Monday, July 9, 2018

சொல் ஒன்று.. செயல் இரண்டு..

ராமசாமியும்.. குப்புசாமியும் இணைபிரியாத நண்பர்கள்.. ஒரே தேதியில் பிறந்த 73 வயது இளைஞர்கள்.. இரண்டு பேரும் கார் வைத்துள்ளார்கள்.. அவர்களே ஓட்டிச் செல்வார்கள்..
இரண்டு பேரும் தெரிந்த நண்பர் ஒருவரின் வீட்டுத் திருமணத்திற்கு சென்றார்கள்..
திருமண வீட்டில் நண்பர்ஒருவர் இருவரையும் பார்த்து எப்படி வந்தீர்கள்?. என்று கேட்டார்.
காரில்தான்.. செல்ஃப் டிரைவிங்தான் என்றார்கள்.
உடனே நண்பர் அப்படியா என்று கண்களை அகலத் திறந்து 73 வயதில் நீங்களே கார் ஓட்டுகிறீர்கள் என்றால் கிரேட்தான்.. சான்சே இல்லே.. நான் 60 வயசுல கூட ஓட்ட முடியலே.. என்றார்.
திருமண வீட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த குப்புசாமிக்கு அந்த நண்பர் சொன்ன வார்த்தை ஒலித்துக் கொண்டே இருந்தது.. அப்படியானால் 73 வயதில் ஓட்டுவது கஷ்ட்டமோ?.. என்று நினைத்தவுடன் லேசாக ஸ்ட்டியரிங் பிடித்த கை நடுங்கியது.
இனிமேல் ஓட்டக் கூடாது.. பேசாமல் டிரைவர் போட்டுக் கொள்ளவேண்டும்.. இல்லை. வாடகை கார்தான் என்று முடிவு எடுத்தார்.
ராமசாமியோ.. நண்பர் சொன்ன சொல்லைக் கேட்டு மிகுந்த சந்தோஷம் அடைந்து.. ஆஉறா..நாம் 80 வயது தாண்டினாலும் கார் ஓட்டவேண்டும்.. மற்றவர்களை வாயைப் பிளக்க வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து வழக்கமாக போகும் வேகத்தை விட 10 கிலோ மீட்டர் கூட்டி.. ஏக்சிலேட்டரை அழுத்தினார்..
சொல் ஒன்றுதான்.. செயல் இரண்டாகிவிட்டது.
இதுதான் வாழ்க்கை.. எதையும் பாசிடிவ்வாக எடுத்துக் கொண்டால். நமது வாழ்க்கை முழுவதும்.. மகிழ்ச்சிதான்..
காலை வணக்கம். வாழ்க வளமுடன்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...