்படும், வயலில் வேலை செய்யும் பெண்கள்ளுக்கு ஷீவும் கிளவுஸும் தொப்பியும் கூலிங் கிளாசும் தரப்படும்.
பயிர் எல்லாம் வெயிலில் வாடுகிரது..எடப்பாடி ஒரு தென்னந் கூரை கூட போ டவில்லை...நாங்க ஆட்சிக்கு வரும்போது எல்லா வயல்வெளிகளில் concrete கூறை அமைப்போம்மோடி விவசாயிகளை வெயிலில் வேகவைத்து சேற்றில் நடக்க விட்டு மிகக் கடுமையாக முறையில் பார்ப்பன ஆதிக்க ரீதியில் கொடுமைபடுத்தி விவசாயம் செய்யவைக்கிறார். இன்னும் 6 மாதத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்து விவசாயத்தை ரத்து செய்வோம்.
No comments:
Post a Comment