Sunday, August 19, 2018

வெள்ளை உணவின் கருப்பு பக்கம் .....

மைதா என்பது கோதுமையின் எண்டோஸ்பெர்மில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. எண்டோஸ்பெர்ம் எனப்படும் கோதுமையின் உள்பகுதியை அரைத்தால், மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனுடன் அசோடிகார் போனமைட், குளோரின் வாயு, பென்சாயில் பெராக்சைடு போன்ற வேதிப்பொருட்கள், மிருதுவாக மாற்ற அலக்ஸான் எனும் வேதிப்பொருள் போன்றவை சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது மைதா.
மாவை பிளீச் செய்யப் பயன்படும் பென்சாயில் பெராக்சைடு வேதிப்பொருளுக்குச் சீனா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மரவள்ளிக் கிழங்கிலிருந்தும் மைதா தயாரிக்கப்படுகிறது.
இந்த மைதாவில் சர்க்கரைச் சத்தைக் கொண்ட 100 சதவீத ஸ்டார்ச் எனப்படும் கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது. நார்ச்சத்து, வைட்டமின், புரதம் போன்ற எதுவுமே இருக்காது. இதனால் எளிதில் ஜீரணமாகாது.
பரோட்டா சாப்பிடுவதால் உயர் ரத்தஅழுத்தம், மாரடைப்பு, இதய நோய்கள், உடல் பருமன், புற்றுநோய், நீரிழிவு நோய், சிறுநீரகக் கல், மன அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படலாம். பரோட்டா மட்டுமல்லாமல் மைதா மூலம் தயாரிக்கப்படும் எல்லாப் பேக்கரி உணவுகளாலும் இந்த நோய்கள் வரக்கூடும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...