மூத்த வழக்கறிஞர் ஒருவர் மரண தண்டனையிலிருந்து 46 குற்றவாளிகளை பாதுகாக்க நீதி மன்றத்தில் வாதிட்டார்..!
இடையில் அவரது உதவியாளர் உள்ளே வந்து ஒரு சிறிய காகிதத்தை வழக்கறிஞரிடம் கொடுத்தார்.
வக்கீல் இதைப் படித்துவிட்டு தன் பாக்கெட்டில் வைத்துவிட்டு வாதத்தை தொடர்ந்தார்...!
மதிய உணவு இடைவேளையின் போது, நீதிபதி அவரிடம் கேட்டார் ′ அந்த காகிதத்தில் என்ன தகவல் வந்தது?
வக்கீல் சொன்னார் என் மனைவி இறந்துவிட்டாள் என்ற தகவல். என்றார்.
நீதிபதி அதிர்ச்சியடைந்து, அப்போது இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் ஏன் வீட்டுக்கு செல்லவில்லை என கேட்டார்!
வக்கீல் சொன்னார்
என்னால் என் மனைவியின் உயிரை மீட்டுக் கொண்டுவர முடியாது, ஆனால் இந்த 46 சுதந்திர போராட்ட வீரர்களும் வாழவும் அவர்கள் சாகாமல் தடுக்கவும் என்னால் உதவ முடியும் என்றார்.
ஆங்கிலேயராக இருந்த நீதிபதி 46 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
அந்த வக்கீல் தான் சர்தார் வல்லபாய் படேல்..!
தன்னிகரற்ற தேச பக்தருக்கு சிலை வைத்ததில் தவறில்லை --
No comments:
Post a Comment