Monday, January 28, 2019

"ஐஸ்வர்ய முருகன்"

"குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்" என்பது பழமொழி! இதற்கு ஏற்றாற்போல் சென்னை குரோம் பேட்டைக்கு அருகில் "குமரன் குன்றம்"
என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு மலை மீது அருள்புரியும் முருகனை சுவாமிநாத சுவாமி, பாலசுப்பிரமணிய சுவாமி என அழைக்கின்றார்கள். கேட்ட வரங்களை அருள்பவர் என்பதால் பக்தர்கள் "ஐஸ்வர்ய முருகன்" என்கிறார்கள்.
குரோம்பேட்டை பஸ் ஸ்டாண்டிலிருந்து அஸ்தினாபுரம் செல்லும் சாலையில் எம்ஐ.டி பாலம் இறங்கி இடது பக்கம் திரும்பினால் நேருநகரில் "குமரன்குன்றம்" இருக்கிறது.!
1958ம் ஆண்டில் சென்னையில் முகாமிட்டிருந்த "காஞ்சி மகா பெரியவர்"
குரோம்பேட்டைக்கு வந்தபோது மலை உண்டே தவிர மலைக்கு மேலே முருகன்கோவில் கிடையாது. மலைமீது செடி, கொடியாக புதர் மண்டியிருந்தது. குரோம்பேட்டை சாலைகளில் பக்தர்களுடன் நடந்து சென்ற "மகாபெரியவர்" மலையை பார்த்து விட்டு அப்படியே நின்றார். அண்ணாந்து பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டு வணங்கினார். இந்த மலைக்கு மேலே யாரும் போனதுண்டா? எனக்கேட்டபோது
"இல்லை பெரியவா.....விஷ ஜந்துக்கள் இருக்கும்னு போறதில்லை! மலை மேலே ஏறிப்போறதுக்கான சூழ்நிலையும் இதுவரை வந்ததில்லை" என்றனர். இனிமேல் வந்துடும் என்ற பெரியவர், உடன் இருந்த பக்தர்களிடம் "மலைக்கு மேலே முருகன் கோவில் ஒரு காலத்திலே இருந்திருக்கு! கூடிய சீக்கிரம் வழிபாட்டை ஆரம்பிங்கோ, என்று சொல்லியபடி அந்த நடமாடும் தெய்வம் நடந்தது.
ஆச்சர்யப்பட்ட குரோம்பேட்டை மக்கள், அடுத்த சில நாட்களில் திரளாக மலையேறி சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்தனர். மலை உச்சியில் கண்ட காட்சி வியப்பில் ஆழ்த்தியது. ஆம்! முருகன் வழிபாட்டில் பிரதானமாக விளங்கும் வேல் ஒன்று கிடைத்தது!!!
* குமரனாகிய முருகன் குடியிருக்கும் குன்றம் என்பதால் தலம், "குமரன் குன்றம்' என்றழைக்கப்படுகிறது. சித்திரை பிறப்பின்போது, இங்குள்ள 120 படிகளுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அன்று சுவாமி ஊஞ்சலில் எழுந்தருளுவார்.
* பிரார்த்தனை திருமண, புத்திர தோஷம் நீங்க இத்தல முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இங்குள்ள முருகன் வடக்கு திசை நோக்கியிருப்பதால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக இவருக்கு மங்கலப்பொருட்கள் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். எனவே இவரை பக்தர்கள், "ஐஸ்வர்ய முருகன்' என்றும் அழைக்கிறார்கள். நேர்த்திக்கடன்: முருகன், சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். தலபெருமை: மலைக்கோயில்களான திருநீர்மலை, திரிசூலம் ஆகிய தலங்களுக்கு மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் சித்தி விநாயகர், இடும்பன் சன்னதி இருக்கிறது. இங்குள்ள காளி, ஜெயமங்களதன்மகாளி என்றழைக்கப்படுகிறாள்.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...