சமீபத்தில், தமிழக மக்களை முட்டாள்களாக நினைத்துக்கொண்டு செயல்படும், (அவரது ரசிகர்கள் வேண்டுமானால், முட்டாள்களாக இருக்கலாம்)ரஜினிகாந்த், காவல்துறையினரை பொதுமக்கள் தாக்குவது தவறு என்றும், தனியாக சட்டம் இயற்றி, அவ்வாறு செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும், தமது திருவாய்(?) மலர்ந்து அருளியிருக்கிறார்....
எனவே, ரஜினிகாந்தால், மிகவும் போற்றப்படும் காவல்துறையை, அதன் பணிகளை மதிப்பீடு செய்து பதிவிடுவது அவசியமாகி விட்டது.
காவல்துறை, அரசின் பல துறைகளைப்போன்ற ஒன்றுதான்.. ஆனால், பொதுமக்கள் நலனோடு ஒருங்கிணைந்து இயங்குவதால் அதன் பணி முக்கியத்துவம் பெறுகிறது.
சட்டம் ஒழுங்கினை பராமரித்தல், திருட்டு, கொள்ளைக்காரர்களை பிடித்து , பொருளை இழந்தவர்களுக்கு திருப்பி அளித்தல், சட்டவிரோத சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்தல், போக்குவரத்தினை ஒழுங்கு செய்தல், பெரிய மனிதர்களுக்கு பாதுகாப்பு அளித்தல், லஞ்ச ஊழலை ஒழித்தல், மக்களை பாதுகாத்தல் என்று பல பணிகள் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
#சட்டம் ஒழுங்கு பராமரிப்பு: இதில், 90 சதவீத காவலர்கள், அதிகாரிகள், சட்டவிரோத கட்டப்பஞ்சாயத்து, கத்துவட்டி, ரியல் எஸ்டேட் மாஃபியாக்களோடு தொடர்பு உடையவர்களாக இருக்கின்றனர்.. இந்த சட்ட விரோத நபர்களில் பெரும்பாலோர் அரசியல்வாதிகளாக இருப்பதால், போலீஸ் அதிகாரிகள், இவர்களை, “அண்ணே” “தம்பி என்று நெருங்கிப்பழகுவார்கள்.. இவர்களால் பல “பயன்”களையும் அடைவார்கள்... இந்த மாஃபியா கும்பலால் பாதிக்கப்பட்டு காவல் நிலையத்திற்கு வரும் சாமான்ய மக்கள் படும் துயரமும், அவமானமும் சொல்லில் அடங்காது. ஒரு ரியல் எஸ்டேட் அதிபரிடம் லட்சக்கணக்கில் ஏமாந்த அப்பாவி, காவல்துறையை அணுகினால், அவமானம், புறக்கணிப்பு, வேதனை என அனைத்தும் நிகழும். ஆனால், ஏமாற்றியவன், வெள்ளை வேட்டி சட்டையுடன் இன்ஸ்பெக்டருடன் அன்னியோன்யமாக பேசிக்கொண்டிருப்பான்...
சமீபத்தில், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு ரவுடி பிறந்தநாளில் அவனுக்கு கேக் ஊட்டியது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.. அவர், மாட்டிக்கொண்டார்.. பிறர் மாட்டவில்லை.. அதுதான் வித்தியாசம்.
#திருட்டு தடுப்பு: எனது உறவினருடைய அனுபவம். அவரது வீட்டில், 35 சவரன் நகை திருடுபோனது. அந்தப்புகாரை, எஸ்.பி.வரை மூன்று மாதங்கள் அலைந்தும் பதிவு செய்யவே முடியவில்லை. அவமானம், அலைக்கழிப்பு தாளாமல், நகை போனால் போகட்டும் என்று விட்டுவிட்டார். இதில் திருடன், போலீஸ் பங்கு இருக்குமோ என்ற சந்தேகம் வருவது இயல்பு. சட்டப்படி புகார் பதிவு செய்ய வேண்டிய காவல்துறை, பலத்த சிபாரிசோ, லஞ்சப்பணமோ இல்லாமல் நடவடிக்கை எடுப்பதே இல்லை என்பதே உண்மை. அப்படியே ஒரு திருட்டை கண்டுபிடித்தாலும், திருட்டுப்போன நகைகளில் பாதி, அதிகாரி மனைவிக்கு போய் விடும்.
சட்டவிரோத சம்பவங்கள் #நடைபெறாமல் தடுத்தல்:
இதில்தான், காவல்துறைக்கு பெருத்த வருமானம். திருட்டு லாட்டரி, குட்கா, டாஸ்மாக் கள்ள வியாபாரம், மணல் திருட்டு போன்றவற்றுக்கு உறுதுணையாக இருந்து, கல்லா கட்டி வாழ்கிறார்கள். ஒன்றிரண்டு பேர் விதிவிலக்காக இருக்கலாம்.
போக்குவரத்து #ஒழுங்கு படுத்துதல்:
மக்கள் அனைவருக்கும் இதில் நடைபெறும் அக்கிரம்ம் அநியாயம் தெரியும்.
பெரியமனிதர்களுக்கு, தேவைக்கு அதிகமாக பாதுகாப்பு வழங்கி, அவர்களை மனங்குளிரச்செய்து, தமக்கு தேவையான பதவி, ட்ரான்ஸ்பர் போன்ற சலுகைகளை பெற்றுக்கொள்வார்கள்....
லஞ்சம், பெருத்து, புழுத்துப்போன துறையாக காவல்துறை இருப்பது அனைவரும் அறிந்ததே.
அரசியல்வாதி, பதவியில் இருப்போர், பணம் தருவோர் தவிர வேறு யாருக்கும் போலீஸ் நிலையத்தில் மரியாதை இருக்காது. அதிலும் அழுக்கு உடை ஏழைகள் என்றால், வாடா போடாதான்....
அடிப்பதற்கு இவர்களுக்கு உரிமை இல்லை.. ஆனால், பணம் வாங்கிக்கொண்டு, அவர்களுக்கு வேண்டாதவர்களை அடி பின்னி எடுப்பார்கள்...
நியாயம், சட்டம், மனிதாபிமானம், மரியாதை, நேர்மை, ஒழுக்கம் போன்ற எந்த நல்ல குணங்களும் இருக்காது இவர்களிடம்....
பேராசை, பெண்ணாசை, பணத்தாசை, அரசியல்வாதிகளிடம் அடிமைத்தனம், பொய்வழக்கு, குடித்தல், போன்ற அனைத்து தீமைகளும் இவர்களிடம் உண்டு...
ஒவ்வொரு அதிகாரியும், கார், பங்களா, சொத்து, நகைகள் , பிள்ளைகளின் வெளிநாட்டு கல்வி, மருத்துவக்கல்வி, ஆடம்பர வாழ்க்கை என்று வாழ்வது எப்படி?
ஏதாவது விதிவிலக்காக, ஆங்காங்கே ஒன்றிரண்டு நல்ல காவலர்களும், பெரிய அதிகாரிகளும் இருக்கலாம். ஆனால் 90 சதவிகித காவல்துறை நான் சொல்லும் இலக்கணங்களுடன்தான் இயங்கி வருகின்றது...
எவரையும் ஒருமையில் அழைக்கும் அதிகாரம் இவர்களுக்கு யார் தந்தது?
அப்பாவிகளை அடிக்கும் அதிகாரம் எப்படி வந்தது?
ரஜினி போன்ற பெரிய மனிதர்களுக்கு, கால்பிடித்து விடும் காவல்துறையை ரஜினிக்கு மிகவும் பிடிக்கலாம்.
காவல்துறை, உண்மையிலேயே மக்களின் நண்பர்களாக நடந்து கொண்டால் எல்லோருக்கும் பிடிக்கும்.
என்று விடிவுகாலமோ?
No comments:
Post a Comment