Friday, July 6, 2018

சிலைக்கடத்தல்.

ஆலயங்களின் ஊழல்களை வெளிக்கொண்டுவருவது என்பது அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளை பகைத்துக்கொள்வதற்க்கு சமமானது.
மாண்புமிகு நீதியரசர் #மகாதேவன் அவர்கள் உத்தரவு பேரில், ஐ.ஜி #பொன்மாணிக்கவேல் இவ்வளவு தைர்யமாக செயல்படுவதே பெரியவிசயம்.
சுரனையற்ற இந்துக்கள் சமூகத்தில், தம் பண்பாடு, கலாச்சாரம், மரபின் அடையாளங்கள் எக்கேடு கெட்டால் என்ன என்று மனநிலை உள்ள ஒரு சமூகத்தில், அரசியல்வாதிகளை பகைத்துக்கொண்டு தைர்யமாக செயல்படுவது தலைவணங்கக்தக்கது.
இன்னுமே இந்த சமூகத்திற்க்கு #அறமற்றதுறை பற்றி புரியவில்லை. இது ஒரு மர்மமாளிகை போன்றது.அனைத்து ஊழல்களையும் திறம்பட செய்வதற்க்கு அனுபவம் உள்ளத்துறை இது.
இங்கு பொதுவாக பக்தர்களிடம் நேரடி தொடர்பில் உள்ள அர்ச்சகர் 10 ருபாய் கேட்டார், 100 ரூபாய் கொடுத்தால் மாலை தந்தார் என்ற புலம்பங்களை கேட்டிருப்பீர்கள். இந்தளவே மிகப்பெரிய படித்த மேதாவிகள் முதல் பாமர மக்கள் வரை சிந்தனை உள்ளது.
ஆனால், கோயில்களில் மக்களிடம் நேரடி தொடர்பு உள்ளாத மிகப்பெரிய மாபியா கும்பல்கள் உள்ளது.
பெரிய கோயில்கள் என்றால் உள்ளூர் குண்டர்களுக்கு கோயில் சார்ந்த காண்ட்ராக் கொடுத்து அறமற்றதுறை அதிகாரிகள் தங்களை பாதுகாத்துக்கொள்வார்கள். கோயிலில் ஏதேனும் பிரச்சனை என்றால் இந்த உள்ளூர் குண்டர்கள் மூலம் மிரட்டல், கட்ட பஞ்சாயத்து, சமாதானம் என்று கமுக்கமாக முடித்துக்கொள்வார்கள்.
எனவே அறமற்றதுறையை அசைத்து பார்ப்பது சாதாரண விஷயமல்ல.
இந்நிலையில் #சிலைதிருட்டில் நேர்பையாக பொன்மாணிக்கவேல் செயல்படுவது சாதாரண காரியமல்ல.
ஏனெனில் கிராமம் முதல் நகரம் வரை, சிறியகோயில் முதல், பெரியகோயில் வரை, கோயில் சொத்துகளை அனுபவிக்காக அரசியல்வாதி, முக்கியஸ்தர், ஊர் பெரியமனிதர், சாதிதலைவர், வியபாரி, தொழிலதிபர் என எவரும் கிடையாது.
எனவே அரசியல்வாதிகள் சிலைதிருட்டு வழக்குகளை நீர்த்துப்போகவே செய்வார்கள்.முடிந்தால் உத்தரவு இட்ட நீதிபதி மேலேயே களங்கம் ஏற்படுத்த முயல்வார்கள்.
ஏனெனில் அறமற்றதுறை அதிகாரிகளின் ஊழல்களே, இந்த அரசியல்வாதிகளையும், உள்ளூர் குண்டர்களையும், சாதி தலைவர்களையும் நம்பியே நடக்கின்றது.இருவருக்குள்ளும் பரஸ்பர புரிந்துணர்வு அப்படி.
எப்படி காவல்துறையில் தவறு நடந்தால், சாதாரண Pc யை பலியாக்கிவிட்டு, உயர் அதிகாரிகள் தப்பித்துவிடுவார்களோ,
அப்படி இதுவரை கோயில் சார்ந்த தவறுகளில் உலக விபரம் அறியா குருக்களையும், ஓதுவாரையும், மெய்காவலையும் பலியாக்கிவிட்டு தப்பிவந்த அறமற்ற துறை அதிகாரிகள், முதன் முதலாக திரு. பொன்மாணிக்கவேல் அவர்கள் நேர்மை நடவடிக்கையால் அறமற்றதுறை கதிகலங்கிவருகின்றது.
ஆனால் இதனை தொடர, அரசியல்வாதிகளும், சாதி தலைவர்களும், தொழில் அதிபர்களும், உள்ளூர் குண்டர்ளும் விடமாட்டார்கள்.
ஏனெனில் ,சிலைதிருட்டு, கோயில் சொத்துக்களை கொள்ளையடிப்பது என்பது ஒரு தொடர் சங்கிலி.
ஒரு இடத்தில் இந்த சங்கிலியை இழுத்தால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும், உள்ளூர் குண்டர்களும் அதிகாரிகளும் இதில் சிக்கவேண்டி வரும்.இவர்கள் எல்லோருமே நெற்றியில் பொட்டு வைத்த பக்திமான்கள் சமூக பார்வையில்.
நிலை இவ்வாறு இருக்க, எவ்வாறு #அரசாங்கம்ஒத்துழைக்கும்.
கடந்த காலத்தில் விடுதலைபோராட்டத்திற்க்கு எதிர்த்து போரிட்டதுபோன்று தியாகம் செய்தாலன்றி அறமற்றதுறையிடம் இருந்தும் அரசியல்வாதிகளிடம் இருந்தும் நம் கோயில்களை காப்பாற்ற முடியாது .
எனவே இந்துக்களே ,கோயிலில் சுண்டல் வாங்கி சாப்பிட்டுவிட்டு, எதிர்காலத்தில் 2018 ல் பொன்மாணிக்கவேல் என்று ஒருவர் சிலை திருட்டை விசாரித்தார் என வரலாறு பேசிவிட்டு,
அடுத்து ஒரு கை சுண்டல் வாங்கிக்கொண்டு நடையைக் கட்டுவோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...