மாட்டுச்சாணம் உண்மையில் ஒரு கிருமி நாசினி என்பது நாம் அறிந்த ஒன்றே ஆனால் இது கடுமையான கதிர்வீச்சுக்களை தாங்கும் தன்மை உடையதா என்றால் நாம் அதை சிறிது சிந்திக்க வேண்டும்?
உண்மையில் உலகில் உள்ள அனைத்து இயற்க்கை கூறுகளும் அணுக்கதிர்வீச்சை உறிஞ்சும் தன்மை உடையவை ஆகும். காமா, ஆல்பா மற்றும் பீட்டா ஆகிய மூன்று கதிர்கள் தான் கதிர்வீச்சுகளின் போது முக்கியமாக கருதப்படும் கதிர்வீச்சுகளாகும்.
இவற்றில் பீட்டா மற்றும் ஆல்பா கதிர்கள் குறைந்த அளவு ஊடுருவும் திறன் உடையதாகும். ஆனால் காமா கதிர்களோ உடலில் உள்ள திசுக்கலையே சிதைக்கும் அளவுக்குத் திறனுடையவை ஆகும்.
இவ்வளவு செறிவு வாய்ந்த காமா கதிர்களை மாட்டு சாணம் தடுக்குமா?
ஆராய்சிகளின் படி காமா கதிர்களை தடுக்க வேண்டுமானால் காரியம் போன்ற அதிக நிறையுடைய உலோகங்களைக் கொண்டு குறைந்தப்பட்சம் 38 செ.மீ தடிமன் உள்ள சுவர் அல்லது 197 செ.மீ தடிமன் கொண்ட சிமெண்ட் சுவர் தேவைப்படுகிறது.

ஆனால் MHRD ல் விஞ்ஞானியாக உள்ள "உட்டம்" கூறுகையில் சாணத்தால் சுவரின் வெளியே ஒரு பூச்சு பூசும்போது அது காமா கதிர்களையும் தடுக்கும் தன்மை உடையது என்றார்.
சில ஆராய்ச்சியாளர்கள் மாட்டுச்சாணம் மற்ற கதிர்வீச்சுகளை உறிஞ்சும் தன்மையுடையது என்றாலும் அது காமா கதிர்களை உறிஞ்சும் தன்மையுடையது அல்ல என்றும் கூறுகின்றனர்.
மாட்டுச்சாணம் காமா கதிர்களை தாங்க வேண்டும் என்ற நமது சுவர் குறைந்தது 338 செ.மீ தடிமன் அளவுள்ள மாடுச்சாணத்தால் சுவர்வைக்க வேண்டும்.
முடிவு: சாணத்தை வீட்டின் சுவரில் பூசுவதால் அது அணுகதிர்வீசை தாங்கும் என்ற கூற்று முற்றிலும் தவறானது ஆகும். இது சாதாரண கதிர்வீச்சுகளை மட்டுமே தடுக்கும் திறனுடையவை ஆகும்.
பிறகு எதற்கு அந்த பூச்சு?
அக்காலக் கட்டத்தில் சிமெண்ட் கலவைகள் இல்லை மாறாக வெல்லம், கடுக்காய், மணல் மற்றும் சில மூலப்பொருட்களைக் கொண்டு தான் கோவில்கள் போன்றவற்றை கட்டினர்.
இந்த கலவையின் சிறப்பே இது வருடம் ஆக ஆக இதன் வலிமை அதிகரிக்கும்.
ஆனால் இது செலவு மிகுந்ததும் கலவைக்கு நேரம் அதிகமாக தேவைப்படுவதால் இதற்கு மாற்றாக மாட்டுச்சாணமும் செம்மண் அல்லது களிமண்ணை கொன்டு வீடுகளைக் கட்டினர்.
சாணம் கொண்டு பூசுவதால் மழையின் போது களிமண் அல்லது செம்மண் கரைவது முற்றிலும் தடுக்கப்படும் என்பதாலும் சாணம் கொண்டு சுவரில் பூச்சு பூசினார்கள்.

No comments:
Post a Comment