Thursday, July 12, 2018

சென்னைக்கு வந்த அமித் ஷாவே வீடு தேடி சென்று பார்க்கிறார் என்றால், யார் இந்த ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தி???

தெரிந்து கொள்ள கட்டாயம் படியுங்கள்.. பிஜேபி RSS ஆட்சியில் இந்திய நீதித்துறை எதிர்நோக்கும் அபாயத்தை புரிந்துகொள்ளுங்கள்.. -- சவுக்கு சங்கர் கட்டுரை
இந்திய வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் உச்சநீதிமன்றத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள், பத்திரிக்கையாளர்களை நேரடியாக சந்தித்து, அது பெரும் புயலை கிளப்பியதை யாரும் மறந்திருக்க முடியாது.. இதன் பின்னனி என்ன??
ஒவ்வொரு உயர்நீதிமன்றத்துக்கும் நீதிபதிகளாக நியமிக்கப்பட வழக்கறிஞர்களின் பெயர் பரிசீலிக்கப்பட்டு, இறுதியாக ஒரு பட்டியல் உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பப்படும். அந்தப் பட்டியலில் எப்படியும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் பரிந்துரையில் ஒன்றிரண்டு பெயர்கள் இருக்கும். இந்த பெயர்கள் போக, மீதம் உள்ள பெயர்களை, சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள், பலரை கலந்தாலோசித்து, உரிய பரிசீலனைக்கு பின்னரே உச்சநீதிமன்றத்துக்கு அனுப்புவார்கள்.
அதில் ஒன்றிரண்டு பிழையாவதும் உண்டு. இருப்பினும் பெரும்பாலும், ஓரளவு சரியான பெயர்களாகவே இருக்கும். ஒவ்வொரு உயர்நீதிமன்றத்துக்கும் பிற மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவரை, தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கான பின்னணி இதுதான். அதாவது வேறு மாநிலத்தைச் சேர்ந்த நபர் தலைமை நீதிபதியாக இருந்தால், விருப்பு வெறுப்பின்றி, காய்த்தல் உவர்த்தலின்றி தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கையே இதற்கு காரணம்.
தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஆகஸ்ட் 2017க்கு பிறகு, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி காலியிடங்களுக்கான பரிந்துரைகள் அனைத்தையும் செய்வது தீபக் மிஸ்ரா மட்டுமே. ஒவ்வொரு மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையும் அழைத்து, அந்த உயர்நீதிமன்றங்களுக்கு காலியாக உள்ள இடங்களுக்கு நான் சொல்லும் பட்டியலை அனுப்புங்கள் என்று சொல்லி, அந்தப் பட்டியலே உச்சநீதிமன்ற கொலிஜியத்துக்கு வருகிறது.
இது மட்டுமல்ல. இந்த பட்டியலை தீபக் மிஸ்ராவிடம் அளிப்பது, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் என்பதுதான் கூடுதல் தகவல். சற்றே நினைத்துப் பாருங்கள். இன்றும் பத்தாண்டுகளில், இந்தியாவில் உள்ள அனைத்து உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும், ஆர்எஸ்எஸ் பின்புலம் உள்ள காவிகள் நீதிபதிகளாக நீக்கமற நிறைந்திருந்தால், இந்தியாவின் ஜனநாயகம் என்ன ஆகும் ?
இதுதான் நான்கு நீதிபதிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தற்கான உண்மையான பின்னணி. பத்திரிக்கையாளர்களை சந்தித்த நான்கு நீதிபதிகள் பேசியதன் உள்ளர்த்தத்தை கவனித்தால், இது நன்கு புரியும்.
“இந்த அமைப்பு காப்பாற்றப் படாவிட்டால், நாட்டில் ஜனநாயகம் இருக்காது. மிகுந்த வேதனையோடே பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறோம். நிலைமை மோசமாக உள்ளது. தேவையான நடவடிக்கைகளை எடுத்து, இதை சீர்படுத்துங்கள் என்று தலைமை நீதிபதிக்கு நாங்கள் விடுத்த கோரிக்கை செவிமடுக்கப்படவில்லை. எங்கள் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
நாங்கள் நாலு பேரும், நாட்டில் ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப் பட்டுள்ளது என்பதில் உறுதியாக உள்ளோம். கடந்த சில காலமாக நடந்த சம்பவங்கள் கவலையளிக்கின்றன.
இந்த தேசத்துக்கு நாங்கள் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. “ என்று அந்த நான்கு நீதிபதிகளும் வேதனையோடு தெரிவிப்பது இதுதான்.
வெளியியுலகுக்கு தெரியாத பல்வேறு தகவல்களும் இந்த நீதிபதிகளுக்கு தெரியும் என்பதுதான் அவர்களின் வேதனையின் பின்னணி.
கேஜி பாலகிருஷ்ணன் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றது முதலாகவே, உச்சநீதிமன்றத்தில் இடைத்தரகர்களின் தலையீடு அதிகமானது. அது வரை, சில வழக்கறிஞர்கள் செய்து கொண்டிருந்த பணியை, நீதித்துறைக்கு எந்த சம்பந்தமும் இல்லாத, இடைத்தரகர்கள் செய்யத் தொடங்கினர்.
பிஜேபி மத்திய அரசு பொறுப்பேற்றது முதல், இந்த இடைத்தரகர்களின் தலையீடு மிகவும் அதிகரித்தது.
நீதிதேவன் ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தி..
இந்தியாவில் நீதித்துறைக்கும் பிஜேபி அரசுக்கும், குறிப்பாக அமித் ஷாவுக்கும் இணைப்புப் பாலமாக (ப்ரோக்கர் என்றும் சொல்லலாம்) இருந்து வருபவர் ஒரு தமிழர் என்பது நமக்கெல்லாம் கூடுதல் பெருமை.
அந்த தலைமை ப்ரோக்கரின் பெயர் கிருஷ்ணமூர்த்தி. நீதித்துறையின் முதன்மை ப்ரோக்கராக உருவாகி கோலோச்சுவதால், தற்போது இவரை ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தி என்றே அழைக்கிறார்கள்.
இவர் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சாதாரணமாக சுற்றிக் கொண்டிருப்பார். அப்போது, ஜெயேந்திரரை பார்க்க, கண்ணன் என்பவர் வருகிறார். அந்த கண்ணன் யாரென்றால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கேஜி.பாலகிருஷ்ணனின் வீட்டில் பணியாற்றி வந்த ஒரு ப்யூன். அந்த கண்ணனின் மூலம், கேஜி பாலகிருஷ்ணனின் அறிமுகம் கிருஷ்ணமூர்த்திக்கு கிடைக்கிறது.
அதன் பிறகு, தலைமை நீதிபதியாக சதாசிவம் வந்த பிறகு, கிருஷ்ணமூர்த்திக்கு சுக்கிர திசைதான். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த சதாசிவம், இந்தியா முழுக்க அவரை விட மூத்தவர்களாக இருந்த 20 நீதிபதிகளை ஓவர்டேக் செய்து, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகாமலேயே நேரடியாக உச்சநீதிமன்றம் சென்றார்.
குஜராத்தில் சோராபுதீன் சேக் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட விவகாரத்தில் அமித் ஷா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் நேரில் பார்த்த சாட்சியாக இருந்த துள்சிராம் பிரஜாபதி என்பவரும் மற்றொரு என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இதற்காக அமித் ஷா மீது புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
2013ம் ஆண்டில் சதாசிவம் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது அவர் மீதான இரண்டாவது எப்ஐஆரை ரத்து செய்ய வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சதாசிவத்திடமே விசாரணைக்கு வருகிறது. துள்சிராம் பிரஜாபதி கொலை செய்யப்பட்டது, ஏற்கனவே இருக்கும் வழக்கின் தொடர்ச்சிதான். அதனால் தனியாக எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டியதில்லை என்று வினோதமான ஒரு தீர்ப்பை வழங்கினார் சதாசிவம். சோராபுதீன் சேக்கும், துள்சிராம் பிரஜாபதியும் ஒரே நாளில் கொல்லப்படவில்லை.
சோராபுதீன் சேக், கொல்லப்பட்டது 26 நவம்பர் 2005. நேரில் பார்த்த சாட்சி துள்சிராம் பிரஜாபதி கொல்லப்பட்டது 28 டிசம்பர் 2006. இந்த இரு கொலைகளையும் எப்படி ஒரே எப்ஐஆரில் விசாரிக்க முடியும் ? ஏன் விசாரிக்க வேண்டும் ? குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கு நேர் முரணான தீர்ப்பல்லவா இது ? சதாசிவம் ஏன் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கினார் ?
சதாசிவத்தின் இந்த தீர்ப்பு, பல தீர்ப்புகளுக்கும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கும் நேரெதிரானது, முரணானது என்று கிரிமினல் சட்டம் தெரிந்த வழக்கறிஞர்கள் குரல் கொடுக்கலாம். அவர்களைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்.
நீங்களா கவர்னர் போஸ்ட் வாங்கிக் குடுப்பீங்க ?
இந்தத் தீர்ப்புக்கு பிறகு, அமித் ஷாவோடு ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தி மிகுந்த நெருக்கமாகி விடுகிறார். நீதித்துறை தொடர்பான அமித் ஷாவின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதையே தனது தலையாய கடமையாக கருதி இன்று வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மும்பை நீதிமன்றத்தில், அமித் ஷா நீதிபதி லோயாவுக்கு பிறகு வந்த மற்றொரு நீதிபதியால் எவ்வித விசாரணையுமின்றி, விடுவிப்பு செய்யப்பட்டதன் பின்னணியிலும் இருப்பவர் ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தியே.
இதற்கு பிரதிபலனாக, அமித் ஷா பரிந்துரையில் திருப்பதி தேவஸ்தான நிர்வாகக் குழுவில், ட்ரஸ்ட் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார் ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தி.
இரு கொலை வழக்குகளில் இருந்து தன்னைக் காப்பாற்ற உதவி செய்த ஒரு நீதித்துறை ப்ரோக்கருக்கு அமித் ஷா செய்த கைமாறு இவ்வளவுதானா என்ற கேள்வி எழும்.
கும்பகோணத்தை சொந்த ஊராக கொண்ட, வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி, சங்கர மடத்தில் எடுபிடியாளாக சுற்றிக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி, 100 கோடி முதலீட்டில், ஏதெனா எம்ரா பவர் ப்ரைவேட் லிமிட்டெட் என்ற மின் உற்பத்தி நிறுவனத்தில் இயக்குநராக இணைகிறார். இந்த நிறுவனம் புதுதில்லியில் இருந்து செயல்பட்டு வருகிறது. இதில் பெரும்பான்மை பங்குதாராக இணைந்துள்ளார் ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தி.
சென்னை நீலாங்கரையில் மேலும் ஐந்து புதிய நிறுவனங்களையும் தொடங்குகிறார் ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தி.
1) ட்ரைபவர் என்டர்பிரைசஸ் லிமிட்டெட், 2/569, சான்டி நூக், சிங்காரவேலன், முதல் மெயின் தெரு, சின்ன நீலாங்கரை, சென்னை.115
2) ட்ரைபவர் எனர்ஜி ப்ரைவேட் லிமிட்டெட், 2/569, சான்டி நூக், சிங்காரவேலன், முதல் மெயின் தெரு, சின்ன நீலாங்கரை, சென்னை.115
3) ட்ரைபவர் டெக்னாலஜிஸ் ப்ரைவேட் லிமிட்டெட், 2/569, சான்டி நூக், சிங்காரவேலன், முதல் மெயின் தெரு, சின்ன நீலாங்கரை, சென்னை.115
4) ட்ரைபவர் இன்வெஸ்ட்மென்ட் ப்ரைவேட் லிமிட்டெட், 2/569, சான்டி நூக், சிங்காரவேலன், முதல் மெயின் தெரு, சின்ன நீலாங்கரை, சென்னை.115
4) ட்ரைபவர் ப்ராப்பர்டீஸ் ப்ரைவேட் லிமிட்டெட், 2/569, சான்டி நூக், சிங்காரவேலன், முதல் மெயின் தெரு, சின்ன நீலாங்கரை, சென்னை.115
இந்த மூன்று நிறுவனங்களிலும் இயக்குநர்கள் மூவர். 1) சுப்ரமணியன், 2) வெங்கடேசன் லட்சுமி நாராயணன், 3) குருசாமி மதுராம்பாள். ஜுடிஷியரி கிருஷ்ணமூர்த்தியின் மனைவி பெயர் அனுராதா சுப்ரமணியன். இவர் கனடா நாட்டின் குடிமகள். இவர் தந்தை பெயர் சுப்ரமணியன். தாயார், மதுராம்பாள். இவர்கள் இருவரும்தான் நான்கு நிறுவனங்களிலும் இயக்குநர்கள். மூன்றாவது இயக்குநர்வெங்கடேசன் லட்சுமி நாராயணன், கிருஷ்ணமூர்த்தியின் சகோதரி மங்களம் என்பவரின் மகன்.
மொத்தத்தில் இது ஒரு குடும்ப நிறுவனம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். சாதாரணமாக சங்கர மடத்தில் எடுபிடியாக இருந்த ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தி இன்று மிகப் பெரும் தொழிலதிபர். அமித் ஷாவின் மகன் எப்படி வளர்ச்சி பெற்றாரோ, அதைப் போலவே பிரம்மாண்டமான வளர்ச்சி. இந்த நான்கு நிறுவனங்களின் மொத்த டர்ன் ஓவர், 100 கோடியைத் தாண்டியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ருக்மணி மில்ஸ் என்ற நிறுவனம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கடன் வாங்கியிருந்தது. கடனை திருப்பிச் செலுத்தாததால் வட்டியோடு சேர்ந்து கடன் 68 கோடி ரூபாய் நிலுவையில் இருந்தபோது, அந்த நிறுவனத்துக்கு சொந்தமாக, சென்னை ஆபீசர்ஸ் ட்ரெயினிங் அக்காடமியின் அருகே உள்ள 6.8 ஏக்கர் நிலத்தை எஸ்பிஐ ஏலத்துக்கு விடுகிறது. முதலில் ஏலம் 2014ல் விடப்பட்டபோது, 90 கோடி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அப்போது யாரும் ஏலத்துக்கு வரவில்லை என்ற காரணத்தால், 2015ம் ஆண்டில் 80 கோடிக்கு ஏலம் விடப்படுகிறது.
எந்த பெரிய நிறுவனமும் இந்த ஏலத்தில் பங்கெடுக்க முடியாத வகையில், ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தி வங்கி அதிகாரிகளோடு சேர்ந்து தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இறுதியாக, வங்கிக்கு வர வேண்டிய வெறும் 69 கோடிக்கு மட்டுமே இந்த நிலத்தை ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தி தனது ட்ரைபவர் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பெயரில் வாங்குகிறார்.
இந்த தொகையை செலுத்த வெள்ளையில் பணம் வேண்டுமல்லவா ? ட்ரைபவர் நிறுவனத்துக்கு கடன் அளித்து உதவி செய்த நிறுவனங்கள் மூன்று. இந்தியா முழுக்க அறியப்பட்ட நிறுவனங்கள்தான். ஜிஎம்ஆர், டிஎல்எப் மற்றும் அதானி நிறுவனங்கள் ட்ரைபவர் நிறுவனத்துக்கு கடன் வழங்கி உதவி செய்துள்ளன.
ஒரு தமிழன் வெறும் ப்ரோக்கர் வேலை செய்தே எப்படி உயர்ந்த பதவியை அடைந்தான் என்பது, ஒவ்வொரு தமிழனுக்கும் உத்வேகமாக இருக்க வேண்டும்.
நீதித்துறை ப்ரோக்கர் வேலையைத் தவிர்த்து, சதாசிவத்தின் மூலமாக, எடப்பாடி பழனிச்சாமியோடு நெருக்கமான தொடர்பில் இருக்கிறார் ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தி. நீதிபதியாக வேண்டும் என்று ஆசையுள்ள வழக்கறிஞர்கள் ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தியை அணுகினால் பெரும் உரிய கிடைக்கும்.
இந்த நிலையில்தான் இந்தியாவில் நீதித்துறை இருக்கிறது. மிக மிக கவலையளிக்கக் கூடிய ஒரு சூழல். இந்தியாவின் உயர்நீதிமன்றங்களில் பெரும்பாலான நீதிபதிகள் ஆர்எஸ்எஸ் பின்புலம் உள்ள நீதிபதிகளால், சங் பரிவார் நீதிபதிகளால், காவி நீதிபதிகளால் நிரப்பப்படுவது இந்திய ஜனநாயகத்துக்கு எத்தகையதொரு ஆபத்து என்பதை எண்ணிப் பாருங்கள்.
இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், வலிமையான இந்திய ஜனநாயகத்துக்கும் விடப்படும் சவால் அல்லவா அது ? இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்யும் நடவடிக்கையல்லவா அது ?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...