Monday, August 27, 2018

இஞ்சி ரசத்தை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்.

இஞ்சி ரசத்தை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்

இஞ்சி ரசத்தை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்
மருந்தே உணவாகி வரும் இக்கால வேளையில் நம் முன்னோர்கள் சொல்லிச்
சென்ற உணவே மருந்து என்பதை மறந்ததின் விளைவுதான்.
சளி, இருமல், காய்ச்சல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த இஞ்சி ரசம்  ( #Ginger #Rasam )வைத்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இதன் செய்முறையை பார்க்க லாம். சுவையான கம கம இஞ்சி ரசம் .
தேவையான பொருட்கள் 
புளி – ஒரு எலுமிச்சை அளவு
தக்காளி – ஒன்று 
அரைக்க
இஞ்சி – இரண்டு அங்குல துண்டு 
மிளகு – அரை தேக்கரண்டி 
சீரகம் – ஒரு தேக்கரண்டி 
முழு தனியா – ஒரு மேசை கரண்டி 
காய்ந்த மிளகாய் – இரண்டு 
கொத்துமல்லி தழை – கால் கைபிடி அளவு 
கறிவேப்பிலை – கால் கைபிடி அளவு 
தாளிக்க:
நெய் – ஒரு தேக்கரண்டி 
கடுகு – அரை தேக்கரண்டி 
உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி 
பெருங்காயப்பொடி – ஒரு சிட்டிக்கை அளவு
செய்முறை:
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, அதில் தக்காளியை போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போடு அரைத்து கொள்ளவும்.
தக்காளி, புளி தண்ணீருடன் உப்பு, அரைத்தது சேர்த்து மேலும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும். 
சுவையான கம கம இஞ்சி ரசம் ரெடி!
குறிப்பு 
1. பூண்டு தேவை படுபவர்கள் இரண்டு பற்கள் சேர்த்து கொள்ளலாம். 
2. சளி தொந்தரவிற்கு மிகவும் நல்லது குளிர்காலங்களில் அடிக்கடி செய்து சாப்பிட லாம்.
3. குழந்தைகளுக்கு சளி, இருமல் இருக்கும் போது இஞ்சி சாறு கொடுக்க முடியாது அதற்கு இப்படி ரசம் செய்து சாத்த்தில் பிசைந்து கொடுக்கலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...