ஆகஸ்ட் 9ம் தேதி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் - 133 அடி.
ஆகஸ்ட் 14ம் தேதி - 136 அடி.
ஆனால், ஆகஸ்ட் 9ம் தேதியே கேரளாவில் கனமழை காரணமாக வெள்ளப் பாதிப்பு தொடங்கி விட்டது. அன்றைய தினம் கொச்சி விமான நிலைய சேவை பாதிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 10ம் தேதி கனமழை வெள்ளத்தால் 26 பேர் பலியாகினர்.
அதற்கு 5 நாட்கள் கழித்தே, அதாவது ஆகஸ்ட் 15ம் தேதிதான் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் நிர்ணயிக்கப்பட்ட 142 அடியை எட்டியது.
உண்மை இவ்வாறிருக்க, வெள்ள சேதத்திற்கு தமிழகமும் ஒரு காரணம் என்று கேரள அரசு கூறுவது முழுப் பொய்.
வெள்ள சேதங்களைக் கண்டு பதறி, நிவாரணப் பொருட்களை வாரி வழங்கிய தமிழக மக்களின் முதுகில் குத்தியுள்ளது தோழர் பினராயி விஜயன் அரசு.
சேட்டா.. உங்களிடமிருந்து இந்தக் கைம்மாறு வருமென நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
No comments:
Post a Comment