Saturday, August 11, 2018

மனம்_திறந்த_அழகிரி.....

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்கள் மறைந்துவிட்டார்.
திமுக-வின் அடுத்த தலைவராக ஸ்டாலின் பதவியேற்பாரா அல்லது அதற்கு அழகிரி தடையாக இருப்பாரா என பல்வேறு ஊடகங்களும், அரசியல் பார்வையாளர்களும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், நம்மிடம் பேசிய திமுக-வின் முக்கிய நிர்வாகி ஒருவர் ஸ்டாலின் திமுக தலைவராக பதவியேற்க அழகிரி தடையாக அல்ல பக்கபலமாகவே இருப்பார் என தெரிவித்தார். 
கடந்த சில ஆண்டுகளாக ஸ்டாலினும் அழகிரியும் எதிரும் புதிருமாக இருந்த நிலையில், கருணாநிதி உடல்நலிவுற்றபோது அவரது மகள் செல்வி ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையில் இணைப்பு பாலமாக செயல்படத் தொடங்கியிருக்கிறார். முதலில் முரண்டு பிடித்த அழகிரி, கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, ஸ்டாலின் தன்னிடம் காட்டிய அன்பையும், கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க இடம் கிடைத்தபோது உடைந்து அழுததையும் உணர்ச்சிப் பொங்க தனது நெருங்கிய வட்டாரங்களில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
அப்போது, "அண்ணா நீங்கள் அஞ்சாநெஞ்சர். நீங்கள் தலைவராக முயற்சி எடுங்கள் நாங்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம்" என சிலர் கூறியிருக்கின்றனர்.
அதற்கு கோபமாக பதிலளித்த அழகிரி, "ஸ்டாலின் தலைவர் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறானோ அதே அளவுக்கு என் மீதும் அன்பு வைத்திருக்கிறான். அப்பா இறந்தபோது அவன் கதறி அழுததை என்னாலேயே தாங்கிக்கொள்ள முடியவில்லை.
நான் அஞ்சாநெஞ்சன் தான்.
ஆனால், #தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று தான் சொல்லியிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தலைவரே ஸ்டாலினைதான் கட்சியை வழிநடத்த ஏற்றவன் என சொல்லியிருக்கிறார். நான் என் தம்பிக்கு பக்கபலமாகவும் கட்சிக்கு தூணாகவும் விளங்குவேன். எல்லாவற்றுக்கும் மேலாக தலைவர் இறந்தபோது அரசியல் செய்த எதிரிகள் தலைவர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தை துண்டாட விட மாட்டேன்" என மடை திறந்த வெள்ளமாக கண்ணீருடன் கொட்டித் தீர்த்திருக்கிறார்.
எனவே, திமுக-வை பற்றி தேவையில்லாத விவாதங்களை அரசியல் எதிரிகள் கூறிதான் சில ஊடகங்கள் முன்னெடுத்து வருவதாக அந்த நிர்வாகி தெரிவித்தார்...
இந்த பெருந்தன்மை ஸ்டாலின் தரப்பிலும் இருந்தால் மகிழ்ச்சி.......

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...