எதையும் திட்டமிட்டு நல்வழியில் வாழ்ந்தவர்
கே. பி. சுந்தராம்பாள் அம்மையார் அவர்கள்,
கே. பி. சுந்தராம்பாள் அம்மையார் பள்ளிப் படிப்பு இல்லாதவர், கொடுமுடியின் அகண்ட காவேரியில் குதித்து குழந்தைகளோடு தற்கொலைக்கு முயற்சித்த தன் தாய் பாலாம்பாளுக்கு புத்தி சொன்னவர்,
தன் தம்பியுடன் தானும் ரயிலில் பாட்டு பாடி காசு சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றியவர், பிறகு நாடகங்களில் நடித்து சம்பாதித்தார், காதலித்து கிட்டப்பா என்பவரை மணந்தார், இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து கொஞ்ச நாளில் உடல் நலம் இல்லாமல் காலமானது,
நாடகங்கள் மூலம் அறிமுகமாகி பிற்பாடு திரைப்படத்தில் நுழைந்து வெறும் வயதானவர் வேடங்களில்தான் வந்து போனவர், இவருடைய சம காலத்தில் வாழ்ந்த இவரைவிட அழகான முன்னணி கதாநாயகி, கதாநாயகர்கள் வாழக்கையை வாழத் தெரியாமல் தாங்கள் சம்பாதித்தை குடி போதை, கும்மாளம், கெட்ட சகவாசம் என்று அனைத்தையும் சீரழித்தனர் திரைத்துறையில்,
ஆனால் அம்மையார் கே.பி.எஸ் அவர்கள் நேர்மை, ஒழுக்கம், ஆன்மீகத்துடன் வாழ்ந்துவந்தார்,
நிறைய பொருள் ஈட்டினார் பல நல்ல காரியங்களில் முதலீடுகள் செய்தார்; சொத்துகள் குவித்தார் அதன் பலனாக அளவில்லா தானங்களும் செய்தார்,
தன் தம்பி குடும்பத்திற்கு கொடுத்தது போக, இறுதியில் சுய சொத்துகளை அனைத்தையும் பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக் கோவில் முருகனுக்கு எழுதி வைத்தார்,
படிப்பு இல்லாவிட்டாலும் நல்லவர்களின் அறிவுரைகளை முழு மனதுடன் ஏற்று ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்தவர்,
No comments:
Post a Comment