🌚🌚🌚🌚🌚🌚🌚🌚🌚
*அமாவாசை நல்ல நாளா ? கெட்ட நாளா ? –* *ஒரு ஆன்மீக ஆய்வு*
🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑
*அமாவாசை நல்ல நாளா ? கெட்ட நாளா ? –* *ஒரு ஆன்மீக ஆய்வு*
🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑
🌞தமிழக மக்களில் சிலர் அமாவாசை ஒரு மிக சிறந்த நாள் என்று கருதி அன்றைய தினத்தில் புதிய தொழில் தொடங்குவது, புதிய வாகனங்கள் வாங்குவது என பல நல்ல செயல்களை செய்வதுண்டு. இன்னும் சிலர் அமாவாசை என்பது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கக்கூடிய நாள் ஆகையால் அந்த நாளில் எந்த நல்ல காரியமும் செய்யக்கூடாது என்று கருதுவதுண்டு. இப்படி அம்மாவாசையை பற்றி இருவேறு கருத்துக்கள் இருக்கையில் உண்மையில் அமாவாசை நல்லநாளா இல்லை கெட்ட நாளா என்று பார்ப்போம் வாருங்கள்.
பொதுவாக தன் இன்னுயிரை பிரிந்த ஆத்மாக்கள் அனைத்தும் நிலவின் ஒளியில் இருந்தே தங்களுக்கு தேவையான உணவை பெறுகின்றன என்பது நம்பிக்கை. ஆனால் அமாவாசை அன்று நிலவின் ஒளி இல்லாததால் உணவுக்காக தங்களது ரத்த பந்தங்களான உறவுகளை தேடி அவர்கள் வருவதாக ஒரு நம்பிக்கை. அன்றைய தினத்தில் நாம் நமது முன்னோர்களுக்கு படையலிட்டு அவர்களின் பசியை போக்குவதன் மூலம் அவர்களின் பறிபூரண ஆசிர்வாதம் நமக்கு கிடைக்கும்.
இறந்தவர்களே சூட்சுமமான முறையில் பூமிக்கு வந்து தங்கள் சந்ததியினருக்கு ஆசி வழங்குவதால் அமாவாசை ஒரு மிக சிறந்த நாளாகவே கருதப்படுகிறது. அமாவாசை அன்று நம் குலதெய்வத்தையும் முன்னோர்களையும் வணங்கிவிட்டு தொடங்கும் எந்த ஒரு காரியமும் சிறப்பாக முடியும் என்பது நம்பிக்கை.
அறிவியல் ரீதியாக பார்க்கையில் அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இருப்பதால் அன்றைய தினத்தில் ஒரு புதுவிதமான சக்தி பூமியில் ஏற்படுகிறது. இந்த நன்னாளில் ஜீவ சமாதிகளிலும் ஏதோ ஒரு புதுவித சக்தி தோன்றுவதாக அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் அம்மாவாசை அன்று ஏழை எளியோருக்கு உணவளிப்பது மருத்துவ செலவிற்கு உதவுவது போன்ற நல்ல காரியங்களை செய்வது நல்லது. எல்லா மாதங்களிலும் அதை செய்ய முடியாதவர்கள், வருடத்தின் சிறந்த அமாவாசை என்று கருதப்படும் ஆடி அமாவாசை, தை அம்மாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகளில் ஏழைகளுக்கு பசியாற உணவளிப்பது புண்ணியத்தை சேர்க்கும்.
*🌞ஓம் நமசிவாய*🌞
No comments:
Post a Comment