சென்னை பெரு வெள்ளத்தின் போது செல்வி.ஜெவை விமர்சித்த அத்தனை பத்திரிக்கைகளும் இன்று கேரள வெள்ளத்தை பற்றி வாய் திறக்காமல் அமைதியாக இருக்கிறது.மனிதனால் ஏற்பட்ட சீரழிவுதான் இது என்று அன்று பேசியவர்கள் யாரையும் இன்று காணவில்லை.சென்னையில் ஏற்பட்ட அழிவிற்கு காரணமான திமுக எல்லா பழியையும் அதிமுக மேல் போட்டு தப்பித்துக் கொள்ளப் பார்த்தது.இன்று கேரளாவில் பார்த்தீர்களா பிணராயி விஜயன் என்னும் ரட்சகரை என்று ஒட்டுமொத்த இடது சிந்தனைவாத கூட்டமும் சப்பைகட்டுகிறது.காரணம் இதன் பிழைகளால் அரசியல் லாபம் பாஜகவிற்கு கேரளாவில் சென்றுவிடுமோ என்கிற அச்சம் கம்யூனிஸ்ட்டையும்,காங்கிரஸ்ஸையும் கைகோர்க்க வைத்திருக்கிறது.
அதிமுகவிற்கு Intellectual backing voice இல்லை என்று கமலஹாசன் போன்றவர்கள் என்ன பேச்சு பேசினார்கள்.அன்று வரிப்பணம் எங்கே போனது என சொந்த மக்களை வைத்து சுய வெறுப்பை தீர்த்துக் கொள்ள முற்பட்டவர் இன்று பாயஸம் ஊட்டிக் கொண்டிருக்கிறார் பிணராயிக்கு.பத்தாயிரம் ஆர்எஸ்எஸ் இயக்கத்தவர்கள் இறங்கி பணி செய்கிறார்கள் கேரளாவில் அதில் 5 பேர் மரணமடைந்துவிட்டார்கள்.இதே ஊடகங்கள் அன்று சென்னையில் இஸ்லாமிய இயக்கங்கள் சாப்பாடு கொடுத்ததை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சேர்த்ததே? ஆனால் இன்று இதை தினமலர் தவிர வேறு யாரும் பதிய வைக்கவில்லை.
எப்படி சட்டத்திற்கு புறம்பான குடியேற்றங்கள் நிகழ்ந்துள்ளது.நீரின் பாதைகள் எப்படி அடைபட்டு சூழலியலே கேரளத்தில் ஒழிக்கப்பட்டுள்ளது அதற்கு பிணராயியின் கையாளாகாத அரசும் இத்தனை ஆண்டு காங்கிரஸ்-இடதுசாரிய அரசியலின் முட்டாள்தனமும் காரணம் என்பதை பற்றி சீரிய கட்டுரைகள் வரும் காலத்தில் வருமா? மக்களை ஆட்டு மந்தைகளாக நினைத்துக் கொண்டு தாங்கள் செய்வதே நியாயம் என்றும் என்னை விட்டால் உனக்கு வேறு ரட்சகன் இல்லை என்ற நினைப்பு இன்னும் இந்த கூட்டத்திடம் உள்ளது.வெறுப்பை மத்திய அரசு மேலும்,தமிழக அரசின் மேலும் மடைமாற்றும் யுக்திகள் எவ்வளவு காலம் எடுபடும் என்று பிணராயி நினைக்கிறார்? கெட்டிக்காரன் புழுகு எட்டுநாள்தான்.
மண்டபத்திலிருந்து...
மண்டபத்திலிருந்து...
No comments:
Post a Comment