ஒரு நாட்டின் மந்திரி ஒரு சேவகனைக் கூப்பிட்டு, நாளை காலையில் நீ வீட்டிலிருந்து அரண்மனைக்கு வேலைக்கு வரும் போது தலையில் வெள்ளைத் துணியால் ஒரு கட்டு போட்டுக் கொண்டு வா! வழியில் யாராவது என்ன கட்டு என்று கேட்டால், தலை வலி என்று மட்டும் சொல். பின் நடந்தவற்றை முழுவதையும் மன்னரிடம் வந்து சொல் என்றார்.
மறுநாள் சேவகனும் அதே போல் செய்தான். அரண்மனைக்குள் நுழைந்து மன்னனைச் சந்தித்து வணங்கி நின்றான். மன்னர் கேட்டார், தலையில் என்னப்பா கட்டு? மன்னா, தலைவலி என்றான் சேவகன்.
மன்னர் சொன்னார், கடுக்காயை அரைத்து அதில் கொஞ்சம் ஓமம் கலந்து நெற்றியில் தடவு சரியாகிடும்.
அது சரி இப்ப ஏன் இங்கு வந்தாய்?
மன்னர் சொன்னார், கடுக்காயை அரைத்து அதில் கொஞ்சம் ஓமம் கலந்து நெற்றியில் தடவு சரியாகிடும்.
அது சரி இப்ப ஏன் இங்கு வந்தாய்?
மந்திரி வரச்சொன்னார் வந்தேன். ஏன் மந்திரி என்னைப் பார்க்கச் சொன்னார்?
இன்று காலை வீட்டிலிருந்து கிளம்பியது முதல் என்ன நடந்தது என்று உங்களிடம் சொல்லச் சொன்னார் என்று சொல்லி சேவகன் முழுமையாக விளக்கினான்,
இன்று காலை வீட்டிலிருந்து கிளம்பியது முதல் என்ன நடந்தது என்று உங்களிடம் சொல்லச் சொன்னார் என்று சொல்லி சேவகன் முழுமையாக விளக்கினான்,
காலையில் தலையில் கட்டு போட்டதும் என் மனைவி கேட்டால் ஏன் கட்டுனு? தலைவலினு சொன்னேன். கேழ்வரகுப் பத்துப் போட்டுட்டுக் கிளம்புங்க என்றாள்.
வீட்டை விட்டு வெளியே வந்ததிலிருந்து அரண்மனைக்கு வரும் வரை நான் பார்த்த 86 பேரில் 72 பேர் தலையில் என்னவென்று கேட்டார்கள் தலைவலினு சொன்னேன். ஆளுக்கொரு வைத்தியம் சொன்னார்கள்.
அரண்மனைக்குள் நுழைந்த பின்னும் 16 பேர் கட்டினைப் பற்றி விசாரித்தார்கள் பதினாறு வைத்தியம் கிடைத்தது. நீங்களும் ஒரு மருந்து சொல்லியிருக்கீங்க.. இப்ப நான் எதைச் செய்யணும்?

மன்னருக்குக் குழப்பம். இதை ஏன்ப்பா என்னிடம் வந்து கேட்கிறாய்? மந்திரி குறுக்கிட்டார்.
மன்னர் மன்னா, நேற்று காலையில், நீங்கள் ஒரு சந்தேகம் கேட்டீர்கள். அதை ஆதாரத்தோடு நிரூபிக்கச் சொன்னீர்கள். அதை உங்களிடம் நிரூபிக்கவே இதைச் செய்தேன் என்றாராம்.
மன்னர் மன்னா, நேற்று காலையில், நீங்கள் ஒரு சந்தேகம் கேட்டீர்கள். அதை ஆதாரத்தோடு நிரூபிக்கச் சொன்னீர்கள். அதை உங்களிடம் நிரூபிக்கவே இதைச் செய்தேன் என்றாராம்.
மன்னர் கேட்ட சந்தேகம் இது தான். “ நம்ம நாட்டில் அதிகமாகப் பார்க்கப்படும் தொழில் என்ன?
மந்திரி சொன்ன பதில் வைத்தியம்/மருத்துவம். 😜😜😜
மந்திரி சொன்ன பதில் வைத்தியம்/மருத்துவம். 😜😜😜
இன்னிக்கு வரை நோயாளிகளின் பெரிய பிரச்சினை இது தான். எல்லாரும் எல்லா வியாதிக்கும் ஒரு வைத்தியம் சொல்லிப் படுத்துவது தான். நோயை விட இவர்கள் சொல்லும் மருத்துவத்திற்கு தான் அதிகம் பயப்படுகிறார்கள்.
இந்தக் கூத்திற்கிடையே இப்ப கூகுளும் யூட்யூபும் வேற நாட்டில் எல்லாரையும் டாக்டராக்கிடுச்சு.🤢🤢🤢
No comments:
Post a Comment