Sunday, August 5, 2018

மூட்டுக்கள் பலமடைந்து வலியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

உடல் அசைவுகளுக்கு மூட்டுகளின் இணைப்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். வயதாகும் போது மூட்டுகளில் உள்ள சவ்வுகள் தொய்வடையும். இதனால் சரியாக நடக்கவோ, சிறு பொருட்களை தூக்கவோ, ஏன் அசைய கூட முடியாது.
எனவே மூட்டுகளில் உள்ள இணைப்புத்திசுக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டியது அவசியம். இவைகளை தினமும் சாப்பிட்டு வாருங்கள். மூட்டுக்கள் பலமடைந்து வலியில் இருந்து விடுதலை கிடைக்கும்.
பாதாம்
பாதாம் மூட்டுகளின் வெளிப்புற சவ்வில் பாதிப்பு ஏதும் நேராமல் பாதுகாப்பு தரும். ஏனெனில் பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளது. இவை ப்ரீ ராடிக்கல்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும். தினமும் காலை, மாலை என இரு வேளையும் மும்மூன்று பாதாம் எடுத்துக் கொள்ளுங்கள். 3 மாதத்தில் வலி பறந்து விடும்.
பப்பாளி
பப்பாளி சாப்பிட்டால், சருமம் பொலிவுடன் மாறுவதோடு, மூட்டுகளும் ஆரோக்கியமாக இருக்கும். ஆய்வு ஒன்றில் வைட்டமின் சி குறைபாடு உள்ளவர்களுக்கு தான் மூட்டு சேதம் மற்றும் கீல்வாதம் போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது. இத்தகைய வைட்டமின் சி பப்பாளில் அதிகம் இருப்பதால், இதனை அன்றாடம் உட்கொண்டு வந்தால், மூட்டு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
ஆப்பிள்
ஆப்பிளில் க்யூயர்சிடின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக இருப்பதால், இவை மூட்டு வலி மற்றும் மூட்டுகள் சேதமடைவதைத் தடுக்கும். குறிப்பாக ஆப்பிளை தினமும் சாப்பிட்டால், மூட்டு வலியில் இருந்தே விடுபடலாம்.
கேல்
கேல் கீரையில் கால்சியம் அதிகம் உள்ளது. இவை மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கு உதவும். மேலும் இதில் உள்ள காப்பர், மூட்டுகளில் உள்ள தசைநார்கள் மற்றும் கொலாஜன்களை கட்டமைக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி இதில் இருக்கும் மாங்கனீசு மூட்டுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்து, இணைப்புத்திசுக்களின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
ப்ராக்கோலி
ப்ராக்கோலி சாப்பிட்டால், ப்ரீ ராடிக்கல்களால் மூட்டுகளில் ஏற்படும் பாதிப்புகள் குறையும். மேலும் இதில் கால்சியம் அதிகம் இருப்பதால், இவை மூட்டுகளை ஆரோக்கியமாக பராமரிக்கும்.
ஆலிவ் ஆயில்
சமையலில் ஆலிவ் ஆயில் சேர்த்து வருவதன் மூலம், அதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகளின் மூலம் மூட்டுகளில் ஏற்பட்டுள்ள வீக்கம் மற்றும் வலி குறையும்.
இஞ்சி
இஞ்சியில் ஜிஞ்சரோல் என்னும் மூட்டு வலி மற்றும் வீக்கத்திற்கான நிவாரணப் பொருள் உள்ளது. எனவே இஞ்சியை டீ செய்து தினமும் ஒரு கப் குடித்து வருவது நல்லது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...