Tuesday, August 28, 2018

இந்த ஒரு பழத்தை உங்கள் தினசரி டயட்டில் சேர்த்தாலே போதும்.

இந்த ஒரு பழத்தை உங்கள் தினசரி டயட்டில் சேர்த்தாலே போதும்

இந்த ஒரு பழத்தை உங்கள் தினசரி டயட்டில் சேர்த்தாலே போதும்
எந்த பிணியும் நம்மை அண்டாமல் இருக்க‍வும் நீண்ட நாட்கள் இளமையுடன்
இருக்க‍வும், இந்த ஒரு பழத்தை சாப்பிட்டு வந்தால் போதும். பழங்களில் நமது சீரண சக்திக்கு சிறந்த பழம் என்றால் அது பப்பாளி பழம்தான்.
இந்த பப்பாளி பழத்தை உங் கள் தினசரி உணவில் சேர்த்து வரும்போது நமது சீரண மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். இந்த ஏழு காரணத்து க்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…
பயன்கள்
பப்பாளி சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும்கூட. உங்க ள் அழகையும் சேர்த்து மெருகேற்றுகிறது. உங்கள் சருமத்தின் நிறத்தி ற்கு மற்றும் வடிவத்திற்கு உதவுகிறது. முடி வளர்ச்சிக்கும் பயன்படுகி றது.
ஊட்டச்சத்துகள் ( Nutrients )
பப்பாளி பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ( #AntiOxidants ), விட்டமின்கள் ( vitamins) மற்றும் தாதுக்கள் போன்ற உடலை கட்டுக்கோப்பாக வை க்கும் ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் நிறைய ஆரோக்கியமான என்சைம்கள் ( #Enzymes ), காரோட்டீனாய்டு ( #carotenoids ), ப்ளோனாய்டுகள் ( #flavonoid ), விட்டமின் சி ( #Vitamin C ), விட்டமின் பி Vitamin B ), விட்டமின் ஏ (Vitamin A), மக்னீசியம் ( #Magnesium ), பொட்டாசியம் ( #Potassium ), கால்சியம் ( #Calcium ), கார்போ ஹைட்ரேட் ( #Carbohydrates ), புரோட்டீன் ( #Protein ), நார்ச்சத்து, லைக்கோபீன் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.
உடல் எடை குறைதல்
பப்பாளி ( Papaya ) பழத்தில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசிக் காமல் இருக்க உதவுகிறது. எனவே இதனால் நாம் நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்களு க்கு இது ஒரு நல்ல உணவாகும்.
நோயெதிர்ப்பு சக்தி
பப்பாளி பழத்தில் கரோட்டீனாய்டுகள், ப்ளோனாய்டுகள், விட்டமின் சி போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதனால் நமது நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும். இதனால் எந்த நோயும் நம்மை அணுகாது.
கண்கள் ஆரோக்கியம்
பப்பாளிபழத்தில் கண்ணின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் ஏ உள்ளது. இது மக்குலார் டிஜெனரேஷன் போன்ற கண் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
எலும்பு வலுமைக்கு
பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமையாகவு ம் ஆரோக்கியமாகவும் இருக்கும். இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் எலும்புகளில் ஏற்படும் அழற்சியை போக்க வல்லது. இதிலுள்ள விட்ட மின் சி ஆர்த்ரிட்டீஸ் நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
சீரண சக்தி
பப்பாளி பழத்தில் உள்ள பாப்பைன் என்ற என்சைம் சீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும் இதிலுள்ள நார்ச்சத்து சீரண சக்தியை மேம்படுத்துகிறது. எனவே இந்த ஒரு பழத்தை உங்கள் தினசரி டயட்டில் சேர்த் தாலே போதும் ஏராளமான நன்மைகளைப் பெற முடியும்.
#பப்பாளி, #பப்பாயா, #பழம், #Papaya #ஆன்டிஆக்ஸிடன்ட்கள், #AntiOxidants, #விட்டமின், #vitamins) #தாதுக்கள், #ஊட்டச்சத்து, #என்சைம்கள்,  #Enzymes, #காரோட்டீனாய்டு, #carotenoids ), ப்ளோனாய்டுகள், #flavonoid , விட்டமின் சி, #Vitamin, #மக்னீசியம், #Magnesium, #பொட்டாசியம், #Potassium, #கால்சியம், #Calcium, #கார்போஹைட்ரேட், #Carbohydrates ), #புரோட்டீன், #Protein, #நார்ச்சத்து, #லைக்கோபீன், #Fruit

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...