Wednesday, January 30, 2019

கடந்த 9 நாளாக நடைபெற்று வந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.

பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று கூறுகையில், முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்ப முடியும் என உறுதியாக தெரிவித்தது.
இதையடுத்து, மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.


இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என ஜாக்டோ-ஜியோ அமைப்பு இன்று அறிவித்துள்ளது.

சென்னையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கூறுகையில், தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ளதாலும், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டும், நீதிமன்றம் மற்றும் முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...