அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் கண்ணை உறுத்தும் ஒரு விஷயம் சங்க நிர்வாகிகளின் மிரட்டல் பேச்சு. ஏதோ அரசாங்கம் என்பது இவர்கள் இஷ்டத்திற்கு ஆட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒரு பெண்மணி "நாங்கள் கேட்பதையெல்லாம் அரசு கொடுத்தேதான் ஆக வேண்டும் வேறு வழியே இல்லை " என்று பேசுகிறார்.
இப்போது சிலர் வேலைக்கு திரும்பி விட்டார்கள் என்பதால் இவர்கள் மேலுள்ள நடவடிக்கைகளை அரசு நிறுத்தி விட கூடாது. போராட்ட நாட்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூடாது. அது போக இட மாற்றமும் செய்ய வேண்டும். இல்லையென்றால் மறுபடியும் இரண்டு மாதங்கள் கழித்து ஆரம்பித்து விடுவார்கள்.
ஜெயலலிதா இல்லையென்பதால் அரசு பணிந்து விடும் என்று எதிர்பார்க்கிறார்கள். புலிவாலை பிடித்தவர் போல இப்போது, "அழைத்துப் பேசினால் போதும்" என்று பேசுகிறார்கள். என்னத்தை அழைத்து பேச வேண்டுமாம்? என்ன நிச்சயதார்த்தமா செய்யப் போகிறோம்? இல்ல இட்லிக்கு சட்னியா சாம்பாரா என்று பேசப் போகிறோமா? என்ன முடியுமோ அதை அரசாங்கம் சொல்லி விட்டது. இனிமேல் பேசுவதற்கு என்ன இருக்கிறது?
அரசாங்கம் இறங்கி வரவேக் கூடாது. தன் பிடியில் உறுதியாக நிற்க வேண்டும். பொதுமக்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.
No comments:
Post a Comment