Thursday, July 12, 2018

அடிக்கடி உறுதிப் படுத்திக்கொள்...*

*வெற்றியோ தோல்வியோ என்பதல்ல வாதம்...*
*ஆடுகளத்தில் நீ இருக்கிறாயா என்பதை மட்டும் அடிக்கடி உறுதிப் படுத்திக்கொள்...*
*உயரே தொங்கும் மாங்காய்க்காக கல்லுயர்த்தும் சிறுவனை கவனித்துப் பாா்...*
*கையெறியும் கற்கள் தோல்வியைத் தழுவுகின்றவே என்று கை விட்டுப் போவதில்லை எந்நாளும்...*
*கடைசியில் ஒரு காயாவது வீழும்...*
*அதுவரை களைப்படைவதில்லை...*
*அவன் கரமும் மனமும்...*
*உன் தோல்விகளைக் கற்களாக்கி...கவனம் சிதறாமல்...*
*வெற்றிக்கனியைக் குறி பார்த்து எறிய கற்றுக் கொள் அவனிடம்...*
*எத்தனை முறை கல்லெறிப்படுகிறது என்பதல்ல கணக்கு...*
*கனி கை வசப்படுகிறதா என்பதில் இருக்க வேண்டும் உன் கவனம்...*
*வெற்றியைக் கொண்டாட எவராலும் இயலும்...*
*தோல்வியை ஏற்று துவளாதிருக்க ஒரு சிலரால் மட்டுமே முடியும்...*
*அந்த ஒரு சிலரில் ஒருவனாக...நீ இருப்பின் வெற்றிக்கோப்பை விரைவிலேயே உன் கையில் கிட்டும்...*
*வெற்றி முழக்கம் உன் வீட்டுக் கதவைத் தட்டும்...*
*வெற்றி நிச்சயம்*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...