தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைவின், 30வது நாளை அனுசரிக்கும் வகையில், சென்னையில், செப்., 5ல், அழகிரி நடத்தும் பேரணியில், தி.மு.க., கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் சிறிய கட்சிகளின் தலைவர்களை பங்கேற்கச் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதற்கான வேலைகளில், அழகிரியின் ஆதர வாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்கான வேலைகளில், அழகிரியின் ஆதர வாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தி.மு.க.,விலிருந்து, நான்கு ஆண்டுகளுக்கு முன் நீக்கப்பட்ட அழகிரி, மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவார் என, அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். அழகிரியும் அதை எதிர்பார்த் தார்; ஆனால், அதற்கான கதவுகள் அடைக்கப் பட்டதால், அதிருப்தி அடைந்தார்.
அதனால், கருணாநிதியின் நினைவிடத்தில், சமீபத்தில் பேட்டி அளித்த அவர், 'கருணாநிதியின் விசுவாசிகள், தி.மு.க.,வின் உண்மையான தொண்டர்கள் அனைவரும், என் பக்கம் தான் உள்ளனர்' என்றார்.
இது, செயல் தலைவர் ஸ்டாலின் ஆதரவாளர் கள் மத்தியில், அதிர்வலைகளை ஏற்படுத்தி யது. அதேநேரத்தில், ஸ்டாலின் அதிருப்தி யாளர் கள், அழகிரி பக்கம் சாயத் துவங்கி யுள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், கருணாநிதி மறைவின், 30வது நாளை அனுசரிக்கும் வகையில், சென்னையில், செப்., 5ல், அமைதி பேரணி நடத்த, அழகிரி திட்ட மிட்டுள்ளார்.
இந்த பேரணியில், அவரின் ஆதரவாளர்களையும், ஸ்டாலின் மீது அதிருப்தி யில் உள்ளோரையும், பெருமளவில் பங்கேற்க வைக்க, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
அத்துடன், தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தலைவர் கள் மற்றும் சிறிய கட்சிகளின் தலைவர்களுக்கும், அழைப்பு விடுத்து, அவர்களை பங்கேற்கச் செய்வதற்கான நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன.
அத்துடன், தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தலைவர் கள் மற்றும் சிறிய கட்சிகளின் தலைவர்களுக்கும், அழைப்பு விடுத்து, அவர்களை பங்கேற்கச் செய்வதற்கான நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன.
இதற்கிடையே, அழகிரியின் மகன், தயாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால், மறைந்த வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கட்சி தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும், நிச்சயம் ரத்து செய்திருப்பார்' என, தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை, பா.ஜ., வினர் மத்தியில், அழகிரி மீது கரிசனம் ஏற்பட வைத்துள்ளது.
எனவே, அழகிரி தரப்பில் அழைப்பு விடுத்தால், அவர் நடத்தும் அமைதி பேரணியில், பா.ஜ.,வினர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படு கிறது.
எனவே, அழகிரி தரப்பில் அழைப்பு விடுத்தால், அவர் நடத்தும் அமைதி பேரணியில், பா.ஜ.,வினர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படு கிறது.
#திட்டம்....
நெல்லையில், ஸ்டாலின் நடத்திய இரங்கல் கூட்டத்திற்கு, சிறிய கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப்படவில்லை. இதனால், அதிருப்தியில் உள்ள அவர்கள், அழகிரி தரப்பில் அழைப்பு விடுத்தால், பேரணியில் பங்கேற்று, ஸ்டாலினுக்கு கடுப்பேற்றவும் திட்டமிட்டுள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவன், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,'ஸ்டாலினும், அழகிரியும் கைகோர்த்து செயல்பட வேண்டும்' என, கூறி இருந்தார். எனவே, அவரது கட்சியினருக்கும், பேரணியில் பங்கேற்கும்படி, அழகிரி தரப்பில் அழைப்பு விடுக்கப்படலாம் என, எதிர்பார்க்கப் படுகிறது.
#ஈரோடு தி.மு.க.,வில் பரபரப்பு:
ஈரோடு மாவட்டத்தில், கணிசமான தொண்டர்களை அழைத்து செல்ல, சத்தமின்றி ஒருங்கிணைப்பு வேலைகள் நடக்கின்றன.
ஈரோடு மாவட்ட செயலர் முத்துசாமி எதிர்ப்பாளர்கள், 'மாஜி' மாவட்ட செயலர் ராஜா அணியில் இருந்து விலகியவர்களை, இழுக்கும் வேலைகள் துவங்கியுள்ளன.
ஈரோடு மாவட்ட செயலர் முத்துசாமி எதிர்ப்பாளர்கள், 'மாஜி' மாவட்ட செயலர் ராஜா அணியில் இருந்து விலகியவர்களை, இழுக்கும் வேலைகள் துவங்கியுள்ளன.
அழகிரி ஆதரவாளர்கள் கூட்டம், சென்னி மலையில், நேற்று முன்தினம் ரகசியமாக நடந்தது.இதில், ஈரோடு மாவட்ட அழகிரி அணியில், தீவிரமாக செயல்படும் சக்திவேல் என்பவர் பேசுகையில், 'தி.மு.க., தலைவர் அஞ்சலி கூட்டத்துக்கு, நமது மாவட்டத்தில், குறைந்தது, 10 பஸ்களில் வரு மாறு அழகிரி கூறியுள்ளார்.'
முத்துசாமியை பிடிக்காமல் ஒதுங்கிய நிர்வாகிகள், உள்ளூர் எதிர் கோஷ்டியினரிடம் ஆதரவு திரட்டுங்கள்' என்றார்.
முத்துசாமியை பிடிக்காமல் ஒதுங்கிய நிர்வாகிகள், உள்ளூர் எதிர் கோஷ்டியினரிடம் ஆதரவு திரட்டுங்கள்' என்றார்.
இதேபோல் கொடுமுடி, பெருந்துறை, மொடக் குறிச்சி பகுதிகளிலும் கூட்டம் நடந்துள்ளது. சக்திவேலிடம் கேட்ட போது, 'அழகிரியின் பலம், மெரினாவில் நிரூபிக்கப் படும். நான் ரகசிய கூட்டம் நடத்தவில்லை. தி.மு.க.,வில் உள்ள நண்பர்களை தான் சந்தித்தேன்' என்றார். அழகிரி அணிக்கு, ஆள் திரட்டும் பணியால், ஈரோடு மாவட்ட, தி.மு.க.,வில்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.......
No comments:
Post a Comment