Thursday, July 5, 2018

மான்பில் ரொம்ப உயர்ந்து நிற்கிறார்கள்.

ஜப்பானியர்களிடம் பல நல்ல குணங்கள் உண்டு, அதை எல்லோரும் கற்றுகொள்வதில் தவறேதுமில்லை
அதாகபட்டது ரஷ்ய உலககோப்பை கால்பந்து போட்டியில் பெல்ஜியத்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்கள், கடைசி நேரத்தில் ஏற்பட்ட தோல்வி அது
போட்டி முடிந்தபின் கண்ணீர் விட்ட ஜப்பானிய வீரர்கள் அதன் பின் செய்ததுதான் இன்று ஹாட் டாபிக்
தோல்வியடைந்து மனம் வெறுத்த நிலையிலும் தங்கள் அறையினை சுத்தம் செய்து, கழிவறையினை தாங்களே சுத்தம் செய்து ஒப்படைத்திருக்கின்றார்கள்
எதற்கு என்றால், எந்நிலையில் அந்த அறை தங்கள் கையில் கிடைத்ததோ அதே நல்ல நிலையில் அடுத்து வருபவர்களுக்காக விட்டு செல்ல வேண்டுமாம்
இதை கேட்டு அறை நிர்வாகிகள் "இவர்கள் நாட்டிலா பூகம்பம் வருகின்றது, சுனாமி வருகின்றது?" ஆனந்த கண்ணீர் வடிக்க, அடுத்து ஜப்பானியர் செய்திருப்பது மகா அட்டகாசம்
(இந்நேரத்தில் நம்து விளையாட்டு வீரர்களை விடுங்கள், சில வேட்பாளர்கள் தேர்தலில் தோல்வி என்றால் எதை எல்லாமோ அடித்து நொறுக்குவார்களாம், அதெல்லாம் உங்கள் நினைவுக்கு வரகூடாது)
அந்த கால்பந்து விளையாட்டு அரங்கையும் சுத்த படுத்தியிருக்கின்றனர், ஏன் என கேட்டால் புன்னகை பூக்க சொன்னார்கள்
"இந்த குப்பை ஏன் வந்தது? நாங்கள் ஆடுவதை பார்க்க வந்த கூட்டத்தால் வந்தது, அவ்வகையில் நாங்களும் பொறுப்பு அல்லவா? அதனால் அதனை சுத்தபடுத்தவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கின்றது.."
ஜப்ப்பான் வீரர்கள் குப்பைகளை அகற்றும்பொழுது ஜப்பானிய ரசிகர்களும் களத்தில் இறங்கி இருகின்றார்கள்.
"அடேய் நீங்கள் எல்லாம் மனிதர்களே அல்ல, தெய்வங்கள்.." என உலகம் ஜப்பானிய வீரர்களை கொண்டாடி கொண்டிருக்கின்றது
ஜப்பானின் இளம் தலைமுறை எப்படி இருக்கின்றது பார்த்தீர்களா? அப்படி சமூக பொறுப்போடும் சுய கட்டுபாட்டோடும் உருவாக்கி இருக்கின்றார்கள்
பின்னர் ஏன் அந்நாடு உயரத்தில் ஜொலிக்காது,
உலக கோப்பையினை யாரும் வெல்லட்டும், ஆனால் மக்கள் மனங்களை வென்றுவிட்டது ஜப்பானிய வீரர்கள்தான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...