"மிக சரியாக 32-ஆண்டுகள் ஆயிற்று. மதுரையில் 1986-ல் சூலை 12 மற்றும் 13-தேதிகளில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற மாநில மாநாடு சிறப்பாக நடை பெற்றது.
அந்த நிகழ்ச்சிகளை படம் பிடிக்க சென்றிருந்தேன். நான் எடுத்த படங்கள், மூன்று முழு பக்க அளவில் தினமலரில் வெளிவந்தது.
வரலாற்று சிறப்பு மிக்க அந்த படங்களை, முகநூலில் நான் இது வரை வெளியிடவில்லை. இருப்பினும், தலைவரின் அபிமானிகளுக்காக, படம் ஒன்றை தற்போது வெளியிடுகிறேன்.
மாநாட்டு மேடையில், யார் யார் எங்கே அமரவேண்டும் என்று எம்.ஜி.ஆர். அவர்களே முடிவு செய்து, முதல் நாளே நாற்காலியில், அவரவர் பெயர் ஒட்டப்பட்டது..
எம்.ஜி.ஆர் அருகில், சாதாரண தொண்டன்,. அதற்கு அடுத்து தான் அமைச்சர்களும் மற்றவர்கள்."
-எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன் | தினமலர் புகைபட கலைஞர் | மதுரை.
No comments:
Post a Comment