திருவாரூர் இடைத்தேர்தலோடு அறிவிக்கப்பட்டது ஹரியானாவின் “ஜிண்ட்” சட்டமன்றத் தேர்தல்.
இன்று அங்கு ஓட்டுப்பதிவு. ஜனவரி 31ம் தேதி ஓட்டு எண்ணிக்கை.
லோக்சபா தேர்தலுக்கு முன்பு பாரதிய ஜனதா சந்திக்கும் அமிலப் பரிசோதனை.
பாரதிய ஜனதா அங்கு ஒரு பஞ்சாபி வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது.
தேவிலால் வாக்கு வங்கியான ஜாட் ஓட்டை குறி வைத்து மாநிலக்கட்சியான ஜனநாயக் ஜனதா தள் (ஆம் ஆத்மி ஆதரவு) வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது.
ஜாட் இனத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற தலைவர் முன்னாள் பிரதமர் தேவிலால் என்பது குறிப்பிடத்தகுந்தது.
உள்ளூர்ப் பிரச்சனைகளை முன்னிறுத்தி மாநில கட்சி, தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா என்று மும்முனைப் போட்டி.
டெல்லிக்கு மிக அருகாமையில் உள்ள மாநிலம்.
எனவே ஹரியானாவின் “ஜிண்ட்” ஒரு உரைகல்.
No comments:
Post a Comment