விவசாய நிலத்தை எல்லாம் மார்க்கெட் போன நடிகர் நடிகைகளை வச்சி ரியல் எஸ்டேட் பண்ணும் போது தெரியல, விவசாய அருமை........
.
மாத்தி மாத்தி ஆண்ட மாநிலக் கட்சிகள் விவசாயத்தை காப்பற்ற என்ன நடவடிக்கை எடுத்தாங்கன்னு கேட்டா சொல்ல தெரியாது......
.
கொள்முதல் விலை நிர்ணயம் முதல், பாசனத்திற்கு தண்ணீர் வேண்டும் வரை எதையும் நியாயமா கேட்டும் கிடைக்கவில்லை, அவர்களும் அதற்கு மேல் வரிஞ்சு கட்டி கொண்டு தமிழக விவசாயிகளுக்கு உதவினர்களான்னு தேடிப்பார்த்தாலும் இல்லை.....
.
கார்ப்பரேட், கார்பரேட்ன்னு சொல்லி நீங்க எல்லாம் எங்க போய் சிக்குறீங்க, கட்சிக்காரன், கட்சிக்காரன் பினாமி, உள்ளூர் கட்ட பஞ்சாயத்து காரன், பெரிய அளவில் கட்சிகள் ஆதரவோடு வட்டிக்கு விட்டு சாப்பிடுறவன், தண்டல் காரன் ......
.
கக்கூஸ் காண்ட்ராக்ட் முதல், வண்டி ஸ்டான்ட், தரைகடை காசு வசூலிக்கிறவன்......
.
இப்படி பார்த்து பார்த்து போய் தானே சிக்குறீங்க.....வட்டிக்கு வாங்க நடையோ நடை நடக்குறீங்க, வங்கி கடனுக்கு நடையோ நடை நடக்குறீங்க......
.
அந்த மசோதாவில் அப்படி என்னதான் இருக்குன்னு கிராம சபை கூட்டம் போட்டு விவாதீங்க, பஞ்சாயத்து தலைவர்கிட்ட தமிழாக்கம் செய்த மசோதா வேணும்னு கேளுங்க, VAO, ஊர் தலைவர், கிராம முன்சீப் அவங்கள போய் வாங்கிட்டு வர சொல்லுங்க, கூட்டம் போட்டு ஊர்மக்களோடு சேர்ந்து விவாதீங்க.......
.
இன்னமும் இவுனுங்க தான் காப்பதுவான்னு இன்னிக்கு வேணாம் நம்பலாம், நாளைக்கு உன் நிலமும் பிளாட் தான்.......
.
அவன் சொல்றான், இவன் சொல்றன்னு போராட்டம் செய்வதை விட்டுவிட்டு, சட்ட உதவிகளை நாடி தெளிவு பெறுங்கள்......
உன்னை போன்று அவன் நல்லவனா இருந்தா, உனக்கு சட்ட உதவி செய்யணும், இல்ல வேளாண் மசோதாவில் உள்ள குறைகளை சொல்லி உனக்கு விழிப்புணர்வு தரணும்......
.
அதெல்லாம் இல்லாம நேரா வா, வயலில் இறங்கி போராடுவோம்னா, அப்போ தான் எனக்கு பப்ளிசிட்டி கிடைக்கும் என் கட்சிக்கு ஓட்டு விழும், பார்க்குறவன் அட அட இந்த மனுஷன் எப்படியெல்லாம் கஷ்டப்படுறாருன்னு அனுதாபம் வரும்னு, அவனுக்கு என்ன ஆதாயமோ அதைத்தான் பார்ப்பான்....
.
அத்துக்குப்புறம் உன் நிலைமை, தலைல துண்டுதான்.......இது போன்று போலி அரசியல், அரசியல்வாதிகளை நம்புவதை விட்டுவிட்டு யார் உண்மையாக உதவுவர்கள் என்று தெளிவு கொள்.....
No comments:
Post a Comment