* மூக்கும் முழியுமா இருக்கிற பெண்ணை விட, நாக்குக்கு நயமா சமைக்கிற பொண்ணு தான் ஆண்களுக்கு தேவை!.
* சுடுகாடு சுடுகாடுனு கேவலமா பேசதீங்க அங்க போறதுக்கு அவனவன் செத்துட்டு இருக்கான்.
* வீட்டுக்குள்ளே புருசனை வெளு வெளுன்னு வெளுத்தாலும், வெளியில் புருசனுக்கு பயப்படுற மாதிரி நடிக்குறதுல, தமிழச்சி எங்களை அடிச்சிக்க முடியாது
* உப்பு திண்ணா தண்ணி குடிச்சுதான் ஆகனும் -பழமொழி
கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகனும்-பது மொழி.
கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகனும்-பது மொழி.
* பட்டுச்சேலை கட்டினால் எல்லா பொண்ணுக்கும் எடுப்பா தான் இருக்கும்!
ஆனா அதை வாங்கித்தர புருசனுக்கு தான் கடுப்பா இருக்கும்.
ஆனா அதை வாங்கித்தர புருசனுக்கு தான் கடுப்பா இருக்கும்.
* நாம் அழுதால் நமக்கே பிடிக்காது.
நாம் கொஞ்சம் சிரித்தால் அந்த ஆண்டவனுக்கே பொருக்காது.
நாம் கொஞ்சம் சிரித்தால் அந்த ஆண்டவனுக்கே பொருக்காது.
* கவனிக்கப்படாமல் இறந்தவர்களுக்கு செய்யும் "திதியும்"
இறந்த பின் அரசாங்கம் தரும் "நிதியும்" பயனற்றது.
இறந்த பின் அரசாங்கம் தரும் "நிதியும்" பயனற்றது.
* வசதி இல்லாதவன் ஆடு மேய்க்கிறான்!
வசதி இருக்கிறவன் நாய் மேய்க்கிறான்!!
வசதி இருக்கிறவன் நாய் மேய்க்கிறான்!!
* என்னதான் நாம வேலை வெட்டியில்லாம இருந்தாலும், நமக்கு நாமே போன் பண்ணும்போது பிஸியாதான் இருப்போம்
* அதிர்ஷ்டம் அம்பாஸிடரில் ஏறி வந்தா, பிரச்சனை பிளைட் ஏறி வருது.
* கல்யாணம் ஆன பின் ஒன்னு அடி விழும்.
இல்ல, முடி விழும். அவ்ளோதாங்க வாழ்க்கை.
இல்ல, முடி விழும். அவ்ளோதாங்க வாழ்க்கை.
* காந்தி நாட்டுக்காக பாடு பட்டார்!
நாம காந்தி நோட்டுக்காக பாடுபடுறோம்
நாம காந்தி நோட்டுக்காக பாடுபடுறோம்
* கவர்மெண்ட் எக்ஸாம் லட்சம் பேர் எழுதுறாங்க. ஆனால் லட்சம் கொடுக்குறவங்க தான் செலக்ட் ஆகிறாங்க.
* இந்த உலகத்துல நல்லவங்க கெட்டவங்கனு யாரும் இல்ல. நமக்கு புடிச்சா நல்லவங்க!! புடிக்கலனா கெட்டவங்க.
* முட்டி மோதி வாழ்க்கையில முன்னேறலாம் என்று பார்த்தால் ஒரே முட்டுல கீழே தள்ளிவிட்டுறாங்க.
* வாழ்க்கை சிக்கல் வந்தா நக்கலா பாத்து சிரிக்கணும். புரியுதா?
* எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருந்தா பிரஷர் வரும்னு சொல்றாங்க எதையும் சாப்பிடலைன்னா அல்சர் வரும்னு சொல்றாங்க.
No comments:
Post a Comment